என் மலர்
நீங்கள் தேடியது "சீரமைப்பு பணிகளை தடுக்கும் வனத்துறையினர்"
- எழும்பள்ளம் ஏரி தூர் வாரும் பணி தொடங்கியது. நடைபெற்று வரும் பணிகளை கண்கா ணிக்க அப்பகுதியில் விவசாயிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு உரு வாக்கப்பட்டுள்ளது
- வேலையை செய்ய விடாமல் தினமும் இடையூறு செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் விவசாய பயன்பாட்டுக்கென எழும்பள்ளம் ஏரி முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. இந்த ஏரியை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்வேதா ராணி, துணைத் தலைவர் முத்துமாரி, கொடைக்கானல் ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையர் விஜய சந்திரிகா ஆகியோர் பொதுமக்களின் கோரிக்கையை முன்னெடு த்துச் சென்றதின் காரணமாக, பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார் தமிழக அரசிடம் முறையிட்டு ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இதன் காரணமாக கடந்த 5-ந்தேதி எழும்பள்ளம் ஏரி தூர் வாரும் பணி தொடங்கியது. நடைபெற்று வரும் பணிகளை கண்கா ணிக்க அப்பகுதியில் விவசாயிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு உரு வாக்கப்பட்டுள்ளது.இந்த விவசாயிகளை பணிகள் நடைபெற்று வரும் பகுதி களுக்குச் சென்று தாங்களும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள முயன்றனர்.
ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் மன்னவனூர் வனச்சரகர் நாதன் மோதல் போக்கை உருவாக்கி வருவதாகவும், வேலையை செய்ய விடாமல் தினமும் இடையூறு செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வனச்சரகர் நாதனை இடமாற்றம் செய்து எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணி இடையூறு இன்றி நடக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அவரைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்களை திரட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரி வித்துள்ளனர்.






