என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் பதவி ஏற்பு விழா தருமபுரி குமாரசா மிப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் அறங்காவலர் குழு உறுப்பி னர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமி ப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக சேகரன், முருகவேல், விக்னேஷ், சதீஷ்குமார் மற்றும் சண்முகசுந்தரி பாரி ஆகியோர் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டு ள்ளனர். புதிதாக நியமிக்க ப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் பதவி ஏற்பு விழா தருமபுரி குமாரசா மிப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் அறங்காவலர் குழு உறுப்பி னர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அறங்காவல குழு தலைவராக சேகரன் தேர்வு செய்யப்பட்டார்.

    புதிதாக பொறு ப்பேற்றுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்களை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நேரில் வாழ்த்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாட்டான் மாது, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கவுதமன், முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாட்டுகானூர் வழியாக பாலக்கோடு - தருமபுரி பிரதான சாலை வரை செல்லும் கிராம சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக பெரிய பள்ளங்கள் சாலையில் ஏற்பட்டுள்ளது.
    • இந்த சாலையில் செல்பவர்கள் வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், சோகத்தூர் பஞ்சாயத்தில் உள்ள ரெட்டிஅள்ளி, சவுளுப்பட்டி, மாட்டு கானூர் உள்ளிட்ட கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இங்கு 5000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமங்கள் தருமபுரி நகரத்தை ஒட்டியே உள்ளது.

    இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் அதிகம் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத தால் கடந்த 10 ஆண்டுகளாக பொது மக்கள் மிகவும் சிரமபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக குமாரசாமி பேட்டை ரயில்வே மேம்பாலம் முதல் மாட்டுகானூர் வழியாக பாலக்கோடு - தருமபுரி பிரதான சாலை வரை செல்லும் கிராம சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக பெரிய பள்ளங்கள் சாலையில் ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது.

    மேலும் மழைக்கால ங்களில் மழைநீர் சாலையில் உள்ள குழிகளில் தேங்குவதால் வாகனங்களில் செல்ல முடிவதில்லை.

    இதனால் பலமுறை விபத்துகள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் தெருக்களில் உள்ள இணைப்பு சாலைகளும் பழுதடைந்து காணப்படுகிறது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் பழுதடைந்த சாலையால் அவதியடைகின்றனர்.

    மேலும் இந்த கிராமங்களில் ஒகேனக்கல் குடிநீர் விநியோகமும் முறையாக இல்லை.

    இதனால் குடிநீர் எடுத்துவர 2 கிலோமீட்டர் தூரமுள்ள குமாரசாமி பேட்டைக்கு வந்து தண்ணீர் எடுத்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. சாலை மற்றும் தெருக்களில் மின் விளக்குகள் எரிவதில்லை.

    மழைநீர் வடிகால் வசதி முறையாக இல்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்குகிறது.

    கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சுடுகாடுக்கு செல்லும் பாதையும் குறுகலாகவும்,குண்டும், குழியுமான மண்சாலையாக உள்ளது. மேற்கண்ட இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் ரெட்டி அள்ளி, சவுளுபட்டி, மாட்டு கானூர் கிராமங்களில் சாலை வசதி உள்ளிட்ட மக்களின் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • உள்ளாட்சி பணியாளர்களுக்கு தனியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஊதியம் வழங்க வேண்டும்.
    • பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், அரசு அறிவித்த ஊதிய உயர்வு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் கோரிக்கை விளக்க மாவட்ட பேரவை கூட்ட மாவட்ட த்தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு தனியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஊதியம் வழங்க வேண்டும்.

    பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், அரசு அறிவித்த ஊதிய உயர்வு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணிகளை செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார செய்வது, ஆகஸ்ட்-9 ம் தேதி சென்னையில் நடைபெறும் வெள்ளையனே வெளியேறு ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் கனகா, சுமதி, கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், துணை செயலாளர் மாதேஸ்வரன், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி, துணை செயலாளர் நடராஜன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    கூட்டத்தில் கட்டட சங்க மாவட்ட செயலாளர் ஏ.சி.மணி, துணைத்தலைவர் முருகேசன், விசைத்தறி மாவட்ட செயலாளர் சாமிநாதன், ஆஷா பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மேனகா, பள்ளி தூய்மை பணியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் அனுசுயா நன்றி கூறினார்.

    • தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்யப்பட வேண்டும்.

    தருமபுரி,

    உரங்களை விவசாயி களுக்கு விற்பனை செய்யும் பொழுது விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் மற்றும் இதர இணை இடுபொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாய ப்படுத்தக் கூடாது என உர விற்பனை யாளர்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அறிவுறுத்தி யுள்ளர்.

    தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விஜயா வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தருமபுரி மாவட்டத்தில் தற்போது காரீப் பருவம் சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் இந்த பருவத்திற்கு தேவையான யூரியா-4044 மெ.டன், டி.ஏ.பி.-2133 மெ.டன், பொட்டாஷ்-781 மெ.டன், காம்ப்ளஷ்-7280 மெ.டன், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்யப்பட வேண்டும்.

    விவசாயிகளின் விருப்பதற்கு மாறாக மானிய விலை உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது, உரக்கடைகளில் உள்ள உர இருப்பும்.

    விற்பனை முனைய கருவியில் உள்ள உர இருப்பும் சரியாக இருக்க வேண்டும், உர இருப்பு பலகையை விவசாயிகளின் பார்வையில் படும் வகையில் உரக்கடையில் வைக்குமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படா மல் கிடங்குளில் இருப்பு வைத்திருப்பது O-படிவம் அனுமதியின்றி உர விற்பனை செய்தல், ஒரே நபர்களுக்கு அதிகப்படி யான மானிய உரங்களை விற்பனை செய்வது, அரசு மானிய உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்து உள்மாவட்டத்திற்கு அல்லது உள்மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    அவ்வாறு குற்றங்கள் கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி உர உரிமம் நிரந்தரமாக இரத்து செய்ய நேரிடும் என உர விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.

    மேலும் உர தொடர்பான புகார்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிட விவசாயிகள் அனுகலாம் என வேளாண்மை இணை இயக்குநர் விஜயா தெரிவித்துள்ளார்.

    • நேற்றிரவு பெண் குழந்தைக்கு திடீர் என உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அங்கு மருத்துவ பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளை சத்தமிட்டு கூப்பிட்டுள்ளார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், சிவாடி அருகே உள்ள ஊத்துப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது30) விவசாயி. இவருக்கும், ஆனந்தி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆனந்தி பிரசவத்திற் காக, பாளையம்புதூர் அரசு சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆனந்திக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பெண் குழந்தை பிறந்த நாளன்று இருந்து சேர்க்கப் பட்ட மருத்துவமனை யிலேயே தாயும், குழந்தையும் அங்கேயே சிகிச்சையில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பெண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது. நேற்றிரவு பெண் குழந்தைக்கு திடீர் என உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது பிரசவ வார்டில் இருந்த குழந்தையின் தாயார் ஆனந்தி, அங்கு மருத்துவ பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளை சத்தமிட்டு கூப்பிட்டுள்ளார். ஆனால் அப்போது யாரும் அவரது சத்தத்தை கேட்டு பணியில் இருந்தவர்கள் குழந்தைக்கு சிகிச்சை வழங்க வரவில்லை என கூறப்படுகிறது.

    இரவு 11.30 மணி என்பதால், பிரசவ வார்டை பூட்டி விட்டு, மருத்துவர்கள் யாரும் இல்லாமல், ஒரு நர்சு மட்டுமே அவரது அறையில் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்போது மருத்துவ பணியில் இருந்தவர்கள் யாரும், பிரசவ வார்டில் உள்ள பெண் குழந்தைக்கு சிகிச்சை வழங்க யாரும் வராததாலும், இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததாலும் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மந்தப்பட்ட மருத்துவமனை முன்பு இன்று காலை திரண்டு, அலட்சிய போக்கால் பெண் குழந்தையின் இறப்பு காரணமான மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் விரைந்து வந்து, பாதிக்க ப்பட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சமரச பேச்சு வார்த்தைக்கு பின், குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சம்மந்தப்பட்ட துறையினர் உறுதியளித்த பின்னர், இறந்த பெண் சிசுவின் சடலத்தை பெற்றோர்கள் வாங்கி சென்றனர். பிறந்த மூன்று நாட்களே ஆன பெண் குழந்தை பிரசவித்த மருத்துவமனையிலே இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழரசிக்கும், இவருடைய பக்கத்து வீட்டில் ஒருவருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
    • தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள பாளையம்பூதூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவர் ஜல்லி உடைக்கும் கிரசரில் வாட்ச் மேன் ஆக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 55). இருவருக்கும் திருமணமாகி 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் தமிழரசிக்கும், இவருடைய பக்கத்து வீட்டில் ஒருவருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

    இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழரசி கணவரும், மகனும் இறந்தனர்.

    தமிழரசிக்கு பக்கத்து வீட்டில் உள்ளவரால் தொடர்ந்து அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

    இதில் நேற்று மனவிரக்தி அடைந்த தமிழரசி விஷத்தன்மை கொண்ட இலையை வீட்டில் அடுப்பில் வேக வைத்து தண்ணீரை குடித்தார்.

    இதனால் சுய நினைவில்லாமல் அவர் வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முனியம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த

    இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • கோபித்து கொண்டு சந்தியா தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி அருகேயுள்ள ஆட்டுகாரம்பட்டி வீரபத்திரன் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சந்தியா (வயது20), பிரியா என்கிற 2 மகள்கள் உள்ளனர். சந்தியா தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சந்தியாவை, அவரது தாய் மாமாவான பி.ஜெட்டிஅள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு சந்தியா தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இதையடுத்து நேற்று சந்தியா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டில் தூக்கில் பிணமாக கிடந்த சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
    • ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.

    முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள ஈத்கா மைதானம் மற்றும் மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த தொழுகைக்குப் பின்னர் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு ஆட்டு இறைச்சி தானமாக வழங்கினர்.

    தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரி ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை இன்று காலை நடைபெற்றது.

    இதில் தருமபுரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    கூட்டமைப்பின் தலைவர் அப்துல் காதர், செயலாளர் இக்பால், மாவட்ட முத்தவல்லிகள் சங்க தலைவர் ஜப்பார், செயலாளர் பாபு, நிர்வாகிகள் முஸ்தாக், ஐ.எஸ்.பாபு, இப்ராகிம், நஜீப், ரிஸ்வான், நசீர் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    இதேபோன்று பாலக்கோட்டில் உள்ள மசூதிகளில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடையுடன் கலந்து கொண்டனர். இதே போன்று பென்னாகரம் மற்றும் அரூரில் உள்ள மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.இந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். பின்னர் ஏழைகளுக்கு குர்பானி கொடுத்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், ஏரியூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையை தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு ஆட்டு இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகள் மற்றும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    • தருமபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவரும், தொழிலதிபருமான பாஸ்கர் புதிய கிளையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
    • ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுப்புலட்சுமி கணினி சேவையை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 536-வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சேலம் மண்டல மேலாளர் குமரேசன் தலைமை தாங்கினார்.

    தருமபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவரும், தொழிலதிபருமான பாஸ்கர் புதிய கிளையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

    பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார்.

    மூகாம்பிகை லாரி சர்வீஸ் உரிமையாளர் கே. மகாலிங்கம் பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து வைத்தார்.

    ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுப்புலட்சுமி கணினி சேவையை தொடங்கி வைத்தார்.

    விழாவில் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி நந்தி சிவம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன், காரிமங்கலம் அரிமா சங்கத் தலைவர் பொன்னுசாமி, கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வங்கிக் கிளை மேலாளர் விஜயன் வரவேற்று பேசினார்.

    முடிவில் மேலாளர் சங்கர் நன்றி கூறினார்.

    • இரு கடைகளில் இருந்து மட்டும் தரம் குறைவான மீன்கள் சுமார் 20 கிலோ அளவிலானது பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு உரிமம் ஒரு சில கடைகள் மட்டும் பெற்றுள்ளனர். எடுக்காதவர்கள், புதுப்பிக்காதவர்கள் 7 தினங்களுக்குள் விண்ண ப்பிக்க வலியுறுத்தப்பட்டது

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்டம் முழுதும் உள்ள மீன் விற்பனை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க பரிந்துரைத்துள்ளார். அதன் அடிப்படையில்

    தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா மற்றும் மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன் வழிகாட்டலின் படி, பாலக்கோடு மீன் மார்க்கெட் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்க டேசன், மீன்வள பாதுகாவலர் முருகன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    10-க்கும் மேற்பட்ட கடைகளில் மீன்கள் பார்வையிட்டு இருப்பு மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த திலேபியா,ரோக், ரூப்சந்த், மிருதுளா மீன்கள் என அனைத்து வகையான மீன்களையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் மீன்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க, மீன்களில் பார்மலின் உபயோகப் படுத்தப்பட்டு இருக்கிறதா என பார்மலின் டெஸ்ட் கிட் உபகரணம் கொண்டு வெளி மாநில (ஆந்திரா) மீன் மற்றும் உள்ளூர் மீன்களை ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் பார்மலின் ஏதும் கலந்து விற்பனை செய்யப்படவில்லை என அறியப்பட்டது.

    இரு கடைகளில் இருந்து மட்டும் தரம் குறைவான மீன்கள் சுமார் 20 கிலோ அளவிலானது பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

    மேற்படி கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 விதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் ஒரு சில கடைகள் மட்டும் பெற்றுள்ளனர். எடுக்காதவர்கள், புதுப்பிக்காதவர்கள் 7 தினங்களுக்குள் விண்ண ப்பிக்க வலியுறுத்தப்பட்டது.

    உணவு பாதுகாப்பு சான்றிதழ் எடுக்காவிடில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி உடனடி அபராதம் ஐந்தாயிரம் விதிக்க மாவட்ட நியமன அலுவலர் உத்தர விட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.

    மேலும் இந்த ஆய்வுகள் மாவட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் அலுவலர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

    • முதல் நாளான நேற்று மொன்னையன் கொட்டாய் கிராமத்து பொதுமக்கள் சாமிக்கு முளைப்பாரி, தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
    • கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனைகள் நடை பெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி அருகே எம்.கே.நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை தொடங்கியது.

    முதல் நாளான நேற்று மொன்னையன் கொட்டாய் கிராமத்து பொதுமக்கள் சாமிக்கு முளைப்பாரி, தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    இதனை தொடர்ந்து மாலை கணபதி பூஜை, லட்சுமி நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேச பலி, முதல் கால மகா பூஜைகள் பூர்ணாஹுதி பூஜைகளும் தீப ஆராதனைகளும் நடைபெற்றது.

    முக்கிய நாளான இன்று விடியற்காலை 4.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், காலை 7.30 மணி முதல் ஒன்பது மணி வரை மாரியம்மன் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனைகள் நடை பெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது மேலும் புதிதாக பிரதி ஷ்டை செய்யப்பட்ட மாரியம்ம னுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

    அதேபோல் விநாயகர் முருகர் நவகிரகங்கள் உள்ளிட்ட சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • வீரபத்திரசுவாமி பூஜை செய்து, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • தொடர்ந்து இன்று மண்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் எருது கட்டும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    தருமபுரி, 

    தருமபுரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் செங்காளியம்மன் கோவில் திருவிழா, 17 ஆண்டுகளுக்கு பின் கடந்த 25-ந் தேதி கொடியேற்ற, கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    இதனை தொடர்ந்து 16 கிராமத்து மக்கள் ஒன்று சேர்ந்து பட்டாளம்மன், ஊர்மாரியம்மன், மாரியம்மன், காளியம்மன் ஆகிய அனைத்து கோவிலுக்கும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று மண்டு மாரியம்மன் சாமிக்கு கங்கை பூஜை மற்றும் ஏர்ஓட்டுதல், விதை விதைத்தல், கூழ்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து வீரபத்திரசுவாமி பூஜை செய்து, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபடும் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு பட்டாளம்மன் கோவிலில் இருந்து குதிரை சக்தி கரகம் கொண்டு வந்து, கிருஷ்ணாபுரம் மண்டு மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வீட்டிற்கு வருதல் நிகழ்ச்சியும் மற்றும் கிருஷ்ணாபுரம் எல்லையில் அனைத்து கிராம மகுமரிகளுக்கு வந்தடைதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பின்னர் பிரசித்தி பெற்ற நிகழ்வான மண்டு மாரியம்மன் கோவில் முன்பு, கரகம் தலை கூடுதல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக, பம்பை, தாரை தப்பட்டை வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கையுடன் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று மண்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் எருது கட்டும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கரகப் பூமாலைகள் கிணற்றில் விடுதல் நிகழ்ச்சியும், இதை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை பூப்பத்திரி வழங்குதல் நிகழ்ச்சியுடன் கோவில் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம், ஆண்டிஅள்ளி மற்றும் கொண்டம்பட்டி ஆகிய 3 ஊராட்சிக்குட்பட்ட 16 கிராமங்களைச் சேர்ந்த விழாக்குழுவினர், ஊர்கவுண்டர்கள், தர்மகர்த்தாக்கள் மற்றும் பக்தர்கள் வருகின்றனர்.

    ×