என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயார் நிலையில்"

    • கொரோனா தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகளில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • இந்த வார்டை ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வெங்கடேசன், உள்தங்கும் மருத்துவ அதிகாரி கவிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    கொரோனா தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகளில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கொேரானா தொற்று குறைந்ததால் கொரோனா வார்டுகள் காலியானது. தற்போது கொேரானா பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற அடிப்படையில் ஆஸ்பத்திரிகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதார துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது,

    இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொேரானா வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையிலும் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இங்கு 100 படுக்கைகளுடன் ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளது. இதில் 20 படுக்கைகள் ஐ.சி.யூ. வார்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது.

    இந்த வார்டை ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வெங்கடேசன், உள்தங்கும் மருத்துவ அதிகாரி கவிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்
    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    கரூர்:

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோரப் பகுதிகளில், மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்' என மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேட்டூர் அணையில் இருந்து, காவிரி ஆற்றில் வினாடிக்கு, இரண்டு லட்சம், கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில், தவிட்டுப்பாளையம், நன்னியூர், நெரூர், குளித்தலை உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற, 120 போலீசார், வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில், துரிதமாக செயல்பட்டு, மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவர். எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×