என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே பச்சிளம் பெண் குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் முன்பு உள்ள ஏ.டி.எம். மையம் முன் பகுதியில் உள்ள சாக்கடையில் நேற்று மதியம் தொப்புள் கொடியுடன் ஒரு பெண் குழந்தை கிடந்தது. அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆம்புலன்சை வரவழைத்தனர். சாக்கடையில் கிடந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தை பிறந்து 2 மணி நேரமே இருக்கும் நிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    5-வது வார்டில் மட்டுமே பா.ஜனதா 2,461 வாக்குகள் பெற்றுள்ளது. மற்ற வார்டுகளில் 31 முதல் 465 வாக்குகள் வரை பெற்று உள்ளன.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பா.ஜனதா கட்சி 50 வார்டுகளில் போட்டியிட்டது. இதில் ஒரு வார்டில் மனு நிராகரிக்கப்பட்டதால் 49 வார்டுகளில் போட்டியிட்டது. இதில் 49 வார்டுகளிலும் பா.ஜனதா கட்சி தோல்வி அடைந்தது.

    வார்டு வாரியாக பா.ஜனதா பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-

    1 வார்டில் 341, 2-வது வார்டு 37, 3-வது வார்டு 121, 4-வது வார்டு 207, 5-வது வார்டு 2,461, 6-வது வார்டு 291, 7-வது வார்டு 101, 8-வது வார்டு 161, 9-வது வார்டு 148, 10 -வது வார்டு 444, 12-வது வார்டு 326, 13-வது வார்டு 192, 14-வது வார்டு 356,

    16-வது வார்டு 70, 17-வது வார்டு 104, 19 வது வார்டு 197, 20-வது வார்டு 189, 21-வது வார்டு 178, 22-வது வார்டு 236, 23 -வது வார்டு 167, 25-வது வார்டு 70, 26-வது வார்டு 117, 27-வது வார்டு101, 28-வது வார்டு 267, 29-வது வார்டு 230, 31-வது வார்டு 83, 33 -வது வார்டு 122, 34-வது வார்டு 398, 35-வது வார்டு 396, 36-வது வார்டு 145, 38-வது வார்டு 148, 39 -வது வார்டு 107, 40-வது வார்டு 136,

    41 -வது வார்டு 255, 42 -வது வார்டு 235, 44 -வது வார்டு 31, 45-வது வார்டு 218, 46 -வது வார்டு 177, 47-வது வார்டு 172, 48 -வது வார்டு 395, 49-வது வார்டு 245, 50 -வது வார்டு 282, 52-வது வார்டு 120, 53-வது வார்டு 81, 54 -வது வார்டு 84, 56 -வது வார்டு 467, 57 -வது வார்டு 211, 58 -வது வார்டு 196, 60-வது 211 என 49 வார்டுகளிலும் சேர்த்து பா.ஜனதா கட்சி 12 ஆயிரத்து 35 வாக்குகள் பெற்றுள்ளது.

     இதில் 5-வது வார்டில் மட்டுமே பா.ஜனதா 2,461 வாக்குகள் பெற்றுள்ளது. மற்ற வார்டுகளில் 31 முதல் 465 வாக்குகள் வரை பெற்று உள்ளன.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் சத்தியமங்கலம் நகராட்சியில் மட்டுமே பா.ஜனதா, பா.ம.க. தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் பா.ஜனதா சார்பில் 8-வது வார்டில் போட்டியிட்ட உமா என்பவர் 256 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். 

    இதேபோல் 23-வது வார்டில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் அரவிந்சாகர் 469 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 13-வது வார்டில் பா.ம.க. வேட்பாளர் புவனேஸ்வரி 448 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

    14-வதுவார்டில் பா.ம.க. வேட்பாளர் திருநாவுக்கரசு 297 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் சத்தியமங்கலம் நகராட்சியில் மட்டுமே பா.ஜனதா, பா.ம.க. தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    சத்தியமங்கலம் நகராட்சி 8-வது வார்டில் பா.ஜனதா வேட்பாளர் உமா 256 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கீர்த்தனா 255 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 13-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சுகந்தி 341 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வி 342 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

    இதேபோல் பவானி நகராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மோகன்ராஜ் 435 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் விஜயகுமாரி 434 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். தி.மு.க. வேட்பாளர் மோகன்ராஜ் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

    பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி 5-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சத்யமூர்த்தி 175 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பழனிச்சாமி 174 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் சத்யமூர்த்தி வெற்றி பெற்றார். சத்தியமங்கலம் நகராட்சி 8-வது வார்டில் பா.ஜனதா வேட்பாளர் உமா 256 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கீர்த்தனா 255 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் உமா வெற்றி பெற்றார்.

    ஓட்டு எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் நுழைவாயிலில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவரும் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் பட்டனர்.
    ஈரோடு:

    ஓட்டு எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் நுழைவாயிலில்  கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவரும் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் பட்டனர். 

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபி, சத்தியமங்கலம், பவானி, புஞ்சைபுளியம்பட்டி என 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

    தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட வாக்குபதிவு பெட்டிகள் சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டாங் ரூமில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. 

    இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருவதையொட்டி சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி முழுவதும் போலீ சார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 

    டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் வளாகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்கு எண்ணும் மையத் திற்குள் வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டது. 

    இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது.  

    இன்று காலை 6 மணி   அளவில் சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரி நுழைவாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது ஒவ்வொரு வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் தலைமை வேட்பாளர்கள் வரத் தொடங்கினார்கள்.  

    நுழைவாயிலில் அவர்களுக்கு கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவரும் அடையாள அட்டை இருந்தால் தான் உள்ளே அனுமதிக்கப் பட்டனர். 

    இதேபோல் செல்போன், பை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. செல்போன்களை நுழைவாயிலேயே போலீசார் வாங்கிக் கொண்டனர். 

    நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரிசையில் நின்று ஒவ்வொருவராக போலீசார் சோதனை செய்தனர். 

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை மேற்கொள் ளப்பட்டன. நுழைவாயிலில் யார்? யார்? வந்தார்கள் என்பது குறித்து பதிவு செய்யப்பட்டது. 

    வாகனங்கள் தனியாக நிறுத்துவதற்கு அருகில் உள்ள காலி இடம் ஒதுக்கப்பட்டது. 

    மையத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கபடவில்லை. வேட்பாளர்கள், முகவர்கள் பேப்பர், பேனா கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    நுழைவு வாயிலில் இருந்து ஓட்டு எண்ணும் மையத்திற்கு வேட்பாளர்கள், முகவர்கள் பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர். 

    மேலும் வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு ஏராளமான அரசியல் கட்சியினர் காலை முதலே திரண்டு இருந்தனர். 

    இவர்கள் தேர்தல் முடிவுகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கிகள் கட்டப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் தீவிர சோதனைக்கு பின்பே வேட்பாளர்கள், முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

    மேலும் வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் திரண்டு உள்ளனர்.
    கொரோனா ஊரடங்கில் வியாபாரம் பாதித்ததால் காய்கறி வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    கொரோனா ஊரடங்கில் வியாபாரம் பாதித்ததால் காய்கறி வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி கமலா. இவர்களுக்கு மோகன்ராஜ் என்ற மகனும், மணிமேகலை என்ற மகளும் உள்ளனர்.

    இதில் மணிமேகலை திருமணமாகி தேனியில் வசித்து வருகிறார். மனோகரன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் கமலா தனது மகன் மோகன்ராஜூடன் வசித்து வருகிறார்.

    மோகன்ராஜ் சரக்கு ஆட்டோவில் காய்கறிகள் வியாபாரம் செய்து வந்தார். 

    இதற்காக அவர் கடன் வாங்கி இருந்தார். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சரியாக வியாபாரம் செய்ய முடியாமல் மோகன்ராஜ் சிரமப்பட்டார். 

    அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார்.  

    சம்பவத்தன்று  மாலை கமலா உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். 

    அப்போது வீட்டின் படுக்கை அறையில் மோகன்ராஜ் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். 

    உடனடியாக அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மோகன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர் ஓட்டு எண்ணும் மையத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் ஓட்டு எண்ணும் மையத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

    அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை  தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப் பட்டது. 

    அப்போது அந்தியூர் பேரூராட்சி அனைத்து வார்டுகளின் முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் குவிந்தனர். 

    இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அப்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

    அவர்கள் எந்த வார்டு வாக்குகள் எண்ணப் படுகிறதோ? அவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். 

    மற்றவர்களை வெளி யேற்ற வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். 

    இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அனைவரும் வெளி யேற்றப்பட்டனர்.

    இதை தொடர்ந்து அந்தந்த வார்டு முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.

    ஈரோடு மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி மையத்தில் எண்ணப்பட்டு வருகிறது. அப்போது ஒளிப்பதிவாளர் ஒருவர் தபால் வாக்கு பிரிக்கும் பணியை தனது செல்போனில் படம் பிடித்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற அதிகாரிகள் அந்த நபரிடம் செல்போனில் பதிவு செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி மையத்தில் எண்ணப்பட்டு வருகிறது.  

    20 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 3 வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. 

    இன்று காலை 8.05 மணியளவில் 2-வது வளாகத்தில் தபால் வாக்கு பெட்டிகள் மாநகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் பிரிக்கப் பட்டது. 

    தபால் வாக்குகள் ஒவ்வொரு வார்டாக பிரிக்கும் பணி நடந்து வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கபடவில்லை. 

    வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் அலுவலர்கள் செல்போன்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. 

    ஆனால் அதேநேரம் தேர்தல் ஆணையத்தால் வாக்கும் எண்ணும் பணி பதிவு செய்ய ஒளிப்பதி வாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    அப்போது ஒளிப்பதிவாளர் ஒருவர் தபால் வாக்கு பிரிக்கும் பணியை தனது செல்போனில் படம் பிடித்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற அதிகாரிகள் அந்த நபரிடம் செல்போனில் பதிவு செய்யக்கூடாது என எச்சரித்தனர். 

    இதையடுத்து அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதை சரி செய்ய 14 என்ஜினீயர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதை சரி செய்ய 14 என்ஜினீயர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந் தது. 

    இதில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு 14 மையங்களில் வைக்கப்பட்டது.

    தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையின் போது ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டால் ஓட்டு எண்ணிக்கை தடைப்பட வாய்ப்புள்ளது. 

    இதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. 

    இதையொட்டி ஓட்டு பதிவு எந்திரங்களில் பழுதை சரி செய்வதற்கு ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு என்ஜினீயர் என  14 வாக்குச் சாவடி மையங்களுக்கு 14 என்ஜினீயர்கள் நியமிக் கப்பட்டுளள்னர். 

    அவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் உள்ளதா? என்று கண்காணித்து வருகிறார்கள்.
    தேர்தலில் 79.78 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க, அ.தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 112 பேர் போட்டியிட்டனர்.

    தேர்தலில் 79.78 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணிக்கு மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் தொடங்கியது. இதற்காக 4 மேஜைகள் போடப்பட்டு இருந்தது. ஒரு மேஜைக்கு 2 பேர் என்று 8 பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வடிவேல் 500 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மோகன்ராஜ் 435 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் விஜயகுமாரி 434 ஓட்டுகள் பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் 407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் 380 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சந்தோஷ் 461 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

    அம்மாபேட்டை பேரூராட்சி 1-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கவிதா 294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வதுவார்டில் சுயேச்சை வேட்பாளர் பூங்கொடி 177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு 20 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 2 இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 608 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

    42 பேரூராட்சிகளிலும் 79.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் 9 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து மையங்களிலும் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

    அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சரஸ்வதி 506 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் கீதாஞ்சலி செந்தில் 485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கீதா 366 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கவுரி 308 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சண்முகம் 519 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அம்மாபேட்டை பேரூராட்சி 1-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கவிதா 294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வதுவார்டில் சுயேச்சை வேட்பாளர் பூங்கொடி 177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி 1-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் வில்சி 181 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.மு.க.வேட்பாளர் அம்மாசை 172 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பெருந்துறை பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் 488 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் பசிரியா பேகம் 501 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் 486 வாக்குகள் பெற்று பெற்று வெற்றி பெற்றார்.

    காஞ்சிக்கோயில் 1-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் தங்கராஜ் 348 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.மு.க.வேட்பாளர் திவ்யா 316 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பள்ளப்பாளையம் பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் விஜயா 209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஜம்பை பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அன்பரசி 480 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஆப்பக்கூடல் பேரூராட்சி 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சுமதி 319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராமசாமி 262 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.முக. வேட்பாளர் காந்திமதி 167 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வசந்தி 227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பெரிய கொடிவேரி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது தி.மு.க. வேட்பாளர் தமிழ்மகன் சிவா 579 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராணி 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் முத்துசாமி 417 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் தங்கமணி 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5-வது வார்டு தி.முக. வேட்பாளர் செந்தில் 352 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 6-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் யுவராணி 204 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 7-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் தங்கமணி 248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 8-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சுமதி 402 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 9-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பாலச்சந்தர் 423 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பேபி 456 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 11-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண் 385 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பெருமாள் 525 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி 250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை குறைந்தது
    ஈரோடு:

    ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை குறைந்தது.

    கொரோனா தாக்கம் காரணமாக ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில்  செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக   வ.உ.சி பூங்கா பகுதியில்  செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள். 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

    இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும், காலை வேளையில் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, அந்தியூர் போன்ற பகுதியில் இருந்தும் கிருஷ்ணகிரி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்தும், பெங்களூரு கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு தினமும் காய்கறிகள் வரத்தாகி வருகின்றன. 

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வழக்கத்தைவிட காய்கறிகள் வரத்து அதிகரித்து வருவதால்  விலையும் ஓரளவு குறைந்துள்ளது. இன்று வ.உ.சி.காய்கறி மார்க்கெட்டில் விற்க பட்ட காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு:&
    பீட்ரூட் - ரூ.30, பீன்ஸ் - ரூ.20, பச்சை பட்டாணி -ரூ.60, முள்ளங்கி - ரூ.20, வெண்டைக்காய் -ரூ-30, கத்திரிக்காய் கடந்த வாரம் கிலோ 120 ரூபாய்க்கு விற்றது.இன்று 80 ரூபாய்க்கு விற்பனையானது. முருங்கைக்காய் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ 250 வரை விற்பனையானது. இன்று 150 ரூபாய்க்கு விற்பனையானது. 

    புடலங்காய் - ரூ.30, பீர்க்கங்காய் - ரூ.30, பாவைக்காய் - ரூ.30, அவரைக்காய் - ரூ.50, பெல்ட் அவரை - ரூ.40, முட்டைக்கோஸ் - ரூ.35, பச்சை மிளகா - ரூ.80, சின்ன வெங்காயம் - ரூ.30, பெரிய வெங்காயம் - ரூ.35, காளிபிளவர் - 20 முதல் 30, தக்காளி - 10.
    ஆனால் அதே நேரம்  கேரட் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கேரட் இன்று ரூ.100 முதல் 120 வரை விற்பனையாகி வருகிறது.
    ×