என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, சென்னை விமானநிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க,புறப்பட 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3.66 கி.மீட்டரும், 2-வது ஓடுபாதை 2.89 கி.மீட்டரும் உள்ளது.

    இதில் முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் பயன்படுத்தப்படுகின்றன. 2-வது ஓடுபாதையில் 76 பயணிகள் பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இதில் விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2-வது ஓடுபாதை பகுதி அருகே கொளப்பாக்கம் பகுதியில், உயா்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள்,செல்போன் டவா்கள் போன்ற தடைகள் அதிகம் இருப்பதால், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.

    தற்போது அவ்வப்போது முதல் ஓடுபாதையில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போதும், செவ்வாய்,சனி பிற்பகலில் வாராந்திர பராமரிப்பு நடக்கும் போது மட்டும், 2-வது ஓடுபாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் இயக்க முதல் ஓடுபாதை அளவுக்கு, 2-வது ஓடுபாதையின் நீளத்தை அதிகரிக்க இந்திய விமானநிலைய ஆணையம் ஏற்கனவே முடிவு செய்து இருந்தது.

    இதற்காக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய மாநில அரசிடம் தேவையான நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும்படி கேட்டது. ஆனால் அப்போதைய அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்கவில்லை. அதோடு சென்னை அருகே ரூ.40 ஆயிரம் கோடியில் 2-வது விமான நிலையம் கட்டப்பட இருப்பதால் 2-வது ஓடுபாதையை நீட்டிக்கும் திட்டத்தை விமானநிலைய ஆணையம் கைவிட்டு விட்டது.

    இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சா்வதேச விமானங்களின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, சென்னை விமானநிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

    அதன்படி, முதல் பிரதான ஓடுபாதையை விமானங்கள் புறப்பாட்டிற்காகவும், 2-வது ஓடுபாதையை, விமானங்களை தரை இறக்கவும் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமி டப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்க விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்காக, சென்னை விமானநிலைய போக்கு வரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும், விமானங்களை இயக்குவது குறித்த பயிற்சி முடிந்ததும், அவற்றை முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் 2 ஓடுபாதை களையும் நிரந்தரமாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் தற்போது, பிரதான முதல் ஓடுபாதையில், ஒரு மணி நேரத்தில், 30-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2 ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, 50-க்கும் அதிகமான விமானங்களை ஒரு மணி நேரத்தில் இயக்க முடியும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினா்.

    விமானங்கள் விரைந்து வர இதேபோல் விமானநிலையத்தில் தரைஇறங்கும் விமானங்கள்,விரைந்து விமானங்கள் நிற்கும் நடைமேடைக்கு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை விமான நிலையத்தில், தரையிறங்கும் விமானங்கள், ஒரு ஓடு பாதையில் இருந்து, மற்றொரு ஓடு பாதைக்கு விரைவாக செல்ல, 'டாக்சி வே' எனும் இணைப்பு பாதை பயன்படுத்தப்படுகிறது. இந்த டாக்சி வே 'பி' என்ற 'பிராவோ', முதல் ஓடுபாதைக்கு, நேராக செல்லா மல், வளைந்து செல்லும் வகையில் இருந்தது.

    இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள், டாக்சி வேயில் விரைவாக செல்ல முடியாத நிலை இருந்தது.

    இந்த டாக்சி வே 'பி'யை நேர்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது.

    எனவே இனிமேல் விமானங்கள் தரை இறங்குவது, புறப்படுவது மேலும் வேகமாக இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்தனர்.
    • இதுகுறித்து ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அவகாசம் அளித்து இருந்தனர். எனினும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், சன்னிதி தெருவில், பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக, பல கடைகள் உள்ளன. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அகற்றினாலும், மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்தனர்.

    இதுகுறித்து ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அவகாசம் அளித்து இருந்தனர். எனினும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

    இதையடுத்து மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    இதேபோல் வடக்கு மாடவீதியில் நடைபாதையில் உள்ள கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • காமாட்சி அம்மனை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
    • கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் முன்புறம் பல ஆண்டுகளுக்கு மேலாக பழக்கடை, பூக்கடை, வளையல்கடை, குங்குமம், விபூதி, மஞ்சள்தூள், மாலை, தேக்காய் கடைகளை நடத்தி வருகின்றனர் .

    காமாட்சி அம்மனை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்த நெரிசலை குறைக்க மாவட்ட கலெக்டர் டாக்டர் மா. ஆர்த்தி கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றினர்.

    அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் கடைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13602 பேர் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
    • மாணவர்களை விட மாணவிகள் 12.24 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மே 2022ல் நடைபெற்ற 11ம்வகுப்பு பொதுத்தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6730 மாணவர்களும், 6872 மாணவிகளும் என மொத்தம் 13602 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

    பொதுப் பாடத் தேர்வில் 13070 மாணவ, மாணவிகளும், தொழில் பாடப்பிரிவில் 532 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.

    இதில், 12004 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சராசரியாக 88.25 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 82.07, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.31 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 12.24 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாண்டு மாவட்டத்தின் தரம் 24வது இடத்தில் உள்ளது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
    • மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்து சிறப்பாக பணிப்புரிந்த முதுநிலை ஆசிரியர்கள் ஜனகரன், தனபால், வெற்றிச்செல்வி, பிரமிளா குமாரி, குமாரி ஆகிய 5 முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது.

    அனைத்துத் துறைகளிலும் பொதுமக்கள் பயன் பெற கூடிய வகையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் ஒன்றியத்தில் பட்டா இல்லா இடங்களில் வசிப்பவர்கள் புதிய மின் இணைப்புகள் வழங்க பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் தக்க நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மின் இணைப்புகள் வழங்கிட ஆவன செய்யப்படும்.

    தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் வாக்குறுதிகளாக தரப்பட்டன அதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் சட்டமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்து இன்று மக்கள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். நமது பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி இந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே நமது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரூ.77.49 கோடி மதிப்பில் 22251 ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்து கொடுத்துள்ளார் நமது முதல்வர்.

    தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.2756 கோடி மதிப்பில் மகளிர் பெற்றுள்ள கடன் தொகையை ஒரே உத்தரவில் முதலமைச்சர் தள்ளுபடி செய்துள்ளார். தற்போது பால் விலை, பெட்ரோல் விலை ஆகியவை குறைக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமில்லாமல் பெண்களின் வாழ்வு மேம்படுத்துவதற்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து அதை சட்டமாக்கி மேலும் பெண்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள ஆணை வழங்கிய இந்திய திருநாட்டில் ஒரே முதல்வர் நமது முதல்வர். மேலும் அனைத்து பகுதிகளிலும் மேம்பாலம் பணிகள், சாலைகள் சீரமைப்பு பணிகள், கட்டமைப்பு வசதிகள் போன்றவை விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்பதற்காக இன்றைக்கு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த அரசுக்கும் நமது முதல்வருக்கும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தர வேண்டும் என இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். இன்றைய தினம் இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுக்கள்.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் (உத்திரமேரூர்) சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் க.தேவேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஸ்ரீதேவி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் சேகர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பாசறை பயிற்சி கூட்டம் நகர செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமணம் மண்டபத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பாசறை பயிற்சி கூட்டம் நகர செயலாளர் சன்பிராண்ட். கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக்,மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல் பயிற்சி பாசறை குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், நகர இளைஞரணி அர்ஜூன் உள்ளிட்ட ஏராளமான இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்

    • காரில் ரகசிய அறை அமைத்து 60 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
    • 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    ஆந்திரா மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், கீழம்பி பகுதியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் ரகசிய அறை அமைத்து 60 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து காரில் இருந்த தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

    • 764 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
    • விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், முதல்வரின் ஆணைக்கிணங்க 22-12-2021 அன்று இதே இடத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 1195 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இன்று 764 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக பெறப்பட்ட மனுக்களில் 119 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு ரூ.8.71 கோடி செலவில் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

    விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் க.தேவேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
    • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    காஞ்சிபுரம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் கடன் திட்டங்கள் வாயிலாக கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது.

    ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பயனாளிக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.

    ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம். டாப்செட்கோ கடன் திட்டங்களில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    எனவே, மேற்படி திட்டங்களில் பயன்பெற விரும்பும் இந்த மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளையும் அணுகி, விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, கடன் உதவி பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    • மோகன் தன்னுடைய வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்கநகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த சந்தவேலூர் ஊராட்சிக்குட்பட்ட சித்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் மோகன் (வயது 70). இவரது மனைவி புஷ்பா (60).

    மோகன் தன்னுடைய வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மோகன் திடீரென எழுந்து பார்த்தபோது அறையில் துணிகள் மற்றும் பாத்திரங்கள் கலைந்து காணப்பட்டது. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்கநகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இது தொடர்பாக மோகன் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
    • தட்டச்சு கணினி தொழிநுட்ப சான்றிதழ் மற்றும் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின்கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Asst. cum Data Enty Operator) பணியிடத்தை முற்றிலும் தற்காலிகமாக ஓராண்டு கால ஒப்பந்தத்தின்பேரில் மாதம் 9000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

    இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் தட்டச்சு கணினி தொழிநுட்ப சான்றிதழ் மற்றும் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

    மேற்கண்ட தகுதிகளைப் பெற்று விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட இணையதள முகவரியில் (https://kancheepuram.nic.in/) பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சம்பந்தமான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஜூலை 15ம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, "மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.317, காமாட்சி நிலையம், கே.டி.எஸ்.மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம்-631502" என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

    ×