என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
    X

    காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

    • காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
    • இருவரிடமிருந்து 1 கிலோ 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை ஒடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் தேனம்பாக்கம் வேதபாடசாலை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த செவிலிமேடு பகுதியை சேர்ந்த சபரி (வயது 26), தேனம்பக்கத்தை சேர்ந்த மதன் (22) ஆகியோரை அந்த வழியாக ரோந்து சென்ற தாலுகா போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரும் 1 கிலோ 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×