என் மலர்
திண்டுக்கல்
- 6 மணிக்கு மாவிளக்கு,அக்னி சட்டி எடுத்து, பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
- அரிவாள் மற்றும் வேல்கம்புடன் காட்டுப் பகுதியில் வேட்டைக்குச் செல்லும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியில் ஆக்கலநாயக்கன் மந்தை சீலமுத்து நாயக்கனூரில் காளியம்மன், நாச்சார ம்மன் ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவில்க ளில் உற்சவ விழா கடந்த 2ந் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி அம்மன் வீதி உலா நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கரகம் பாலித்து வானவேடிக்கையுடன் கோவிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு மாவிளக்கு,அக்னி சட்டி எடுத்து, பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
பின்னர் பாரிவேட்டை நிகழ்ச்சியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து திருவிழாவின் இறுதி நாளான நேற்று அம்மன் ஸ்ரீதேவி வேடம் மற்றும் கருப்புசாமி வேடம் அணிந்து அரிவாள் மற்றும் வேல்கம்புடன் காட்டுப் பகுதியில் வேட்டைக்குச் செல்லும் வினோத நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் திருவிழாவிற்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்த னர்.
- சிலமாதங்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள ஜம்புளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(31). கூலித்தொழிலாளி. இவ ருக்கும் பாக்கியலட்சுமி(31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு ரோகிதாஸ்ரீ(4) என்ற மகளும், எழில்அமுதன்(1) என்ற மகனும் உள்ளனர்.
பாக்கியலட்சுமிக்கு கடந்த சிலமாதங்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தன்வீட்டிலேயே தூக்கு போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
சம்பவ இடத்திற்கு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன், ஏட்டு நல்லுச்சாமி ஆகியோர் வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
- போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(28). ஆட்டோ டிரைவர். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ேடாரியா லூர்துமேரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தார்.
- 2022-ம் ஆண்டில் திண்டுக்கல்லில் 52, பழனியில் 25, கொடைரோட்டில் 8 பேர் என மொத்தம் 85 பேர் இறந்துள்ளனர்.
- பள்ளி விடுமுறை நெருங்கி வருவதால் ரெயில்முன்பு மாணவர்கள் செல்பி எடுப்பது, தண்டவாளத்தில் மதுபானம் குடித்துவிட்டு மயங்கி விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரெயில் விபத்துகளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,
திண்டுக்கல் மாவட்ட த்திலேயே திண்டுக்கல், பழனி, கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு விபத்துகள் நடந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் திண்டுக்கல்லில் 52, பழனியில் 25, கொடைரோட்டில் 8 பேர் என மொத்தம் 85 பேர் இறந்துள்ளனர்.
பெரும்பாலும் தண்ட வாளத்தை கடக்கும்போதும், இரவு நேரங்களில் இயற்கை உபாதை கழிப்பதற்காக தண்டவாளம் அருகே வரு பவர்கள், ரெயில்பெட்டி களில் அஜாக்கிரதையாக அமர்ந்து வருபவர்களே விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர். எனவே அதிகம் விபத்து ஏற்படும் பகுதியில் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது பள்ளி விடு முறை நெருங்கி வருவதால் ரெயில்முன்பு நின்றுகொண்டு மாணவர்கள் செல்பி எடுப்பதையும் வாடிக்கையாக மாற்றி வருகின்றனர். இதனை தடுக்கவேண்டும். தண்டவாளம் அருகே மதுபானம் குடித்துவிட்டு அங்கேயே மயங்கி விழுந்து விடுகின்றனர். இதனாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயில் விபத்துகளை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
- வீட்டு பீரோவை உடைத்து அவர்கள் நகை, பணம் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி ச்சென்றனர்.
- தாங்கள் மறைத்து வைத்திருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்கசங்கிலி கொள்ளையர் கண்ணுக்கு படாததால் அது தப்பியது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள போடுவார்பட்டி தோட்டத்துவீட்டில் வசித்து வருபவர் ராசு என்ற கருப்புசாமி(54). விவசாயி. இவரது மனைவி செல்வி(45). நேற்று இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வீட்டுமுன்பு கட்டப்பட்டிருந்த நாய்க்கு பிஸ்கட்டுகளை வாங்கி போட்டுவிட்டு உள்ளே சென்றனர். வீட்டு பீரோவை உடைத்து அவர்கள் நகை, பணம் எதுவும் உள்ளதா என சோதனையிட்டனர். ஆனால் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி ச்சென்றனர்.
அதன்பிறகு கருப்புசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருந்தபோதும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்கசங்கிலி கொள்ளையர் கண்ணுக்கு படாததால் அது தப்பியது.
வீட்டில் இருந்த செல்போ னை மட்டும் அவர்கள் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசில் கருப்புசாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் முக்கிய தடயங்களை பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிறு குழந்தைகளுடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போதே மேற்கூரை பெயர்ந்து தலையிலும் உடலிலும் விழுவதால் காயங்கள் ஏற்பட்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
- தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து ஆதிதிராவிடர் மக்களுக்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி அரவக்குறிச்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசால் கட்டித் தரப்பட்ட ஆதிதி ராவிடர் குடியிருப்புகள் தற்போது மிகவும் பாழ் அடைந்த நிலையில் உள்ளது. இதில் வசிக்கும் மக்கள் கட்டிடங்கள் தினமும் ஒவ்வொரு பகுதியாக பெயர்ந்து விழுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமான சூழ்நிலையிலேயே குடியிருந்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிறு சிறு குழந்தைகளுடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கு ம்போதே மேற்கூரை பெயர்ந்து தலையிலும் உடலிலும் விழுவதால் அவ்வப்போது காயங்கள் ஏற்பட்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது என வருத்தத்தோடு தெரிவித்தனர்.
கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை எந்தவித பராமரிப்பு பணிகளும் செய்யாமல் உள்ள இக்குடியிருப்புகளில் வாழும் மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு முறை அதிகாரிகளிடம் இந்த வீடுகளின் அவல நிலை குறித்து பலமுறை புகார் கொடுத்தனர். அவ்வப்போது வெறுமனே அதிகாரிகள் வந்து புகைப்படம் மட்டுமே எடுத்துச் செல்கின்றனர். இந்த வீடுகளை மராமத்து பணி செய்வதற்கு எந்த அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்த பாடில்லை.
இந்நிலை தொடர்ந்தால் இந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இன்றி போய்விடும். எனவே தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து இங்கு வாழும் ஆதிதிராவிடர் மக்களுக்கு புதிய வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காட்டுயானை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
- காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, பெருங்கானல், மங்களம்கொம்பு, தடியன்குடிசை, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் சம்பவத்தன்றுஇரவு பெருங்கானலை சேர்ந்த விவசாயியான கரியமங்களம், சோனைமுத்து, மணிவண்ணன், என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்துக்குள் ஒற்றை யானை புகுந்தன. அப்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு, போன்ற வற்றை நாசம் செய்தன.
பின்னர் அந்த வழியாக வந்த காட்டு யானை கல்லாறு வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே பெருங்கானல் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பாராளுமன்ற வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர்:
தி.மு.க தலைமை மாநிலம் முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தர விட்டது. இதனையடுத்து வேடசந்தூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 16 ஆயிரம் உறுப்பினர் சேர்க்கும் பணி நேற்று காலை முதல் தொடங்கியது. பாரதிநகரில் தொடங்கிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பாராளுமன்ற வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார்.
வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மோகன், தெற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் வெங்கடசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், வேடசந்தூர் பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர் மற்றும் ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய அவைத் தலைவர் ஆரோன், பேரூராட்சி தலைவர் மேகலாகார்த்தி கேயன் உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள் இந்த பாதையில் நின்றால் அவர்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்காது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- ஒரே நாளில் இந்த பாதையில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், சிறுவர்கள் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து பாத யாத்திரையாக பழனி க்கு வந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். மேலும் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தினந்தோறும் வெள்ளி க்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தந்த சப்பரம், தங்கமயில், வெள்ளி யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி சன்னதி வீதி, கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக கடந்த வாரம் கூலிங் பெயிண்ட் பாதை அமைக்க ப்பட்டது. தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள் இந்த பாதையில் நின்றால் அவர்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்காது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்கள் இந்த பாதையில் அதிக அளவில் நடந்து வருவதால் ஈரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பின்னால் வரும் பக்தர்கள் வழுக்கி கீழே விழுந்து விடுகின்றனர். நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த பாதையில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், சிறுவர்கள் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டது.
எனவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், பக்தர்கள் சிரமம் இன்றி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திரு க்கல்யாணம் நடைபெறு கிறது. நாளை கிரி வீதி தேரடியில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
- பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படும் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை - நகராட்சியே சந்தையை எடுத்து நடத்த முடிவு செய்தது.
- ஆட்டுச்சந்தையிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என அறிவிப்பு பலகை அங்கு ஒட்டப்பட்டு இருந்தது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை களில் கால்நடை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கும் இந்த சந்தை திங்கட்கிழமை பிற்பகல் வரை நடைபெறும். இதே போல வியாழக்கிழமைகளில் ஆடு, கோழி, சேவல், தோல் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாடு, ஆடுகளை வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் வியாபாரிகளிடம் மாட்டுக்கு ரூ.450 வரையிலும், ஆட்டுக்கு ரூ.200, சேவலுக்கு ரூ.140 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும் தொகை சந்தைக்கு வரி கட்டும் தொகையிலேயே சென்று விடுவதால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு வருவதை தவிர்த்து வந்தனர்.
இதனால் கன்னிவாடி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட சந்தைகளைத் தேடி வியாபாரிகள் செல்லும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நகராட்சி அதிகாரி களிடம் தொடர்ந்து புகார்கள் வந்ததால் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஏற்கனவே ஏலம் எடுத்தவர்கள் ரூ.1 கோடியே 71 லட்சம் கட்டணம் செலுத்தி இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் தாங்கள் இந்த தொகையை நகராட்சிக்கு செலுத்தியதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறினர்.
இதன் காரணமபாகவே கூடுதல் தொகை வசூலிப்ப தாகவும் தெரிவித்தனர். எனினும் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்க ப்படும் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததால் இந்த முறை நகராட்சியே சந்தையை எடுத்து நடத்த முடிவு செய்தது.
அதன்படி நகராட்சி கட்டுப்பாட்டில் வந்த வாரச்சந்தை இன்று முதல் செயல்பட தொடங்கியது. இதற்காக சந்தைக்கு வரும் நபருக்கு ரூ.50 கட்டணம், எருது, பசு, குதிரை, எருமை, கழுதை உள்ளிட்ட கால்நடைகளுக்கு ரூ.100, கன்றுக்குட்டிக்கு ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஏற்கனவே வசூலிக்க ப்பட்டு வந்த கட்டணத்தை விட இது மிகவும் குறைவு என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தையிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என அறிவிப்பு பலகை அங்கு ஒட்டப்பட்டு இருந்தது.
ஆட்டுக்கு ரூ.25, கோழி, சேவல், வாத்து, ஆகியவ ற்றுக்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தனியாரிடம் இருந்த ஒட்டன்சத்திரம் வாரச்சந்தை நகராட்சி கட்டுப்பாட்டில் வந்ததால் இனி வரும் நாட்களில் சந்தைக்கு அதிக அளவு வியாபாரிகள் வரக்கூடும் என தெரிவித்த னர். இன்று நடந்த சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சந்தையில் ஏலம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் நகர் மன்ற தலைவர் திருமலை ச்சாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, ஆணையாளர் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- கொப்பரை, வளையம், வட்டசட்டி, சாதாரண தீச்சட்டி என 4 விதங்களில் அக்னிசட்டிகள் தயாரி க்கப்பட்டு ரூ.50 முதல் ரூ.140 வரை தரத்திற்கேற்ப விற்கப்படுகின்றன.
- தொட ர்ந்து அதிக அளவில் ஆர்ட ர்கள் வருவதால் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
பெரியகுளம்:
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் சின்னமனூர் உள்பட பல்வேறு பகுதி களில் கோவில் திருவிழாவு க்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கி உள்ளனர்.
வேண்டுதல் நிறைவேறியவுடன் பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி க்கடன்களை செலுத்தி வருகின்றனர். மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என அடுத்தடுத்த மாதங்களிலும் கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதற்காக கோவில்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி, ஜி.கல்லு ப்பட்டி, புல்லக்காபட்டி, கைலாசபட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட இடங்களில் அக்னிசட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொப்பரை, வளையம், வட்டசட்டி, சாதாரண தீச்சட்டி என 4 விதங்களில் அக்னிசட்டிகள் தயாரி க்கப்படுகின்றன. ரூ.50 முதல் ரூ.140 வரை தரத்தி ற்கேற்ப விற்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுழலும் சக்கரத்தில் வைக்கப்பட்ட குழைவு மண்ணை தொழி லாளர்கள் அக்னி சட்டி வடிவத்துக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் வெயிலில் காய வைத்து அடிப்பகுதியை மண் கொண்டு அடைக்கி ன்றனர்.
மேலும் சூளையில் வைத்து பதப்படுத்து கின்றனர். இறுதியாக சுத்தம் செய்து வர்ணம் பூசி விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி உள்ளதால் அதிக அளவில் அக்னிசட்டிகள் தேவை ப்படும். எனவே இரவு பகலாக தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தொட ர்ந்து அதிக அளவில் ஆர்ட ர்கள் வருவதால் மண்பா ண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
- நேற்று இரவு பழனி புறநகர் பகுதியில் மலைக்கோவிலுக்கு பின்புறம் சென்ற போது லாரியை நிறுத்தி விட்டு சென்றபோது மறைந்திருந்த ஒரு கும்பல் கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர்.
- எனவே போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரபடுத்தவும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
திண்டுக்கல்லைச் சேர்ந்த லாரி டிரைவர் ஹரிஹரன் (வயது 25). இவர் எர்ணாகுளத்திற்கு பொருட்களை ஏற்றி சென்று கொண்டு இருந்தார். நேற்று இரவு பழனி புறநகர் பகுதியில் மலைக்கோவிலுக்கு பின்புறம் சென்ற போது லாரியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றார். அப்போது மறைந்திருந்த ஒரு கும்பல் ஹரிஹரனை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிஹரன் தன்னிடம் இருந்த ரூ.2000 பணத்தை கொடுத்தார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சொல்லி விட்டு அக்கும்பல் தப்பி ஓடி விட்டனர். இதனால் ஹரிஹரன் போலீசில் புகார் செய்தால் நேர விரயமாகி விடும் என நினைத்து சென்று விட்டார்.
பழனிக்கு வரும் வியாபாரிகள், டிரைவர்கள் ஆகியோர் தொடர்ந்து இது போல் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்படுவது அவ்வ ப்போது நடந்து வருகிறது. எனவே போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரபடுத்தியும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






