என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் பார்வையாளர் நிஷாந்த்கிருஷ்ணா பேசிய காட்சி.
    X
    தேர்தல் பார்வையாளர் நிஷாந்த்கிருஷ்ணா பேசிய காட்சி.

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் நிஷாந்த கிருஷ்ணா கலந்து கொண்டு பேசினார்.
    ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் நிஷாந்த கிருஷ்ணா கலந்து கொண்டு பேசினார்.

    ஈரோடு மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். 

    அப்போது அவர் பேசியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலம், 4 நகராட்சியில் தலா 3 மண்டலங்கள், 42 பேரூராட்சிகளில் 44 மண்டலங்களாக  பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல அலுவலர்களின் பணி மிக முக்கியமானது. 

    தங்கள் மண்டலங்களில் உள்ள ஓட்டுச்சவாடிகளில் அடிப்படை வசதி, சுகாதார வசதிகள் முறையாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகளையும், அதனை கையாளுவது குறித்தும் முறையான பயிற்சி பெற்று  அறிந்திருக்க வேண்டும்.

     ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், தளவாட பொருட்கள் எடுத்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். 

    ஓட்டுப்பதிவு நாளன்று ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் இருந்து ஓட்டுப்பதிவு நடக்கும் மையத்துக்கு உரிய பாதுகாப்புடன் எடுத்து சென்று திறம்பட தேர்தலை நிறைவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.





    Next Story
    ×