search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People Request"

    • குஜிலியம்பாறையில் காலை நேரத்தில் கரூர் பகுதிக்கு ஒரே பஸ் மட்டுமே உள்ளது.
    • இதனால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர்.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. மிகவும் வறட்சி யான பகுதியான இங்கு பெரும்பாலும் கூலித்தொழி லாளிகள், மில்வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் உள்ளனர். தற்போது குஜிலியம்பாறை தனித்தாலு காவாக இயங்கி வருகிறது.

    இப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரசு பஸ் மூலம் கரூர், திண்டுக்கல்லுக்கு சென்று வருகின்றனர். காலை நேரத்தில் கரூர் பகுதிக்கு ஒரே பஸ் மட்டுமே உள்ளது. இதனால் அவர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் அதிகளவு கூட்டம் கூடுவ தால் பஸ்சில் முண்டியடித்து செல்லவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

    இதனால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். கரூரில் இருந்து பாளையத்திற்கு அதிகளவு பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களை குஜிலியம்பாறை வரை இயக்கினால் கிராம மக்கள்சென்று வர ஏதுவாக இருக்கும். எனவே போக்கு வரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போடியில் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • பொதுமக்கள் சார்பில் போராட்ட அறிவிப்பு போஸ்டர் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது

    மேலசொக்கநாதபும்:

    தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் ராணிமங்கம்மாள் சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் குடிமகன்கள் எந்தநேரமும் குடித்துவிட்டு சாலையில் அரைகுறை ஆடையுடன் மயங்கி கிடப்பதும், பாட்டில்களை நடைபாதையில் உடைத்துவிட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும், குடிமகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி இப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், பேரூராட்சி அலுவலகத்திற்கும் புகார் அளித்தனர்.

    ஆனால் கடை அகற்றப்படாததால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். எனவே கடைகளை அகற்றாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று கரட்டுப்பட்டி பொதுமக்கள் சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட மலைக்கிரா மங்கள் அமைந்துள்ளது
    • அரசு பஸ் சேவையை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் மேலபூசனூத்து, கீழபூச னூத்து, சாந்திபுரம், முத்தூத்து உட்பட 20க்கும் மேற்பட்ட மலைக்கிரா மங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முருக்கோடை ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளிகளில் படித்து வரு கின்றனர்.

    வருசநாட்டில் இருந்து சிங்கராஜபுரம், பூசனூத்து வழியாக அரண்மனை ப்புதூர் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித காரணமும் இன்றி அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்பு மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே முத்தூத்து, பூசனூத்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிரா மங்களை சேர்ந்த மாண வர்கள் பள்ளிக்கு செல்ல சுமார் 5 கி.மீ தொலைவில் நடந்தோ அல்லது கூடுதல் தொகை கொடுத்து ஆட்டோக்களிலோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. இதே போல வெளியூர் செல்லும் பொதுமக்கள் பஸ்சிற்காக வருசநாடு வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சிங்கராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ள அரசு பஸ் சேவையை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×