என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொப்பூர் அருகே தொடர் பிரச்சனையால் விஷத்தன்மை கொண்ட இலையை அடுப்பில் வேக வைத்து குடித்த பெண் பலி
- தமிழரசிக்கும், இவருடைய பக்கத்து வீட்டில் ஒருவருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
- தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள பாளையம்பூதூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவர் ஜல்லி உடைக்கும் கிரசரில் வாட்ச் மேன் ஆக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 55). இருவருக்கும் திருமணமாகி 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் தமிழரசிக்கும், இவருடைய பக்கத்து வீட்டில் ஒருவருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழரசி கணவரும், மகனும் இறந்தனர்.
தமிழரசிக்கு பக்கத்து வீட்டில் உள்ளவரால் தொடர்ந்து அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் நேற்று மனவிரக்தி அடைந்த தமிழரசி விஷத்தன்மை கொண்ட இலையை வீட்டில் அடுப்பில் வேக வைத்து தண்ணீரை குடித்தார்.
இதனால் சுய நினைவில்லாமல் அவர் வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முனியம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த
இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






