என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு பெரிய மார்க்கெட்டில் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    X
    ஈரோடு பெரிய மார்க்கெட்டில் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது

    ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை குறைந்தது
    ஈரோடு:

    ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை குறைந்தது.

    கொரோனா தாக்கம் காரணமாக ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில்  செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக   வ.உ.சி பூங்கா பகுதியில்  செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள். 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

    இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும், காலை வேளையில் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, அந்தியூர் போன்ற பகுதியில் இருந்தும் கிருஷ்ணகிரி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்தும், பெங்களூரு கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு தினமும் காய்கறிகள் வரத்தாகி வருகின்றன. 

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வழக்கத்தைவிட காய்கறிகள் வரத்து அதிகரித்து வருவதால்  விலையும் ஓரளவு குறைந்துள்ளது. இன்று வ.உ.சி.காய்கறி மார்க்கெட்டில் விற்க பட்ட காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு:&
    பீட்ரூட் - ரூ.30, பீன்ஸ் - ரூ.20, பச்சை பட்டாணி -ரூ.60, முள்ளங்கி - ரூ.20, வெண்டைக்காய் -ரூ-30, கத்திரிக்காய் கடந்த வாரம் கிலோ 120 ரூபாய்க்கு விற்றது.இன்று 80 ரூபாய்க்கு விற்பனையானது. முருங்கைக்காய் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ 250 வரை விற்பனையானது. இன்று 150 ரூபாய்க்கு விற்பனையானது. 

    புடலங்காய் - ரூ.30, பீர்க்கங்காய் - ரூ.30, பாவைக்காய் - ரூ.30, அவரைக்காய் - ரூ.50, பெல்ட் அவரை - ரூ.40, முட்டைக்கோஸ் - ரூ.35, பச்சை மிளகா - ரூ.80, சின்ன வெங்காயம் - ரூ.30, பெரிய வெங்காயம் - ரூ.35, காளிபிளவர் - 20 முதல் 30, தக்காளி - 10.
    ஆனால் அதே நேரம்  கேரட் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கேரட் இன்று ரூ.100 முதல் 120 வரை விற்பனையாகி வருகிறது.
    Next Story
    ×