என் மலர்
காஞ்சிபுரம்
- நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் வந்தனர்.
- நண்பர்கள் 2 பேரும் விபத்தில் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆரணிசேரி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன். கருணாகரன். இவர்களில் பாலகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கண்ணாடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து டிராவல்ஸ் நடத்தினார். இதில் கருணாகரன் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் வந்தனர்.
பின்னர் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டு இருந்தனர். ஏனாத்தூர் வழியாக அங்குள்ள தரைப்பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதியது. இதில் பாலகிருஷணனும், கருணாகரனும் தூக்கி வீசப்பட்டனர்.
பாலத்தின் கீழே தேங்கி இருந்த தண்ணீரில் விழுந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கருணாகரன் பலத்த காயம்அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கருணாகரணை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருணாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிறந்த நாள்விழாவுக்கு சென்று திரும்பியபோது நண்பர்கள் 2 பேரும் விபத்தில் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் புறப்பட்ட தயாராக இருந்தது.
அதில் பயணம் செய்யவந்த பயணிகள் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆண் பயணி ஒருவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியை தனியாக அழைத்து விசாரித்தனர். அவரது பையை சோதனையிட்ட போது கட்டு, கட்டாக வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருந்தன.
மொத்தம் ரூ.97.46 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு நோட்டுகள் இருந்தன. இது பற்றி பயணியிடம் விசாரித்த போது பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.
- பட்டை தீட்டிய இடங்களே நாங்கள் கண்டறிந்த இந்த கற்குழிகளாகும்.
- அமரக்கல் குன்றானது மிகப்பெரிய பாறைகளை கொண்டதாக உள்ளது.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை தீட்ட பயன்படுத்திய இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதனை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் மற்றும் அவரது குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறிதாவது:-
சாலவாக்கம், எடமிச்சி காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள அமரக்கல்குன்று மற்றும் இரண்டு பாறைகளை களஆய்வு செய்தபோது, கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை பட்டை தீட்டிய வழவழப்பான கற்குழிகளை கண்டறிந்தோம்.
இது கி.மு.3 ஆயிரத்தில் இருந்து கி.மு. 10ஆயிரம் வரை இதன் காலம் இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
பழங்கால மனிதர்கள் முதலில் வேட்டைக்காக மரங்கள் மற்றும் எலும்புகளால் ஆன கருவிகளை பயன்படுத்தினர். அது பயன்பாட்டில் நாளடைவில் சிதைந்தும் அழிந்தும் போனது. இதற்கு மாற்றாக, நிலைத்து நிற்கக்கூடிய வகையில் எளிதில் சிதையாத கல் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அந்த ஆயுதங்கள் சொர சொரப்பாக இருந்தது இதனால் வேட்டையாடுவதிலும் பயன்படுத்துவதிலும் பல சிரமங்கள் தோன்றின. அதை களைவதற்காக வேட்டைக் கருவிகளை வழுவழுப்பாக பட்டை தீட்ட தொடங்கினார்கள்
அவ்வாறு பட்டை தீட்டவும் கூர் செய்வதற்கும் நீர் தேவைப்பட்டது. அதனால் நீர் தேங்கும் மலைப் பகுதிகளையும் பாறைகளையும் தேர்வு செய்தார்கள். ஆகவே நீர் தேங்கும் அளவிலான சுனைகளை கொண்ட இந்த அமரக்குன்று மற்றும் நீர் தேங்கும் வசதிகள் உள்ள இந்த பாறைகளை பயன்படுத்தி உள்ளார்கள். அவ்வாறு பட்டை தீட்டிய இடங்களே நாங்கள் கண்டறிந்த இந்த கற்குழிகளாகும்.
அமரக்கல் குன்றானது மிகப்பெரிய பாறைகளை கொண்டதாக உள்ளது. அதன் நடுவில் நீர் தேங்கும் பெரிய சுனை ஒன்று உள்ளது.அதன் அருகில் நான்கு இடங்களில் வெவ்வேறு அளவுகளில் வழவழப்பான குழிகள் இருப்பதை கண்டறிந்தோம்அதில் ஒரு குழி 21 சென்டி மீட்டர் நீளமும் 10 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. மேலும் வெவ்வேறு அளவுகளில் இரண்டு குழிகள் காணப்பட்டன அந்த குழிகளை ஆய்வு செய்த பொழுது அதுகற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்களை கூர்மை செய்ய அல்லது பட்டை தீட்டிய அடையாளம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவ்விடத்திற்கு அருகில் உள்ள இரண்டு பெரிய பாறைகளிலும் இதே போன்ற நீர் தேங்கும் சுனைகளும் அதற்கு அருகிலேயே பல்வேறு அளவுகளில் 9 இடங்களில் வழவழப்பான பல்வேறு குழிகளை கண்டறிந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
- ராமாபுரத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
ஆவடி பகுதியை சேர்ந்தவர் நலன்ராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரான்சி மோனிகா.
கடந்த 2-ந் தேதி காலை கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
மவுண்ட் பூந்தமல்லி சாலையில் வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மோனிகா கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ராமாபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்டது முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (19) என்று தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.






