search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா
    X

    தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா

    • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி சந்தன காப்பு அலங்காரமும், நேற்று பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணியளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் காலை 8 மணி அளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முதன் முதலில் தலைமை பூசாரி ராஜ கோபால் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கை குழந்தைகளுடன் குண்டம் மிதித்தனர்.

    இந்த குண்டம் திருவிழாவை–காண கோபி மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில், வடுகபாளையம், வடுகபாளையம்புதூர், நாகர்பாளையம், நாகதேவன் பாளையம், நாதிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து வரும் 1-ந் தேதி தெப்பத்தேர்உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 2-ந் தேதி மறுபூஜையும், 6-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பச்சை அம்மன் கோவிலும் குண்டம் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    Next Story
    ×