search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 கிராம பஞ்சாயத்துக்களில் இன்று சிறப்பு முகாம்
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 கிராம பஞ்சாயத்துக்களில் இன்று சிறப்பு முகாம்

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தேவையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்தல், சிறு தொழில் செய்ய விரும்பும் முனைவோர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 பஞ்சாயத்துக்களில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துக்களில் சிறப்பு முகாம் இன்று (7-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம் சிறுகாவேரிப்பாக்கம், கோனேரிக்குப்பம், ஆசூர், தாமல், திம்மசமுத்திரம், அத்திவாக்கம், ஏனாத்தூர், வாரணவாசி, இலுப்பப்பட்டு, பழையசீவரம், ஐமச்சேரி, கட்டவாக்கம், கொட்டவாக்கம், முத்தியால்பேட்டை, அரும்புலியூர், திருவானைக்கோவில், பெருநகர், காரனை, ஒழையூர், சாலவாக்கம், சிறுதாமூர், கம்மாளம்பூண்டி, ராவத்தநல்லூர், மொளச்சூர், பிச்சிவாக்கம், சந்தவேலூர், கிளாய், மேல்மதுரமங்கலம், செங்காடு, துளசாபுரம், வெங்காடு, கொளத்தூர், வரதராஜபுரம், ஐயப்பந்தாங்கல், கோவூர், ஆதனூர், கெருகம்பாக்கம் ஆகிய பஞ்சாயத்துக்களில் நடைபெறுகிறது.

    முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தேவையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பட்டா மாறுதல், சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பி.எம்.கிசான் கடன் அட்டை (கே.சி.சி.) விண்ணப்பம் பெறுதல், பயிர் காப்பீடு பதிவுகள் மேற்கொள்ளுதல், பயிர் கடன் விண்ணப்பம் பெறுதல், நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்தல், சிறு தொழில் செய்ய விரும்பும் முனைவோர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×