என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானிய விலையில் உரங்களை முனைய கருவி மூலம் விற்பனை செய்ய வேண்டும்
- தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்யப்பட வேண்டும்.
தருமபுரி,
உரங்களை விவசாயி களுக்கு விற்பனை செய்யும் பொழுது விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் மற்றும் இதர இணை இடுபொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாய ப்படுத்தக் கூடாது என உர விற்பனை யாளர்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அறிவுறுத்தி யுள்ளர்.
தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விஜயா வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தருமபுரி மாவட்டத்தில் தற்போது காரீப் பருவம் சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் இந்த பருவத்திற்கு தேவையான யூரியா-4044 மெ.டன், டி.ஏ.பி.-2133 மெ.டன், பொட்டாஷ்-781 மெ.டன், காம்ப்ளஷ்-7280 மெ.டன், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்யப்பட வேண்டும்.
விவசாயிகளின் விருப்பதற்கு மாறாக மானிய விலை உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது, உரக்கடைகளில் உள்ள உர இருப்பும்.
விற்பனை முனைய கருவியில் உள்ள உர இருப்பும் சரியாக இருக்க வேண்டும், உர இருப்பு பலகையை விவசாயிகளின் பார்வையில் படும் வகையில் உரக்கடையில் வைக்குமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.
உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படா மல் கிடங்குளில் இருப்பு வைத்திருப்பது O-படிவம் அனுமதியின்றி உர விற்பனை செய்தல், ஒரே நபர்களுக்கு அதிகப்படி யான மானிய உரங்களை விற்பனை செய்வது, அரசு மானிய உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்து உள்மாவட்டத்திற்கு அல்லது உள்மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு குற்றங்கள் கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி உர உரிமம் நிரந்தரமாக இரத்து செய்ய நேரிடும் என உர விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.
மேலும் உர தொடர்பான புகார்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிட விவசாயிகள் அனுகலாம் என வேளாண்மை இணை இயக்குநர் விஜயா தெரிவித்துள்ளார்.






