என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேட்டைக்கு செல்லும் பக்தர்களை படத்தில் காணலாம்.
சாணார்பட்டி அருகே கோவில் திருவிழாவில் வேல்கம்புடன் வேட்டைக்கு செல்லும் வினோத நிகழ்ச்சி
- 6 மணிக்கு மாவிளக்கு,அக்னி சட்டி எடுத்து, பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
- அரிவாள் மற்றும் வேல்கம்புடன் காட்டுப் பகுதியில் வேட்டைக்குச் செல்லும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியில் ஆக்கலநாயக்கன் மந்தை சீலமுத்து நாயக்கனூரில் காளியம்மன், நாச்சார ம்மன் ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவில்க ளில் உற்சவ விழா கடந்த 2ந் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி அம்மன் வீதி உலா நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கரகம் பாலித்து வானவேடிக்கையுடன் கோவிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு மாவிளக்கு,அக்னி சட்டி எடுத்து, பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
பின்னர் பாரிவேட்டை நிகழ்ச்சியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து திருவிழாவின் இறுதி நாளான நேற்று அம்மன் ஸ்ரீதேவி வேடம் மற்றும் கருப்புசாமி வேடம் அணிந்து அரிவாள் மற்றும் வேல்கம்புடன் காட்டுப் பகுதியில் வேட்டைக்குச் செல்லும் வினோத நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் திருவிழாவிற்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்த னர்.






