search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுட்டெரிக்கும் அனல் காற்றில் இருந்து தப்பிக்க மொபட்டில் சென்ற பெண்கள் தலையில் துப்பட்டாவை அணிந்து சென்றனர்.
    X
    சுட்டெரிக்கும் அனல் காற்றில் இருந்து தப்பிக்க மொபட்டில் சென்ற பெண்கள் தலையில் துப்பட்டாவை அணிந்து சென்றனர்.

    ஈரோட்டில் 102 டிகிரி வெயில் பதிவு

    ஈரோட்டில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 102  டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு மாவட்ட ங்களில் தினசரி வெயில் 100 டிகிரி பதிவாகி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை 7 மணி முதல் வெயில் தாக்கம் தொடங்குகிறது. 

    மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அனல் காற்று டன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குழந்தைகள், பெரியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது.  இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க  குளிர்பானங்களை அதிக அளவில் விரும்பி குடித்து வருகின்றனர்.

     மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தினசரி பாதிப்பு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.  நேற்று 102 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. வீட்டில் அதிக அளவு புழுக்கம் நிலவி வருகிறது. 

    மின்விசிறியை அதிகளவு மக்கள் பயன்படுத்தினாலும்  அனல் காற்று வீசுவதால் மக்கள் திணறி வருகின்றனர்.   மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள கரும்பு பால்,  இளநீர், மோர்  ஆகியவற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர்.

    இதேபோல் சாலையோரம் ஆங்காங்கே நுங்கு கடை,  தர்பூசணி கடை புதுசு புதுசாக முளைத்துள்ளன.

    தர்பூசணியில் அதிகளவு நீர்சத்து உள்ளதால் மக்கள் அதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.இதனால் தர்பூசணி வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுபோல் பல்வேறு குளிர்பானங்களையும்  மக்கள் விரும்பி பருகி வருகின்றனர்.

    அடுத்த மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்க உள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×