என் மலர்
ஈரோடு
- சென்னிமலை- காங்கேயம் மெயின் ரோட்டில் சென்னிமலை நகரின் எல்லையில் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை மாகாளிஅம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
- நாளை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.
சென்னிமலை:
சென்னிமலை- காங்கேயம் மெயின் ரோட்டில் சென்னிமலை நகரின் எல்லையில் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை மாகாளிஅம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் சிறப்பு பூஜைகள் வழிபாடு நடந்து வந்தது. 27-ந் தேதி இரவு கும்பம்பாலித்தல் நடந்தது.
இதனையடுத்து நேற்று இரவு மாவிளக்கு பூஜைகள் நடந்தது. இன்று காலை முதல் பொங்கல் விழா நடந்தது. இதில் பொங்கல் வைத்து நகரை காப்பாற்றும் எல்லை மாகாளி அம்மனுக்கு ஆடு, கோழி பலிகொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து நாளை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை அம்மாபாளையம், சென்னிமலை, காட்டூர், வெட்டுகாட்டுபுதூர் கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.
- நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள சர்க்கரையை அன்றைய தினம் விற்பனைக்கு கொண்டு வந்து பயனடையலாம்.
- சர்க்கரை மூட்டைகளை சணல் நாரால் தைத்து, கல், மண், ஈரம் இல்லாமல் சுத்தமாகவும், கட்டி பிடிக்காத சர்க்கரையாகவும் கொண்டு வரவேண்டும்.
ஈரோடு:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்பு சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி வரும் 31-ந் தேதி காலை 11.30 மணியளவில் விவசாயிகளிடம் இருந்து சர்க்கரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. எனவே நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள சர்க்கரையை அன்றைய தினம் விற்பனைக்கு கொண்டு வந்து பயனடையலாம்.
மேலும், சர்க்கரை மூட்டைகளை சணல் நாரால் தைத்து, கல், மண், ஈரம் இல்லாமல் சுத்தமாகவும், கட்டி பிடிக்காத சர்க்கரையாகவும் கொண்டு வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் 30 பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு வளர்ப்பு மனை மானியமாக ரூ.75.6 லட்சம் வழங்கப்பட்டது.
- நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 420 ஏக்கரில் பட்டு விவசாயத்துக்கான மல்பெரி சாகுபடி பரப்பை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து 450 ஏக்கரில் புதிய விவசாயிகள் இணைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 30 பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு வளர்ப்பு மனை மானியமாக ரூ.75.6 லட்சம் வழங்கப்பட்டது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சிவநாதன் கூறியதாவது:-
பட்டு வளர்ப்பு விவசா யிகளை ஊக்கப்படுத்த வளர்ப்பு மனை மானியம், கருவிகள் என பல்வேறு திட்டங்களில் மானியம், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கு 1 முதல் 1.50 ஏக்கர் வளர்ப்பு மனை அமைத்துள்ளவர்களுக்கு தலா ரூ.1.20 லட்சம், மத்திய பகுதி திட்டத்தில் 2 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் வளர்ப்பு மனை அமை த்துள்ள விவசாயிகளுக்கு தலா ரூ.3 லட்சம் வளர்ப்பு மனை மானியமாக வழங்கப்படுகிறது.
இதன்படி நடப்பாண்டு பட்டு வளர்ப்பு சிறு விவசாயிகள் 8 பேருக்கு தலா ரூ.1.20 லட்சம், மத்திய பகுதி திட்டத்தில், 22 விவசாயிகளுக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் 30 விவசாயிகளுக்கு ரூ.75.6 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மானிய விலையில் பட்டு விவசாயி களுக்கு கருவி வழங்கும் திட்டத்தில் சில கருவிகள் வந்துவிட்டன.
சில நாளில் மீதமுள்ள கருவிகளும் வந்ததும் விவசாயிகளுக்கு முழுமையாக கருவிகள் வழங்கப்படும். தற்போது பருவநிலை சீராக, இதமாக உள்ளதால் பட்டு வளர்ச்சியும், அறுவடையும் சிறப்பாக நடக்கிறது.
கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் ஒரு கிலோ பட்டுக்கூடுக்கு 100 ரூபாய் வரை விலை உயர்ந்து தற்போது 766 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் ஜனவரி மாதம் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் என்பதால் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 420 ஏக்கரில் பட்டு விவசாயத்துக்கான மல்பெரி சாகுபடி பரப்பை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து 450 ஏக்கரில் புதிய விவசாயிகள் இணைந்துள்ளனர். குண்டடம், தாராபுரம் போன்ற பகுதிகளில் கூடுதலாக 60 ஏக்கரில் பரப்பை விரிவாக்கம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ள இக்குறை தீர்க்கும் கூட்டத்தில், சென்னை, நிதித்துறை ஓய்வூதிய இயக்குநர் பங்கேற்க உள்ளார்.
- தங்களது முறையீட்டு மனுக்களை இரண்டு பிரதிகளுடன் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலக 3-ம் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவரிடம் நேரிலோ அல்லது பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
ஈரோடு;
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் (தரைதளம்) வருகிற 10-ந் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ள இக்குறை தீர்க்கும் கூட்டத்தில், சென்னை, நிதித்துறை ஓய்வூதிய இயக்குநர் பங்கேற்க உள்ளார்.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவல கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறையீட்டு மனுக்களை இரண்டு பிரதிகளுடன் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலக 3-ம் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவரிடம் நேரிலோ அல்லது பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டு கொண்டுள்ளனர்.
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
- ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றைக்காட்டு யானையை வனத்துறை யினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப் போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், ஊருக்குள் உலா வந்து மக்களை அச்சுறுத்தி வருவதும் வாடிக்கையாக வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு பவானிசாகர் வனப் பகுதியை விட்டு வெளி யேறிய ஒற்றைக்காட்டு யானை பவானிசாகர் அணை பூங்கா அருகே உள்ள அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் உலா வந்தது.
இதைக்கண்டு அச்சம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாகவே பவானிசாகர் வனப்பகு தியை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும், இரவு நேரங்களில் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றைக்காட்டு யானையை வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
- இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி சந்தன காப்பு அலங்காரமும், நேற்று பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணியளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் காலை 8 மணி அளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முதன் முதலில் தலைமை பூசாரி ராஜ கோபால் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கை குழந்தைகளுடன் குண்டம் மிதித்தனர்.
இந்த குண்டம் திருவிழாவை–காண கோபி மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில், வடுகபாளையம், வடுகபாளையம்புதூர், நாகர்பாளையம், நாகதேவன் பாளையம், நாதிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து வரும் 1-ந் தேதி தெப்பத்தேர்உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 2-ந் தேதி மறுபூஜையும், 6-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பச்சை அம்மன் கோவிலும் குண்டம் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
- இந்த 14 இடங்களில் பணியிடங்கள் பூர்த்தி செய்ய கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப் பட்டது.
- தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு பவானி தாலுக்கா அலுவலக வளாகத்தில் நேற்று முதல் நேர்காணல் தொடங்கியது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவிற்கு உட்பட்ட மயிலம்பாடி, சலங்கபாளையம் அ, ஆ, கவுந்தப்பாடி அ,இ, ஆப்பகூடல், மேட்டுப்பாளையம் ஆ, சிங்கம்பேட்டை, புன்னம், ஒரிச்சேரி, கல்பாவி, செட்டிபாளையம், கேசரிமங்கலம், வைரமங்கலம் என 14 இடங்களில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் பணி காலியாக உள்ளது.
இந்த 14 இடங்களில் பணியிடங்கள் பூர்த்தி செய்ய கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப் பட்டது. பவானி தாலுக்கா–வில் 14 காலி பணி இடங்களுக்கு 1235 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அதில் 1067 விண்ணப்பங்கள் தகுதி பெற்றது. நவம்பர் மாதம் 30-ந் தேதி நடந்த எழுத்து தேர்வில் 810 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு பவானி தாலுக்கா அலுவலக வளாகத்தில் நேற்று முதல் நேர்காணல் தொடங்கியது.
28-ந் தேதி முதல் விடுமுறை நாள் தவிர 10 நாட்கள் காலை 40 பேர் மற்றும் மாலை 40 பேர் என இருவேளையும் 80 பேர் நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
நேர்காணலில் சான்றிதழ்கள் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் பவானி தாசில்தார் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தில்ராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் ஆகியோர் விண்ணப்பதாரர்களிடம் நேர்காணலில் ஈடுபட்டனர்.
ரூ.11,500 அடிப்படை சம்பளம் எனவும், ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்ட இந்த உதவியாளர் காலி பணியிடங்களுக்கு அதிக அளவில் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல் மொபட் இல்லாதவர்கள் சைக்கிள் ஓட்ட தெரிந்தவர்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தால் 5 மார்க் என நிர்ணயம் செய்யப்பட்டு நிலையில் பலரும் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர்.
- கொரோனா தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகளில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
- இந்த வார்டை ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வெங்கடேசன், உள்தங்கும் மருத்துவ அதிகாரி கவிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஈரோடு:
கொரோனா தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகளில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கொேரானா தொற்று குறைந்ததால் கொரோனா வார்டுகள் காலியானது. தற்போது கொேரானா பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற அடிப்படையில் ஆஸ்பத்திரிகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதார துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது,
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொேரானா வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையிலும் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு 100 படுக்கைகளுடன் ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளது. இதில் 20 படுக்கைகள் ஐ.சி.யூ. வார்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது.
இந்த வார்டை ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வெங்கடேசன், உள்தங்கும் மருத்துவ அதிகாரி கவிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- மனம் உடைந்த முத்துசாமி வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.
- இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள முள்ளம்பட்டி திருவாச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (62), இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கண் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் முத்துசாமி உடலில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக உடல்வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த முத்துசாமி வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அவரது மனைவி அருக்காணி என்பவர் முத்துசாமியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பவானி பழைய பாலம் அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
- கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி:
பவானி பழைய பாலம் அருகில் பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில் மறைவான இடத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பவானி கல்தொழிலாளர் மூன்றாவது வீதியில் வசிக்கும் கண்ணன் (23) என்பது தெரிய வந்தது அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் பவானி அந்தியூர் மெயின் ரோடு பண்டாரப்பச்சி கோவில் பின்பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்துக் கொண்டு விற்பனை செய்த குற்றத்திற்காக கல் தொழிலாளர் 1-வது வீதியில் வசிக்கும் பிரபாகரன் (31) என்பவர் கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு வழங்க இலவச வேட்டி, சேலையின் மொத்த ஆர்டரில் 80 சதவீத ஆர்டர் ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. 49 சொசைட்டிகளில் உற்பத்தியாகின்றன.
- ஈரோடு சரகத்துக்கு ஒதுக்கப்பட்ட 61 லட்சம் சேலைகளில் இதுவரை 45 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டன.
ஈரோடு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. மாநில அளவில் 17,455 தறிகளில் 1 கோடியே 26 லட்சத்து 19,004 வேட்டிகள், 21,389 தறிகளில் 99 லட்சத்து 56,683 சேலைகள் உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 61 லட்சத்து 29,000 சேலைகள், 69 லட்சத்து 2,000 வேட்டிகள் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதுபற்றி ஈரோடு கைத்தறி துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு வழங்க இலவச வேட்டி, சேலையின் மொத்த ஆர்டரில் 80 சதவீத ஆர்டர் ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. 49 சொசைட்டிகளில் உற்பத்தியாகின்றன.
ஈரோடு சரகத்துக்கு ஒதுக்கப்பட்ட 61 லட்சம் சேலைகளில் இதுவரை 45 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டன. அவை தரமாக உள்ளதா என ஆய்வு செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் வகையில் தயார் நிலையில் உள்ளன.
அதுபோல 69 லட்சம் வேட்டிகள் ஆர்டர் பெறப்பட்டு, 35 லட்சம் வேட்டிக்கான உற்பத்தி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள வேட்டி, சேலைகள் வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதிக்குள் நிறைவடையும். தற்போது 60 சதவீதம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி நிறைவடைந்து விட்டது.
உற்பத்தி செய்யப்பட்ட வேட்டிகள், சேலைகள் வில்லரசம்பட்டியில் உள்ள குடோனில் பேக்கில் செய்து கடந்த 3 நாட்களாக தினமும் 60 லாரிகளில் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணி முடியாது என சிலர் கூறுகின்றனர். 15 நிறங்களில் துணிகள் உற்பத்தி செய்வதால் அதற்கேற்ப நூல்கள் தயார் செய்து பெறப்பட்டுள்ளன. திட்டமிட்டப்படி முடிக்கப்படும். அதற்கேற்ப வேட்டி, சேலைகள் அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்படி திட்டமிட்டு பணிகள் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாற்றுத்திறனாளி உயிரிழந்தது குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும் படி வனத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த முதியனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (38) மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சாம்ராஜ்நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டெருமை கூட்டம் ரோட்டை கடந்து சென்றது. அதில் ஒரு காட்டெருமை ராஜூவின் தலையில் தாக்கியது. இதில் கீழே விழுந்த அவருக்கு காதில் ரத்தம் வந்தது. அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் 108 ஆம்புலன்சு மூலம் தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜூ பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும் படி வனத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.






