என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.88 அடியாக குறைந்தது

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது-. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது-. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    சநத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து உயர்ந்து நீர்மட்டம் அதிகபட்சமாக 104.81 அடியாக உயர்ந்தது. அணைக்கு படிப்படியாக நீர்வரத்து குறைந்து 100 அடியாக குறைந்தது.

    தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் பருவ மழை பெய்து வந்ததால் அணை யின் நீர் மட்டம் பல மாதங் களாக 100 அடிக்கு மேல் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் கோடை வெயில் தொடங்கியதை யொட்டி கடந்த சில நாட் களாக ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங் களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு  அணைக்கு 1400 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இது மேலும் குறைந்து நேற்று காலை 500 கன தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

    இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் நேற்று அணையின் நீர்மட்டம்  84.22 அடியாக இருந்தது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 83.88 அடியாக இருந்தது. அணைக்கு 265 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

    கீழ் பவானி வாய்க்காலுக்கு 2380 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 600 கன அடியும், ஆற்றுக்கு குடிநீருக்கு 200 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 180 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×