என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேசன் கடை ஊழியர்கள்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேசன் கடை ஊழியர்கள்.

    ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம்

    ஈரோடு சூரம்பட்டியில் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக்கோரி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சூரம்பட்டி:

    ஈரோடு சூரம்பட்டியில் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக்கோரி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

    மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்-டத்தில் மாநில பொதுச்-செயலாளர் தினேஷ்குமார் கலந்து கொண்டு  ஆர்ப்-பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் மாரசாமி, நிர்வாகிகள் சதாசிவம், சாமியப்பன், சிவக்குமார், ராஜகோபால், தங்க பூமி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சென்னை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்--களை சேர்ந்த நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ரேசன் கடை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். கொரோனா கால பயணப் படியை உடனே வழங்க வேண்டும்.

    தரமில்லாத அரிசி வினியோகம் செய்வதை தவிர்க்க வேண்டும். ரேசன் கடை-களுக்கு என்று தனித்-துறையை ஏற்படுத்த வேண்டும்  போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×