என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் இளம்பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    திண்டுக்கல்லில் இளம்பெண் தற்கொலை

    • சிலமாதங்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள ஜம்புளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(31). கூலித்தொழிலாளி. இவ ருக்கும் பாக்கியலட்சுமி(31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு ரோகிதாஸ்ரீ(4) என்ற மகளும், எழில்அமுதன்(1) என்ற மகனும் உள்ளனர்.

    பாக்கியலட்சுமிக்கு கடந்த சிலமாதங்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தன்வீட்டிலேயே தூக்கு போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    சம்பவ இடத்திற்கு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன், ஏட்டு நல்லுச்சாமி ஆகியோர் வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×