என் மலர்
நீங்கள் தேடியது "corona update"
- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,912-ல் இருந்து 6,677-ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 616-ல் இருந்து 607-ஆக குறைந்தது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
அதன்படி ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 1,359-ல் இருந்து இன்று 1,382-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,912-ல் இருந்து 6,677-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 617 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 616-ல் இருந்து 607-ஆக குறைந்தது. அதன்படி, செங்கல்பட்டில் 240, கோவையில் 89, திருவள்ளூரில் 83, காஞ்சிபுரத்தில் 66, தூத்துக்குடியில் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
- பரிசோதனையில் மேற்கொண்டதில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
அங்குள்ள மொத்தம் 235 மாணவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து துணைப்பதிவாளர் கூறியதாவது:-
கொரோனா பரவலால் ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும்வரை பயிற்சி நிறுவனம் மூடப்படும்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் விடுதியை உடனே காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.