என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளச்சித் தேர்தலையொட்டி மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.
    ஈரோடு, பிப்:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளச்சித் தேர்தலையொட்டி மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.

    ஈரோடு மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில், ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள், 4 நகராட்சியில் 102 வார்டுகள், 42 பேரூராட்சிகளில் 630 வார்டுகள் என 792 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும், 19-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக, 1,251 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மாநகராட்சியில் ஒருவர், பேரூராட்சிகளில் 20 பேர் என 21 பேர் போட்டியின்றி தேர்வாகி 771 வார்டுகளுக்கு மட்டும் 1,221 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடக்கிறது. இருப்பினும், 1,251 ஓட்டுப்பதிவு எந்திரம் (இ.வி.எம்.) அவற்றுடன் இணைக்க 2,502 கட்டுப்பாட்டு கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
    இக்கருவிகள் கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய இணையதளத்தில் இந்த எந்திரங்களை சுழற்சி முறையில் தேர்தல் நடத்தும் பகுதிக்கு தேர்வு செய்து வைத்துள்ளனர்.

    இன்று கருங்கல் பாளையம் காமராஜர் பள்ளியில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. இதனை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் பார்வையிட்டார்.
    அடுத்த 2 நாட்களில் இ.வி.எம்.களில் பொருத்தும் பணி நடக்க உள்ளது. அவற்றை பொருத்திய பின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று போலீசார் கொடி அணி வகுப்பு நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று போலீசார் கொடி அணி வகுப்பு நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளிலும், 42 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
     
    இதையடுத்து மாவட்டம் முழுவதும் தேர்தல் வாக்குப் பதிவுக்காக 401 இடங்களில் 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாவட்டம் முழுவதும் 184 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 

    இந்த வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  பொதுமக்கள் தேர்தல் நாளில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம்.

    அதன்படி ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஈரோடு டவுண் சப்-டிவிசனில் உள்ள கருங்கல்பாளையம், சூரம்பட்டி, டவுன், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா, ஈரோடு மகளிர் போலீஸ் ஆகிய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலமானது கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி காவிரி ரோடு, கே.எம்.கே.ரோடு, மூலப்பட்டறை வழியாக பவானி ரோட்டில் முடிவடைந்தது.

    இதேபோல் சத்தியமங்கலத்திலும் போலீசார் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது. சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த அணி வகுப்பில் 50-க்கு மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கோபி, பெருந்துறை, பவானி, சென்னிமலை, புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
    நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடை விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் மேலாளர் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடை விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் மேலாளர் தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி என 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வரும்  19&ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. 

    தேர்தல் அமைதியான முறையில் நடக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    அதன்படி வரும் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 3 நாட்களுக்கும், ஓட்டு எண்ணிக்கை நாளான 22-ந் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. 

    ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடக்கும் பகுதியில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வரும் 179 டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் வரும் 17-ந் தேதி காலை 10 மணி முதல் 19-ந் தேதி இரவு 12 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதுபோல, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரும் 22-ந்  தேதி அன்றும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் பகுதியில் இருந்து, 5 கி.மீ., சுற்றளவுக்குள் வரும் 57 டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை பின்பற்றி மதுபான கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும். 

    அதனை மீறி விற்பனை நடந்தால், கடை பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் - நகை கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து பணம்- நகை கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பம் பாளையம், யூ.ஆர்.சி. நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வன் (வயது 59). சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதேபோல் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பன்னீர்செல்வன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு சென்னிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். 

    மீண்டும் நேற்று பன்னீர்செல்வன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    உடனே உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. 

    வீட்டு அறையில் இருந்த பீரோவை பார்த்த போது அதில் இருந்த 4 பவுன் தங்க வளையல்கள், ஒரு பவுன் தங்க கம்மல்மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. 

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பன்னீர் செல்வன் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரங்களை பயன்படுத்த வேண்டும்  என்று வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

    வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி கூறியதாவது:


    ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்கள் உட்பட 556 உர விற்பனை நிலையத்தில் உரங்கள் விற்பனை செய்யப் படுகின்றன. மாவட்டத்தில் யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நவரை நெல், பயறு வகைகள், எள் ஆகிய பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    ஈரோடு மாவட்டத்திற்குத் தேவையான யூரியா உரம் பல்வேறு உர உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு, கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னையிலிருந்து ரெயில் மூலம் கடந்த 10-ந் தேதி எம்.எப்.எல் நிறுவனத்தின் 1,204 மெட்ரிக் டன் யூரியா உரம் ஈரோடு வந்தடைந்தது. மேலும் 11-ந் தேதி மங்களூரிலிருந்து ரெயில் மூலம் ஐ.பி.எல் நிறுவனத்தின் 1,300 மெட்ரிக் டன் யூரியா உரம் ஈரோடு வந்தடைந்தடைந்துள்ளது.

    உரங்களின் விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படி வைப்பது, உரிய முதன்மைச் சான்று படிவங்களை நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்முதல் செய்வது, விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, 

    அனைத்து விற்பனை களையும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற அனைத்து உர விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985&ன் படி கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும். இதனை வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வட்டார வேளாண்மை அலுவலர்கள் (உர ஆய்வாளர்கள்) தீவிரமாக கண்காணிக்க உத்திரவிடப் பட்டுள்ளது.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 4137 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 843 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1087 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 4490 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  

    விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரப்பரிந்துரைக்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    விவசாயிகள் உரங்களை வாங்கும் போது மூட்டையில் அச்சடிக்கப்பட்ட விலையினை பார்த்து உரிய ரசீது பெற்று உரங்களை வாங்கி பயன்பெறு வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தேர்தல் பிரசார வாகனங்களுக்கு போலீஸ் நிலையங்களில் முறையாக விண்ணப்பித்து பிரசார வாகனத்திற்கு அனுமதி பெற வேண்டும் என தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    தேர்தல் பிரசார வாகனங்களுக்கு  போலீஸ் நிலையங்களில் முறையாக விண்ணப்பித்து பிரசார வாகனத்திற்கு அனுமதி பெற வேண்டும் என தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    வாக்கு சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

    இது குறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. அண்ணாதுரை கூறியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளலாம் எனவும், பிரசாரத்திற்காக வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டி யிடும் வேட்பாளர்கள் அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் முறையாக விண்ணப்பித்து பிரசார வாகனத்திற்கு அனுமதி பெற வேண்டும். 

    இதுதவிர கட்சியின் தலைவர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரத்திற்கு நகராட்சி என்றால் டி.எஸ்.பி. அலுவலகங்களிலும், மாவட்டம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவ லகத்தில் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும்.

    பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணி க்கையும், வேட்பாளரின் விவரங்களையும் கட்டாயம் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

    அனுமதி பெற விண்ணப்பிக்கும்போது, வேட்பாளர் பெயர், அவர் போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் வார்டு எண், பிரசார மேற்கொள்ளும் நாட்களின் எண்ணிக்கை, வாகனத்தின் ஆர்.சி.,புத்தகம், பர்மிட், இன்சூரன்ஸ், புகை பரிசோதனை சான்றிதழ், வாகனத்தின் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடு மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 13 புகார்கள் வந்துள்ளதாக கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடு மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 13 புகார்கள் வந்துள்ளதாக கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் ஒரு வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளதால் 59 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 
     
    தற்போது தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இது ஒருபுறமிருக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    நகராட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்க பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்கல், தேர்தல் விதி மீறி அதிகமான பணம், இடம் விட்டு இடம் மாறுதல் போன்ற புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும், ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 13 புகார்கள் வந்துள்ளது. அளவுக்கு அதிகமான இரைச் சலுடன் மேளதாளத்துடன்  செல்வது, கூட்டம் கூட்டமாக ஓட்டு கேட்டு செல்வது, அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் வைப்பது போன்ற புகார்களே இதுவரை வந்துள்ளது. 

    இதன் அடிப்படையில் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவை சரி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என தேர்தல் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் கூறினர்.
    சத்தியமங்கலத்தில் வாழை தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த கரட்டூர் மாமரத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜீ. இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் தோட்டத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 700 வாழைகள் பயிரிட்டுள்ளார். இந்த வாழைகள் நன்றாக வளர்ந்து காணப்பட்டது. இந்த தோட்டத்தின் மைய பகுதியில் மின்சார டிரான்ஸ் பார்மர் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அவரது தோட்டத்தில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு வாழைகள் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜீ மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடிய வில்லை. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் போராடி தீயை அணைத்தனர். ஆனால் இதில் சுமார் 400 வாழைகள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த டிரான்ஸ்பார்மர் மூலம் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் இன்று 2-வது நாளாக ஏராளமான கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
    சத்தியமங்கலம்:

    தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.

    இதேபோல் பண்ணாரி சோதனை சாவடி பகுதியிலும் 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இன்று காலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து விடிய, விடிய காத்திருந்த வாகனங்கள் புறப்பட்டது.

    ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் திரண்டு வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் மற்றும் கார்கள், ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் அவர்களுக்கு தனியாக வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    பண்ணாரி பகுதியில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பண்ணாரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை சாகுபடி, வாழைக்காய் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அவர்கள் இந்த பகுதியில் விளையும் மல்லிகை, வாழைக்காயை சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பண்ணாரி பகுதியில் ஏற்படும் நெரிசல் காரணமாக சரியான நேரத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதால் கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சரியான நேரத்திற்கு டவுன் பஸ்கள் வர முடியாததால் மாணவ-மாணவிகளும் அவதி அடைந்து வருகின்றனர். அதோடு இல்லாமல் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, பண்ணாரி சோதனை சாவடியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 2 நாட்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைக்கு கூட உடனடியாக செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே அரசு இந்த பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பண்ணாரி சோதனை சாவடி வழியாக 1383 வாகனங்கள் சென்றுள்ளது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.56,430 நுழைவு கட்டணமாக வசூலிக்கப் பட்டது.
    ஈரோடு மாவட்டம் சிவகிரியில் அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் அடுத்த முத்துகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சந்தர்ராஜன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் கொடுமுடி ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    இவரது வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இவருக்கு சொந்தமான தோட்டம் மற்றும் பண்ணை வீடு உள்ளது. தோட்டத்தை சுற்றி கம்பி வேலி மற்றும் சுற்று சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் நுழைவு வாயில் பகுதியில் இரும்பு கதவு போடப்பட்டு உள்ளது.

    சுந்தர்ராஜன் தனது வீட்டில் இருந்து தினமும் பண்ணை வீட்டுக்கு சென்று அங்கு தோட்ட வேலைகளை கவனித்து வந்தார். பின்னர் அவர் இரவில் வீட்டுக்கு வந்து விடுவார். இந்த பண்ணை வீட்டில் ஆறுமுகம் என்பவர் தங்கி தோட்ட வேலைகளை கவனித்து வருகிறார்.

    ஆறுமுகம் இரவில் பண்ணை வீட்டின் முன் பகுதியில் படுத்து கொள்வார். வழக்கம் போல் ஆறுமுகம் இரவில் சாப்பிட்டு விட்டு பண்ணை வீட்டின் முன்பு தூங்கி கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் அதிகாலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு ஆறுமுகம் எழுந்து பார்த்தார். அப்போது பண்ணை வீட்டில் உள்ள கதிர் அடிக்கும் களம் மற்றும் தோட்டத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட இரும்பு கதவு பகுதி தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது குறித்து சுந்தர்ராஜனுக்கு தகவல் கொடுத்தார். மேலும் இது குறித்து சிவகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தோட்டத்துக்கு வந்த மர்ம நபர்கள் தோட்டத்தில் உள்ள இரும்பு கதவு மற்றும் கதிர் அடிக்கும் களம் ஆகியவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசி யதும், தூங்கி கொண்டு இருந்த ஆறுமுகம் வருவதற்குள் அவர்கள் தப்பி சென்றதும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் துப்பறியும் மோப்ப நாய் பவானி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீவானந்தம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆறுமுகத்தினர் விசாரணை நடத்தினர்.

    மேலும் இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து துப்பு துலக்க பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் முதல்கட்ட விசாரணையில் பண்ணை வீட்டில் பொருத்தியிருந்த கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமிராக்கள் செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 
    ஈரோடு மாநகராட்சி 39- வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. பெண் வேட்பாளர் கீதாஞ்சலி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோட்டில் காலை 6 மணி முதலே வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில வேட்பாளர்கள் நூதன முறையில் வித்தியாசமான அணுகு முறையால் பொதுமக்களை ஈர்த்து வருகின்றனர்.

    ஈரோடு மாநகராட்சி 39- வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. பெண் வேட்பாளர் கீதாஞ்சலி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் வீடு, வீடாக பெண்களின் சமையல் அறைக்கே சென்று ஓட்டு கேட்டு வருகிறார். அப்போது காய்கறிகளையும் வெட்டி கொடுத்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு வருகிறார். வயதில் மூத்தோர்களின் கால்களில் விழுந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் நிஷாந்த கிருஷ்ணா கலந்து கொண்டு பேசினார்.
    ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் நிஷாந்த கிருஷ்ணா கலந்து கொண்டு பேசினார்.

    ஈரோடு மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். 

    அப்போது அவர் பேசியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலம், 4 நகராட்சியில் தலா 3 மண்டலங்கள், 42 பேரூராட்சிகளில் 44 மண்டலங்களாக  பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல அலுவலர்களின் பணி மிக முக்கியமானது. 

    தங்கள் மண்டலங்களில் உள்ள ஓட்டுச்சவாடிகளில் அடிப்படை வசதி, சுகாதார வசதிகள் முறையாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகளையும், அதனை கையாளுவது குறித்தும் முறையான பயிற்சி பெற்று  அறிந்திருக்க வேண்டும்.

     ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், தளவாட பொருட்கள் எடுத்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். 

    ஓட்டுப்பதிவு நாளன்று ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் இருந்து ஓட்டுப்பதிவு நடக்கும் மையத்துக்கு உரிய பாதுகாப்புடன் எடுத்து சென்று திறம்பட தேர்தலை நிறைவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.





    ×