என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவரை பிடித்து விசாரணை மேற்கொ ண்டனர்.
    • அவர் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே அவரை நக்சல் தடுப்பு போலீசார், கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து போலீசாரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சில சமூக விரோத கும்பல்கள் கஞ்சா பயிரிட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் நக்சல் தடுப்பு போலீசார் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கீழான வயல் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளத்துரை (வயது50) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    அப்போது அவர் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே அவரை நக்சல் தடுப்பு போலீசார், கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து சுமார் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கா னல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் போதை காளான்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    • தங்கை இறந்த துக்கத்தில் அக்கா திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தங்கையின் உடலைப் பார்த்து துக்கம் தாங்காமல் கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் சவேரியார் தெருவை சேர்ந்தவர் சிறுமணி மனைவி அன்னமுத்து (வயது65). கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

    இந்த விஷயம் கேட்டு அவரது சகோதரி அந்தோணியம்மாள் (70) அதிர்ச்சி அடைந்தார். அவரது கணவர் செல்வராஜியுடன் ஆத்தூருக்கு வந்தார்.

    அங்கு தங்கையின் உடலைப் பார்த்து துக்கம் தாங்காமல் கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்தோணியம்மாளை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தங்கை இறந்த துக்கத்தில் அக்கா திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எழும்பள்ளம் ஏரி தூர் வாரும் பணி தொடங்கியது. நடைபெற்று வரும் பணிகளை கண்கா ணிக்க அப்பகுதியில் விவசாயிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு உரு வாக்கப்பட்டுள்ளது
    • வேலையை செய்ய விடாமல் தினமும் இடையூறு செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் விவசாய பயன்பாட்டுக்கென எழும்பள்ளம் ஏரி முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. இந்த ஏரியை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்வேதா ராணி, துணைத் தலைவர் முத்துமாரி, கொடைக்கானல் ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையர் விஜய சந்திரிகா ஆகியோர் பொதுமக்களின் கோரிக்கையை முன்னெடு த்துச் சென்றதின் காரணமாக, பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார் தமிழக அரசிடம் முறையிட்டு ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    இதன் காரணமாக கடந்த 5-ந்தேதி எழும்பள்ளம் ஏரி தூர் வாரும் பணி தொடங்கியது. நடைபெற்று வரும் பணிகளை கண்கா ணிக்க அப்பகுதியில் விவசாயிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு உரு வாக்கப்பட்டுள்ளது.இந்த விவசாயிகளை பணிகள் நடைபெற்று வரும் பகுதி களுக்குச் சென்று தாங்களும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள முயன்றனர்.

    ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் மன்னவனூர் வனச்சரகர் நாதன் மோதல் போக்கை உருவாக்கி வருவதாகவும், வேலையை செய்ய விடாமல் தினமும் இடையூறு செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனால் வனச்சரகர் நாதனை இடமாற்றம் செய்து எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணி இடையூறு இன்றி நடக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அவரைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

    நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்களை திரட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரி வித்துள்ளனர்.

    • நோயாளி அவசர சிகிச்சை பிரிவு மாடியில் உள்ள ஆபரேசன் தியேட்டர் முன்பு உள்ள கதவில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வரு கின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் மையப்பகுதியில் அமைந்து ள்ளது மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி. இங்கு நகர் பகுதி மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் சிலர் இங்கு தங்கி உள்நோயாளி களாக உள்ளனர்.

    அவர்களுக்கு உதவியாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இருப்பதால் ஆஸ்பத்திரி வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு கலிக்கம்பட்டியை சேர்ந்த வர் ேசசுராஜ்(55). விவசாயி யான இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்துவிட்டது.

    இதனைதொடர்ந்து திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்ப ட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை அவசர சிகிச்சை பிரிவு மாடியில் உள்ள ஆபரேசன் தியேட்டர் முன்பு உள்ள கதவில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சேசுராஜ் பிணமாக தொங்குவதை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேசு ராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வரு கின்றனர்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் அரசு ஆஸ்ப த்திரியில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வடமாநிலங்களில் இருந்து ஏராளமான புதுமணத் தம்பதிகள், காதல் ஜோடிகள் வருவதால் இதனை கப்பிள்ஸ் சீசன் என அழை க்கின்றனர்.
    • கிறிஸ்து மஸ் பண்டிகை கொண்டாட ப்பட உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணி கள் வருகை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏப்ரல், மே மாதம் சீசன் காலமாகும். அப்போது அதிக அளவில் பயணிகள் வருவார்கள். இதே போல் அக்டோபர் மாதத்தில் ஆப் சீசனாகும். அப்போது வடமாநிலங்களில் இருந்து ஏராளமான புதுமணத் தம்பதிகள், காதல் ஜோடிகள் வருவதால் இதனை கப்பிள்ஸ் சீசன் என அழை க்கின்றனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட த்துக்காக இஸ்ரேல் நாட்டில் இருந்து பயணிகள் வட்டக்கா னல் பகுதிக்கு வரத் தொட ங்கியுள்ளனர். இவர்களை கவரும் விதமாக ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் குணா குகை, தூண்பாறை, மோயர் பாயிண்ட், பசுமை பள்ள த்தாக்கு கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணி கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

    கடந்த 2 நாட்களாக இரவில் கடும் குளிர் நிலவி வந்த போதும் பகலில் வெயில் அடித்து இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. மேலும் மலை கிராமங்களில் உருவாகியுள்ள புதிய அருவிகள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

    அடுத்த வாரம் கிறிஸ்து மஸ் பண்டிகை கொண்டாட ப்பட உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணி கள் வருகை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து புதுமணத் தம்பதிகள் மற்றும் இளம் காதல் ஜோடிகள் வருகின்றனர். இதனால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • குஜிலியம்பாறையில் காலை நேரத்தில் கரூர் பகுதிக்கு ஒரே பஸ் மட்டுமே உள்ளது.
    • இதனால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர்.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. மிகவும் வறட்சி யான பகுதியான இங்கு பெரும்பாலும் கூலித்தொழி லாளிகள், மில்வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் உள்ளனர். தற்போது குஜிலியம்பாறை தனித்தாலு காவாக இயங்கி வருகிறது.

    இப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரசு பஸ் மூலம் கரூர், திண்டுக்கல்லுக்கு சென்று வருகின்றனர். காலை நேரத்தில் கரூர் பகுதிக்கு ஒரே பஸ் மட்டுமே உள்ளது. இதனால் அவர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் அதிகளவு கூட்டம் கூடுவ தால் பஸ்சில் முண்டியடித்து செல்லவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

    இதனால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். கரூரில் இருந்து பாளையத்திற்கு அதிகளவு பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களை குஜிலியம்பாறை வரை இயக்கினால் கிராம மக்கள்சென்று வர ஏதுவாக இருக்கும். எனவே போக்கு வரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜவ்வாதுபட்டி, சோளியப்பகவுண்டனூர், வெரியப்பூர், கேதையறும்பு, திப்பம்பட்டி பகுதிகளில் அதிகளவு புகையிலை பயிரிடப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்தால் மேலும் விலை கிடைக்கும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளான ஜவ்வாதுபட்டி, சோளியப்பகவுண்டனூர், வெரியப்பூர், கேதையறும்பு, திப்பம்பட்டி பகுதிகளில் அதிகளவு புகையிலை பயிரிடப்பட்டுள்ளது.

    நடவு செய்யப்பட்டு 40 முதல் 50 நாளில் உற்பத்தி யாகிறது. ஒரு ஏக்கருக்கு 6000 நாற்றுகள் என ரூ.1800க்கு வாங்கி நடவு செய்கின்றனர். 120 நாளில் இருந்து புகையிலை செடி விளைச்சல் ஆகிறது. மற்ற விவசாயத்தை விட இதில் செலவுகள் குறைவு என்பதால் ஆர்வமுடன் பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

    கடந்த ஆண்டு ஒரு பச்சை புகையிலை ரூ.8 முதல் ரூ.10 வரையும்,வெயிலில் காயவைத்த ஒருகிலோ புகையிலை ரூ.95 முதல் ரூ.105 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்ய ப்பட்டது.

    இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக விற்பனையாக வாய்ப்புள்ளது. நன்றாக பராமரித்து வளர்த்தால் ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். விைல இல்லாத நேரத்தில் புகையிலையை பதப்படுத்தி வைத்து க்கொள்ளலாம். பின்னர் விலை உயரும் போது அதை விற்பனை செய்யலாம். தற்போது இடையகோட்டை பகுதியில் புகையிலை நன்கு விளைச்சல் கண்டுள்ளது. தொடர் மழை பெய்த போதும் பெரியளவில் பாதிப்பு இல்லை.

    வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் தோட்டங்களுக்கே வந்து வியாபாரிகளிடம் வாங்கி ச்செல்கின்றனர். குறைந்த விலைக்கு வாங்கி அதிகள வில் அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தபோதும் தொடர்ந்து விவசாயிகள் அவர்களிடம் புகையிலை விற்பனை செய்து வருகின்றனர்.

    எனவே விவசாயி களிடமிருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்தால் மேலும் விலை கிடைக்கும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார்.
    • மின்சாரம் தடைபட்டதால் ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் மலைக்கோயிலுக்கு மேலே செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாகச் சென்றார்.

    அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மேலே சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

    ரோப் காரில் நிதியமைச்சருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். இரண்டு நிமிடத்துக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது.

    இதையடுத்து, மலைக்கோயிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது. சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ரோப் கார் வழியாகவே அமைச்சர் கீழே இறங்கினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொழில் போட்டியில் அப்பாவி வியாபாரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேற்று வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில் பழனி பஸ் நிலையத்தில்,சாலையோரத்தில் செல்போன் கவர் விற்கும் வியாபாரியை ஒருவர் சரமாரியாக தாக்கி மிரட்டுவது பதிவாகி இருந்தது.

    சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் மதுரையை சேர்ந்த ராஜன் (40) என்பவர் பழனியில் தங்கி செல்போன் கவர்களை விற்று வந்தார். பஸ் நிலையத்தில் பழனியை சேர்ந்த சுதர்சன் (29) என்பவர் செல்போன் உதிரி பொருட்கள் கடை வைத்துள்ளார். அவர் ராஜனிடம் வெளியூரிலிருந்து இங்கு வந்து நீங்கள் செல்போன் கவர் விற்றால் கடை வைத்துள்ள எங்கள் வியாபாரம் பாதிக்கும். எனவே இங்கு வரக்கூடாது என கூறி அவரது கன்னத்தில் அறைந்தது தெரியவந்தது. தொழில் போட்டியில் அப்பாவி வியாபாரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சுதர்சனை பழனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது.
    • காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று இரவு காபி தோட்டத்தை சேர்ந்த விவசாயிகளான கோவிந்தராஜ், பூபதி, காந்தி ஆகியோருக்கு சொந்தமான காபி தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு பயிர்களை நாசம் செய்தது. இன்று காலை மல்லிகைபாறை வழியாக தார்சாலைக்கு வந்து சந்தனச்சோலை வனப்பகுதிக்குள் சென்றது.

    காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • கொடைரோடு ரெயில்நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • போலீஸ் நிலையம் கட்டிடம் ஆகியவை பாரமரிப்பு இல்லாமல் இருந்தது. அதனை அவர் புகைப்படம் எடுத்து க்கொண்டார்.

    கொடைரோடு:

    கொடைரோடு ரெயில்நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பதிவேடுகள், பிளாட்பாரம், கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள பழுது, மேல்பகுதியில் மரம் செடி கொடிகள் வளர்ந்திருப்பதையும் பார்வையிட்டார்.

    பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிட மாடியில் படுக்கை வசதி கொண்ட ஓய்வு அறை, ரெயில்வே போலீஸ் நிலையம் கட்டிடம் ஆகியவை பாரமரிப்பு இல்லாமல் இருந்தது. அதனை அவர் புகைப்படம் எடுத்து க்கொண்டார். மேலும் கார் டிரைவர்கள் அவரிடம் மனு அளித்தனர்.

    அதில் கொரோனா காலக்கட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கொடைரோடு ரெயில்நிலையத்தில் நிற்காமல் செல்ல அறிவுறுத்தப்பட்டது. அந்த நடைமுறை தற்போது தொடர்கிறது. எனவே ரெயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டி ருந்தனர். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆனந்த் தெரிவித்தார்.

    ஆய்வின் போது கொடை ரோடு ரெயில்நிலைய அதிகாரி அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • குண்டுப்பட்டி பகுதியில் மான் வேட்டையாடி, இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • குண்டுப்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் மான் வேட்டையாடி இறைச்சியை சமைத்தது தெரியவந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி பகுதியில் மான் வேட்டையாடி, இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் கணேசன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது குண்டுப்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் மான் வேட்டையாடி இறைச்சியை சமைத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து கடமான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். அவர் வேறு ஏதேனும் விலங்குகளை வேட்டையாடி உள்ளாரா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×