என் மலர்
ஈரோடு
கவுந்தப்பாடி அருகே மகாமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி அம்மன் தங்க கவசம் அணிந்து வைர கிரீடத்தில் பக்தர்களுக்கு பாலித்தார்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே மகாமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி அம்மன் தங்க கவசம் அணிந்து வைர கிரீடத்தில் பக்தர்களுக்கு பாலித்தார்.
கவுந்தப்பாடி அடுத்துள்ள செந்தாம்பாளையம் மகாமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடி யேற்றம் மற்றும் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து 30-ந் தேதி கம்பம் நடப்பட்டது. கடந்த 1&ந் தேதி கம்பத்தில் பூவோடு வைத்து கம்ப ஆட்டம் நடைபெற்றது. சுற்று வட்டார கிராம மக்கள் அலகு குத்துதல், தீர்த்தகுடம், அக்னி சட்டி எடுத்து வர மஞ்சள் காப்பு அணிந்து விரதம் இருந்தனர்.
இதனையடுத்து நேற்று காலை 4 மணிக்கு சாத்துபடி பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். நேர்த்தி கடனாக உருவபொம்மைகள் வைத்து பூஜைகள் செய்தனர்.
பின்னர் பொங்கல் வைத்து கிடாவெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்து. விவசாயிகள் ஆடு, மாடு, எருமைகளை வேப்பிலை கட்டி கோவிலை வலம் வந்து திருநீர் வாங்கி கால் நடைகளுக்கு பூசி சென்றனர். விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நோய் வராமல் காக்க வேண்டி கொண்டனர்.
மாலை பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு மகா மாரியம்மன் தங்க கவசம் அணிந்து வைர கிரீடத்தில் பக்தர்களுக்கு பாலித்தார்.
சத்தியமங்கலத்தில் இரவு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கடந்த ஒரு வாரம் தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வந்தது.
வெயில் தாக்கத்துடன் அனல்காற்று சேர்ந்து வீசியதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் குழந்தைகள் பெரியவர்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. காலை 7 மணிக்கு கொளுத்த தொடங்கிய வெயில் மாலை வரை நீடித்தது.
இந்நிலையில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. ஈரோடு மாநகர பகுதியிலும் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வது போல் இருந்தது. ஆனால் மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இரவு 9 மணிக்கு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே வெப்ப தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
குண்டேரிபள்ளம் - 6.4, பவானிசாகர் - 6.2, சத்தியமங்கலம் - 4, சென்னிமலை - 3.
மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு அண்ணமார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 19 வயது வாலிபர். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தீபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் மொடக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் என்ஜினீயரிங் மாணவர் 8ம் வகுப்பு மாணவியுடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்ததாகவும், அங்கு சரியாக வேலை கிடைக்காததால் மீண்டும் ஊருக்கு வந்த இடத்தில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு அண்ணமார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 19 வயது வாலிபர். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தீபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் மொடக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் என்ஜினீயரிங் மாணவர் 8ம் வகுப்பு மாணவியுடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்ததாகவும், அங்கு சரியாக வேலை கிடைக்காததால் மீண்டும் ஊருக்கு வந்த இடத்தில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
ஈரோடு:
ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரக ஒதுக்கீடு சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
கைத்தறி தொழில் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும் மத்திய அரசு 1985-ம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை இயற்றியது.
இதன்படி பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின் படி தண்டனைக்குரிய செயலாகும்.
இச்சட்டத்தை அமல்படுத்திட கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் அமலாக்கப் பிரிவு ஏற்படுத் தப்பட்டுள்ளது. விசைத் தறிகளில் உற்பத்தி செய்யப் படுவது கண்டறி யப்பட் டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள்
மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது விசைத்தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
பெருந்துறை அருகே வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவனை 2-வது நாளாக தீவரமாக தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவனை 2-வது நாளாக தீவரமாக தேடி வருகின்றனர்.
பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் எலையாம் பாளையம் திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவரது மனைவி சந்தியா தேவி (32).
இவர்களுக்கு கீர்த்தனா (10) என்ற மகளும், பரணி தரன் (3) என்ற மகனும் உள்ளனர். கீர்த்தனா காஞ்சிக் கோவில் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
சந்தியா தேவி துணி துவைப்பதற்கு தனது மகள் மற்றும் மகனை அழைத்து கொண்டு காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார். அங்கு சந்தியா தேவி படிக் கட்டில் அமர்ந்து துணிகளை துவைத்து கொண்டு இருந்தார். கீர்த்தனா, பரணி தரன் வாய்க்கால் கரையில் உட்கார்ந்து தண்ணீரில் விளையாடி கொண்டி ருந்தனர்.
அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் எதிர் பாராத விதமாக வாய்க் காலில் தவறி விழுந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தியா தேவி உடனடியாக அவர்களை காப்பாற்ற வாய்க்காலுக்குள் இறங்கினார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் சந்தியாதேவியை காப்பாற்றினார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் வாய்க்காலிலில் தவறி விழுந்த அக்காள் மற்றும் தம்பியை தேடினர். தொடர்ந்து இது குறித்து சந்தியாதேவி உடனடியாக கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது கணவர் மற்றும் பொது மக்களுடன் வந்து சிறுவன் மற்றும் சிறுமியை தேடினர். இதில் அவர்கள் கிடைக்க வில்லை. இதைதொடர்ந்து கண்ணம் வேலம்பாளையம் அருகே எல்.பி.பி. வாய்க் காலில் அத்திக்கடவு அவி னாசி திட்டம் பாலத் திற்கு அருகே கீர்த்தனா பிணமாக மீட்கப்பட்டார்.
ஆனால் சிறுவன் பரணிதரன் கிடைக்க வில்லை. தொடர்ந்து பரணி தரனை தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து காஞ்சிகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு துறையினர் மற்றும் போலீ சார் வாய்க்காலில் இறங்கி பரணிதரனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இது குறித்து காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்
மேலும் இது குறித்து பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் விசாரணை மேற் கொண்டு வருகிறார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் செத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் செத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டம் இன்று காலை தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
இந்த நிலையில் கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் வந்த போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 12 பேர் எழுந்து இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து மீண்டும் சிறிது நேரம் கழித்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதா அ.தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது-. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது-. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சநத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து உயர்ந்து நீர்மட்டம் அதிகபட்சமாக 104.81 அடியாக உயர்ந்தது. அணைக்கு படிப்படியாக நீர்வரத்து குறைந்து 100 அடியாக குறைந்தது.
தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் பருவ மழை பெய்து வந்ததால் அணை யின் நீர் மட்டம் பல மாதங் களாக 100 அடிக்கு மேல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் கோடை வெயில் தொடங்கியதை யொட்டி கடந்த சில நாட் களாக ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங் களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக்கு 1400 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இது மேலும் குறைந்து நேற்று காலை 500 கன தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் நேற்று அணையின் நீர்மட்டம் 84.22 அடியாக இருந்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 83.88 அடியாக இருந்தது. அணைக்கு 265 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
கீழ் பவானி வாய்க்காலுக்கு 2380 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 600 கன அடியும், ஆற்றுக்கு குடிநீருக்கு 200 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 180 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு சூரம்பட்டியில் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக்கோரி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூரம்பட்டி:
ஈரோடு சூரம்பட்டியில் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக்கோரி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்-டத்தில் மாநில பொதுச்-செயலாளர் தினேஷ்குமார் கலந்து கொண்டு ஆர்ப்-பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் மாரசாமி, நிர்வாகிகள் சதாசிவம், சாமியப்பன், சிவக்குமார், ராஜகோபால், தங்க பூமி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சென்னை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்--களை சேர்ந்த நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ரேசன் கடை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். கொரோனா கால பயணப் படியை உடனே வழங்க வேண்டும்.
தரமில்லாத அரிசி வினியோகம் செய்வதை தவிர்க்க வேண்டும். ரேசன் கடை-களுக்கு என்று தனித்-துறையை ஏற்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிந்ததால் எலுமிச்சம்பழம் விலை உயர்ந்து கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிந்ததால் எலுமிச்சம்பழம் விலை உயர்ந்து கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோடை காலம் தொடங்கி உள்ளதால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து விட்டது. மேலும் கோவில் திரு விழாக்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாலும் எலுமிச்சம் பழம் தேவை அதிகரித்துள்ளது.
மறுபக்கம் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச் சம் பழம் ஜூஸ் மக்கள் விரும்பி பருகி வருகின்றனர். இதனால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து உள்ளது.இதன் காரணமாக எலுமிச்சம் பழம் விலை உயர்ந்துள்ளது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் தென்காசி, பெங்களூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 4 டன் எலுமிச்சம் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
கடந்த மாதம் ஒரு எலுமிச்சம்பழம் ரூ.3 முதல் ரூ.7 வரை விற்பனையாகி வந்தது. தற்போது தேவை அதிகரித்து வரத்தும் குறைந்து உள்ளதால் கடந்த 10 நாட்களாள எலுமிச்சம் பழம் விலை அதிகரித்து உள்ளது.
இன்று வ. உ. சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் தென்காசி மற்றும் பெங்களூரில் இருந்து ஒரு டன் எலுமிச்சம் பழம் லோடு மட்டுமே வந்தது. இன்று ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ. 250-க்கு விற்பனையானது. ஒரு எலுமிச்சம்பழம் ரூ.7 முதல் முதல் ரூ.15 வரை விற்பனையாகி வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக எலுமிச்சம்பழம் வியாபாரம் மந்தமாக நடை பெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட குமாரவலசு, குட்டபாளையம் ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரவலசு-ஊராட்சி,-வி.மேட்டுப் பாளையம் பகுதியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ்-செயல் பட்டு-வரும் கரும்புநாற்று-உற்பத்தி-மையதினையும்,-
குமாரவலசு-ஊரா ட்சி-வெள்ளோடு-பகுதியில் பாரத-பிரதம-மந்திரியின் நுண்ணீர் பாசனதிட்டத்தின் கீழ் ரூ.1.81 லட்சம் மொத்த-மதிப்பீட்டில் ரூ.1.44 லட்சம் மானிய-உதவியுடன் சொட்டுநீர் பாசனம் அமைத்து-கரும்பு-சாகுபடி-மேற்கொள்ளப்-பட்டுள்ளதையும்,-குட்டப்பாளையம் ஊராட்சி-ஓலப்பாளையம் பகுதியில் மகாத்மா-காந்தி-தேசிய வேலை-உறுதி திட்டத்தின் கீழ் செயல்படும் நாற்றுப்- பண்ணையினையும் பார்வையிட்டார்.
அதேப்பகுதியில் மகாத்மா-காந்தி-தேசிய வேலை -உறுதி- திட்டத்தின் கீழ்- தனிநபர் உறிஞ்சு-குழி-அமைக்கப்-பட்டுள்ளதை யும்,- மகாத்மா- காந்தி- தேசிய-வேலை-உறுதி-திட்டத்தின் கீழ்-ரூ.20.48 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டு-வருவதையும்,-
சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட -பாண்டியன் தெரு- மற்றும் சோழன் தெரு- ஆகிய-பகுதிகளில் கலைஞர் நகர்புற-மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தும் பணியினையும்,-
வார்டு எண்.9 பகுதியில் 15&வது நிதிக்குழு மானிய-திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பூங்காவில் பேவர் பிளாக்-அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு-ஆய்வு-மேற்கொண்டார்.
தொடர்ந்து-வெள்ளோடு-அரசினர் பிற்படுத்த ப்பட்டோர் நலமாணவர் விடுதியினையும் ஆய்வு-மேற்கொண்டு மாணவர் களுக்கு-வழங்கப்படும் உணவுகள் மற்றும் அடிப்படை- வசதிகள் குறித்து -பார்வையிட்டு-ஆய்வு-மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து கொடுமுடி- வட்டம்- தம்பி ரான்-வலசு -பகுதியி-ல் சிறு, குறு மற்றும் நடுத்தர-தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் தமிழக-அரசின் மானியமாக- ரூ.6.90 கோடி-மதிப்பீட்டிலும்,-தனிநபர் நிறுவன-பங்களிப்பாக- ரூ.2.95 கோடி -மதிப்பீட்டிலும்-என- மொத்தம்- ரூ.10.29 கோடி -திட்ட -மதிப்பீட்டில் காயர் குழும- வளர்ச்சி-திட்டத்தின் கீழ் செயல்படவுள்ள- நொய்யல் காயர் குழுமத்தினையும் நேரில் சென்று- பார்வையிட்டு-ஆய்வு-மேற்கொண்டார்.
முன்னதாக -தம்பிரான்- வலசு -பகுதியில் அடிப்படை-வசதிகள் குறித்த- பல்வேறு-கோரிக்கைகள் அடங்கிய ம-னுக்களை- பொது-மக்களிடமிருந்து-- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி-பெற்றுக்கொண்டார்.
இந்த -ஆய்வுகளின் - போது -இணை இயக்குநர் (வேளாண்மை) சின்னசாமி,- சென்னிமலை, கொடுமுடி-வட்டார -வளர்ச்சி அலுவலர்கள்,-சென்னிமலை,-கொடுமுடி-பேரூராட்சி--செயல் அலுவலர்கள்,-பெருந்துறை,-கொடுமுடி-தாசில்தார்கள் உள்பட- துறை-அலுவ லர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோட்டில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு மாவட்ட ங்களில் தினசரி வெயில் 100 டிகிரி பதிவாகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை 7 மணி முதல் வெயில் தாக்கம் தொடங்குகிறது.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அனல் காற்று டன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குழந்தைகள், பெரியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை அதிக அளவில் விரும்பி குடித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தினசரி பாதிப்பு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று 102 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. வீட்டில் அதிக அளவு புழுக்கம் நிலவி வருகிறது.
மின்விசிறியை அதிகளவு மக்கள் பயன்படுத்தினாலும் அனல் காற்று வீசுவதால் மக்கள் திணறி வருகின்றனர். மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள கரும்பு பால், இளநீர், மோர் ஆகியவற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர்.
இதேபோல் சாலையோரம் ஆங்காங்கே நுங்கு கடை, தர்பூசணி கடை புதுசு புதுசாக முளைத்துள்ளன.
தர்பூசணியில் அதிகளவு நீர்சத்து உள்ளதால் மக்கள் அதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.இதனால் தர்பூசணி வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுபோல் பல்வேறு குளிர்பானங்களையும் மக்கள் விரும்பி பருகி வருகின்றனர்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்க உள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து 3080 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து 3080 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 84.22 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 186 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பாசனத்திற்கு 2380 கனஅடி என மொத்தம் 3080 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






