என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • எம்.பி.சி., எம்.சி.எம்., ஒ.பி.சி., ஒ.சி. பிரிவினர் 40 வயத்திற்குட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.600), 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ரூ.750) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ரூ.1000) வீதம் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மைய அலுவலகத்தில் மேற்காணும் கல்வித் தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்).

    பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எம்.பி.சி., எம்.சி.எம்., ஒ.பி.சி., ஒ.சி. பிரிவினர் 40 வயத்திற்குட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.

    விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்றிருக்கக் கூடாது. தினசரி மாணவராக பயின்று வருவோருக்கு உதவித் தொகை பெற தகுதியில்லை.

    அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

    மேலும் தகவலுக்கு அலுவலக தொலைப்பேசி எண்- 044-27237124யை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா.

    போரூர்:

    நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா, பிசியோதெரபிஸ்ட்.

    இவர் நேற்று இரவு வீட்டின் அருகே சாலையில் நடந்தபடியே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென கார்த்திக் ராஜாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டான்.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
    • உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 10 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் குவிந்து இருந்தனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் சுப்பராயன் உள்பட 6 பேர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 4,510 வாக்காளர்களில் 2,597 பேர் வாக்களித்து இருந்தனர். 57.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    ஆரம்பம் முதலே தி.மு.க. வேட்பாளர் சுப்பராயன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அவர் மொத்தம் 1759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் வேணுகோபால் 568 வாக்குகள் பெற்று இருந்தார். தி.மு.க.வேட்பாளர் சுப்பராயன் 1191 அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

    இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 உறுப்பினர்களில் தி.மு.க. கவுன்சிலர்களின் பலம் 34 ஆக அதிகரித்து உள்ளது. அ.தி.மு.க.-8, பா.ம.க.-2, பா.ஜனதா-1, சுயேட்சைகள்-6 உறுப்பினர்கள் உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் 15-வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.சார்பில் சுதா உள்பட 6 பேர் களத்தில் இருந்தனர். ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் சுதா முதல் சுற்றில் 478 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் யோகசுந்தரி 311 வாக்குகளும் பெற்று உள்ளனர்.

    இதேபோல் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் கிராம ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக வேணி கண்ணன் வெற்றி பெற்றார். பதிவான 603 ஓட்டுகளில் அவர் 368 வாக்குகள் பெற்று இருந்தார். 4 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.சார்பில் சேகா் உள்பட 7 பேர் போட்டியிட்டனர். இதில் அதிக வாக்குகள் பெற்று தி.மு.க.வேட்பாளர் சேகர் வெற்றி பெற்றார்.

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினராக சீத்தாராமன் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் உள்ள 259 வாக்குகளில் 152 வாக்குகள் பெற்று இருந்தார். 3 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

    சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினராக செல்வன் வெற்றி பெற்றார். பதிவான 509 வாக்குகளில் 187 ஓட்டுகள் பெற்று இருந்தார்.

    பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினராக தி.மு.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 329 ஓட்டுகளில் அவர் 161 வாக்குகள் பெற்று இருந்தார். 7 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

    உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 பேருக்கும், பென்னலூர் கிராமத்தில் 7 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 261 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் பரந்தூர் மண்டல சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 பேருக்கும், பென்னலூர் கிராமத்தில் 7 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

    • ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம், பகுதிகள் காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர்,

    தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
    • பென்னலூர் கிராமத்தில் 7 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 261 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில் காஞ்சிபுரம் வட்டம், பரந்தூர் மண்டலம் சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 நபர்களுக்கும், ஸ்ரீபெருமந்தூர் வட்டம் பென்னலூர் கிராமத்தில் 7 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வழியாக ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டனர்.
    • வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், சிவன் தாங்கல், தில்லை நடராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார்.

    இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது வீட்டில் 18 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் திருடப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    இது பற்றி மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் வந்த பிறகே வேறு என்ன பொருட்கள் எல்லாம் திருட்டு போனது என்பது தெரியவரும். அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • மதுரவாயல், கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்(வயது27).தொழிலாளி.
    • மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    மதுரவாயல், கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்(வயது27).தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 4நாட்களுக்கு முன்பு சித்ராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சித்ராவின் உறவினருடன் சதிஷ்குமாருக்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சித்ரா கணவருடன் கோபித்துக் கொண்டு செவ்வாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன வேதனை அடைந்த சதிஷ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரும்பாக்கம் பிரகதீஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்.
    • விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அரும்பாக்கம் பிரகதீஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனபிரியா

    கணவன்-மனைவி இருவரும் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென தனபிரியா அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தனபிரியா புகாரின் பேரில் விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7 ஆண்டுகளாக வனமகோத்சவ விழா சிறப்பாக கொண்ட்டாடப்பட்டு வருகிறது.
    • காடு செழித்தால் நாடு செழிக்கும் என்ற நோக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சூழல் மன்றத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    தேசிய வன மகோத்சவ விழாவை முன்னிட்டு வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சுழல் மன்ற மாணவ- மாணவியர் சார்பில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், காடு செழித்தால் நாடு செழிக்கும் என்ற நோக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனை, அரசு மருத்துவ மனை, இரயில் நிலையம், வட்டார கல்வி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் நிழல் தரும் மரக் கன்றுகள் நடப்பட்டன.

    அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் செய்திருந்தார். அவர் தொடர்ந்து பேசும் போது இப்பள்ளியில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வனமகோத்சவ விழா சிறப்பாக கொண்ட்டாடப்பட்டு வருகிறது. இதுவரை பதினைந்தாயிரம் மரக்கன்றுகளும், ஐயாயிரம் விதைப்பந்துகளும் இப்பள்ளி வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 249 குறுவட்டங்களில் 200 ஆதி திராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • நீர் விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ. 20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

    தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் பேரவையில் அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.

    அரியலுர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 249 குறுவட்டங்களில் 200 ஆதி திராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    249 சம்பந்தப்பட்ட பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள பயனாளிகள் அந்தந்த மாவட்டத்தின் வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலர்களை அணுகலாம்.

    இத்திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்றவாறு, குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அரசு வெளியிட்ட ஆணையின்படி, 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கும் 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3 இலட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ. 75 ஆயிரமும், நீர் விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ. 20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2.50 இலட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றாலோ, அதற்கான கூடுதல் செலவினை விவசாயிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இத்திட்டத்திற்கான இதுவரை விவசாயிகளை கண்டறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பெரிய விவசாயிகளைப் போல, சிறு மற்றும் குறு ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தினை அணுகலாம்.

    காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி செயற்பொறியாளர் , 487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 35,

    வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம்,பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் - 631502 அலைபேசி எண் : 044-24352356 கைபேசி எண் : 9003090440 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரிக்கரை பகுதியில் வசிப்பவர் பாக்யராஜ் என்கிற பார்கவி (வயது38).
    • அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரிக்கரை பகுதியில் வசிப்பவர் பாக்யராஜ் என்கிற பார்கவி (வயது38). திருநங்கை. இவர் அதே பகுதியில் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகே திருநங்கை பார்கவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரது உடலில் அரிவாளால் வெட்டியதற்கான பலத்த காயங்கள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்கவியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் பார்கவியை வெட்டி கொல்ல முயன்று இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் திருநங்கை பார்கவியின் காதலன் அவரது வீட்டின் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    ×