search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜாபாத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்
    X

    வாலாஜாபாத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்

    • 764 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
    • விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், முதல்வரின் ஆணைக்கிணங்க 22-12-2021 அன்று இதே இடத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 1195 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இன்று 764 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக பெறப்பட்ட மனுக்களில் 119 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு ரூ.8.71 கோடி செலவில் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

    விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் க.தேவேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×