என் மலர்
தர்மபுரி
- மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- பொதுமக்கள் மருத்துவ ஏற்றி வந்த 4 லாரிகளையும் சிறை பிடித்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தருமபுரி,
தருமபுரி நகரம், நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளை மருத்துவக் கல்லூரிக்கு முன்புறத்தில் கொட்டி சேகரித்து வருகின்றனர்.
சேகரித்து வரும் மருத்துவ கழிவுகளை முறையாக நகராட்சி மூலம் பயோமெட்ரிக் முறையில் அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு தருமபுரி நகராட்சி நிர்வாகம் முன் வராததால் மருத்துவமனை நிர்வாகம் தனியாருக்கு ஒப்பந்தம் பேசி அதன் மூலமாக டிப்பர் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை ஏற்றிச்சென்று திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் ஒப்பந்ததாரர் மருத்துவ கழிவுகளை நேற்று இரவு 11-மணியளவில் 4 டிப்பர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரம் பகுதி வயல்வெளிகளில் உள்ள பள்ளங்களில் கொட்டியுள்ளனர்.
அப்பொழுது கடுமையாக துர்நாற்றம் வீசியது. மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மருத்துவ ஏற்றி வந்த 4 லாரிகளையும் சிறை பிடித்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்து மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறினர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீண்டும் மருத்துவ கழிவுகளை டிப்பர் லாரிகளில் ஏற்றி கொண்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற்று வரும் கட்டிடம் அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் மாணவ ர்களுக்கும், மருத்துவ பேராசிரியர்களுக்கும், நோயாளிகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்லூரியின் உள்ளிருப்பு மருத்துவர் நாகவேந்தன் கூறும்போது கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.
இது மருத்துவக் கழிவுகள் அல்ல, மருத்துவமனைக்கு உள்நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு கழிவுகள், இலைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தான்.
மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் மருத்துவ கழிவுகளை முறையான பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மூலம் அப்புறப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
- காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் திடீரென்று நேற்றிரவு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
- கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில் அரூர் கோட்டப்பட்டி, மொரப்பூர், கம்மைநல்லூர், பள்ளிப்பட்டி, கோபி நாதம்பட்டி, பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரூர் காவல் நிலையத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் திடீரென்று நேற்றிரவு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளில் தன்மை குறித்தும், அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர பாபுவிடம் கேட்டறிந்தார்.
அதன்பிறகு அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
அரூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் வாதி, பிரதிவாதிகளிடம் புகா ர்களை பெற்றுக்கொண்டு சரியான முறையில் அவர்க ளுக்கு உரிய மரியாதைகள் கொடுத்து முறையாக விசா ரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முருகன் உடன் இருந்தார்.
- இணைய வழிமுறையில் நடைபெறும் இந்த தேர்வை மொத்தம் 470 தேர்கள்எழுதுகிறார்கள்.
- தேர்வு மையங்களில் பஸ்கள் நின்று செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தருமபுரி,
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நாளை (சனிக்கிழமை) நடத்தப்படும் உதவி சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 470 பேர் எழுதுகிறார்கள்.
இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் உதவி சிறை அலுவலர் பதவிக்கான கொள்குறி வகை போட்டிதேர்வு நாளை (சனிக்கிழமை) முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரண்டு நேரங்களில் 5 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இணைய வழிமுறையில் நடைபெறும் இந்த தேர்வை மொத்தம் 470 ேர்வர்கள்எழுதுகிறார்கள்.
இந்த தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் பஸ்கள் நின்று செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்வை எழுதும் தேர்வர்கள் நாளை காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் கடைசி நேரம் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
இந்த தேர்வை எழுதும் தேர்வர்கள் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடை பிடிக்குமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரன் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருப்பது விசா ரணையில் தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் சந்திரசேகரனை கைது செய்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக மருத்து வத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அரூர் அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரகாஷ் மற்றும் குழுவினர் எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சந்திரசேகரன் (வயது42) என்பவர் பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக டாக்டர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் எந்தவித உரிமமும் பெறாமலும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவு இல்லா மலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த போலி டாக்டர் என்பதும் உறுதியானது.
கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரன் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருப்பது விசா ரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மருத்துவ அலுவலர் அருண் பிரகாஷ் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் சந்திரசேகரனை கைது செய்தனர். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி மருந்துகள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான போலி டாக்டரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமாரின் அரூர் வட்ட வழங்கல் அலுவலர் செங்கோட்டையன் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த முதியவரின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்கினார்.
- சம்பவத்தை கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்களும் வட்ட வழங்கல் அலுவலரை பாராட்டினார்கள்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சந்தப்பட்டி ஊராட்சி நாச்சினாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சை கவுண்டர் (வயது83) இவரும், இவரது மனைவி ருக்கும்மாள் (75) ஆகிய இருவரும் அந்த கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.
வயது முதிர்வின் காரணமாக கூலி வேலைக்கும் செல்ல முடியாமல் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு குடும்ப அட்டை இல்லை. இதனால் ரேஷன் பொருட்களை வாங்கவும், அரிசி வாங்கி சமைக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் மொரப்பூர் ராசலாம்பட்டி போஸ்ட் ஆபீஸ் அருகில் இயங்கும் அரசு இ-சேவை மையத்தில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தார்.
அப்போது அந்த முதியவரின் வயது முதிர்வு நிலையை கருத்தில் கொண்டு மையத்தின் உரிமையாளர் சுகந்தி குமரவேல் என்பவர் அரூர் வட்ட வழங்கல் அலுவலர் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்.
அந்த முதியவரின் குடும்பத்தின் நிலையை அரூர் வட்ட வழங்கல் அலுவலர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட வழங்கல் அலுவலருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமாரின் அரூர் வட்ட வழங்கல் அலுவலர் செங்கோட்டையன் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த முதியவரின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்கினார்.
குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த முதியவருக்கு அவரின் சூழ்நிலை கருதி வீட்டுக்கே சென்று குடும்ப அட்டை வழங்கிய அரூர் வட்ட வழங்கல் அலுவலர் செங்கோட்டையனுக்கும் தங்களது நிலையை வட்ட வழங்கல் அலுவலருக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவித்த ராசலாம்பட்டி அரசு இ-சேவை மைய நிர்வகிக்கும் புதிய குடும்ப அட்டை பெற்ற முதியவர் மற்றும் இவரது மனைவியும் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள். மேலும் சம்பவத்தை கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்களும் வட்ட வழங்கல் அலுவலரை பாராட்டினார்கள்.
- ஆட்டின் கழிவுகளுடன் கழிவு நீர், மழை நீர் கால்வாயில் வெளியேறி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வருகிறது.
- இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
தருமபுரி,
தருமபுரி நகராட்சி, 5 வது வார்டில் நகராட்சி ஆடு அறுக்கும் தொட்டி உள்ளது.
இங்கு தினந்தோறும், 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படுகிறது. வெட்டப்படும் ஆடுகளின் கழிவுகள் ஆடு அறுக்கும் தொட்டி வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது.
மேலும், இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டிருந்த நிலையில், அதை இங்கு பணியாற்றி வருபவர்கள் உடைத்துள்ளனர்.
இதனால், ஆட்டின் கழிவுகளுடன் கழிவு நீர், மழை நீர் கால்வாயில் வெளியேறி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வருகிறது.
இதன், காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
கடந்த, 6 மாதங்களாக உணவு பாதுகாப்பு உரிமம் புதுப்பிக்காமல் இங்கு, ஆடு அடிக்கும் தொட்டியில் சுகாதாரமற்ற முறையில் வெட்டப்படும் ஆட்டு ரத்தம், தலை, கால்களால் பொது மக்களுக்கு விற்கப்படுகிறது.
இதை தடுக்க வேண்டிய உணவு பாது காப்புத்துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இதனால், ஆடு அடிக்கும் தொட்டியின் பின் புறம் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல்வேறு பரிசோதனை களுக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், பிரசவத்துக்கு வரும் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகளின் நலன் கருதி தருமபுரி நகராட்சி நிர்வாகம், இந்த ஆடு அடிக்கும் தொட்டியை நகராட்சி எல்லையில் பொதுமக்கள் குறைவாக உள்ள பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதுவரை 2 பேட்ச் மாணவ, மாணவியர் பேராசிரியர்கள் இல்லாமலே பட்டப் படிப்பை முடித்து வெளியேறி விட்டனர்.
- பேராசிரியர்களை போதிய அளவில் நியமனம் செய்து இங்கு பயிலும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் காக்க மாவட்ட நிர்வாகமும், உயர் கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு பி.எஸ்சி. நுண்ணுயிரியல் துறை தொடங்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை இந்த துறைக்கென பேராசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
இது குறித்து, இக்கல்லூரியில் பி.எஸ்சி. நுண்ணுயிரியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர் சிலர் கூறுகையில் பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. நுண்ணுயிரியல் பாடப் பிரிவு பேராசிரியர்களே இல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
பி.எஸ்சி. விலங்கியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் தான் நுண்ணுயிரியல் துறை மாணவ, மாணவியருக்கும் வகுப்புகள் எடுப்பதாக தெரிகிறது. அதேநேரம், அந்தத் துறை மேலோட்டமான அடிப்படை அறிவை மட்டுமே மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.
நுண்ணுயிரியல் பாடப் பிரிவு சார்ந்த ஆய்வக செய்முறை பயிற்சிகள் எதையுமே இதுவரை மாணவ, மாணவியர் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறையில் 50 மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். இதுவரை 2 பேட்ச் மாணவ, மாணவியர் பேராசிரியர்கள் இல்லாமலே பட்டப் படிப்பை முடித்து வெளியேறி விட்டனர்.
பிற்காலத்தில் மருத்துவத் துறை சார்ந்த ஆய்வகங்களில் பணியாற்ற வேண்டிய மாணவ, மாணவியர் நுண்ணுயிரியல் துறை சார்ந்த அறிவை கற்றுக் கொள்ளாமலே இளநிலை அறிவியல் பாடத்தை முடித்து வெளியேறுவது வேதனை அளிக்கிறது. கடந்த ஆண்டில் இந்த துறைக்கு நியமிக்கப்பட்ட 2 பேராசிரியர்களில் ஒருவர் ஒருசில வாரங்களிலேயே வேறு ஊருக்கு மாறுதலாகி சென்று விட்டார்.
மற்றொருவர் தொடர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைக்கு, துறை சார்ந்த பேராசிரியர்களை போதிய அளவில் நியமனம் செய்து இங்கு பயிலும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் காக்க மாவட்ட நிர்வாகமும், உயர் கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
- பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், தப்பூட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு தூங்க சென்ற மாணவி காலையில் காணவில்லை.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், பி.குயிலம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோட்டப்பட்டி அருகே உள்ள பயர்நாயக்கம்பட்டியில் உள்ள தாய்மாமா வீட்டில் தங்கி நரிப்பள்ளி யில் உள்ள அரசு மேல்நிலை ப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 28-ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து பள்ளிக்கு சென்று விசாரித்த போது ஆசிரி யர்கள் மாணவி பள்ளிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.
இது குறித்து மாணவியின் கோட்டப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
அதேபோல் தருமபுரி மாவட்டம் நவலை கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி.
இவர் பாப்பாரப்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 26-ம் தேதி கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் கம்பை நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்தர்கள் பங்களிப்போடு, பல லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.
- பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த காளியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரியகுளம் அருகே சீராம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கோவிலின் தேர் சிதிலமடைந்த தேரோட்டம் இல்லாமல் இருந்து வந்தது. பக்தர்களின் வேண்டுகோளை அடுத்து இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் பங்களிப்போடு, பல லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு செங்காளி அம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சீராம்பட்டி காளியம்மன் விழாவும் தொடங்கியது.
காளியம்மன் கோவில் புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி கடந்த 22-ம் தேதி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால்குடம், மாவிளக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று மாலை 4 மணிக்கு 18 ஆண்டுகளுக்கு பின், காளியம்மன் தேரோட்ட விழா பம்பை, தாரை தப்பட்டை, வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் வெகுவிமர்சியாக தேரோட்டம் நடந்தது.
இந்த தேரோட்டத்தில் சீராம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சவுளுப்பட்டி, கொண்டம்பட்டி, கார்த்தானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த காளியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், விழாக்குழு வினர், பக்தர்கள் செய்திருந்தனர்.
- தமிழ்செல்விக்கு இருதயத்தில் ஓட்டை இருந்தது.
- இவருடைய தாய் சம்பாதிக்கும் பணம் மருத்துவ செலவிற்கே போதுமானதாக உள்ளது என்று எண்ணி தமிழ்செல்வி மன வேதனையில் காணப்ப ட்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் தமிழ்செல்வி.
இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருைடய தந்தை 2 வருடத்திற்கு முன்பு இறந்த நிலையில் தாய் சம்பாதிக்கும் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
மேலும் தமிழ்செல்விக்கு இருதயத்தில் ஓட்டை இருந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்து வந்தனர்.
மேலும் இவருடைய தாய் சம்பாதிக்கும் பணம் மருத்துவ செலவிற்கே போதுமானதாக உள்ளது என்று எண்ணி தமிழ்செல்வி மன வேதனையில் காணப்ப ட்டார்.
பின்னர் வீட்டில் உள்ள எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு மாரண்ட அள்ளி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சை க்காக அங்கிருந்து சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று மது போதையில் இருந்த குண சேகரன் அவருடைய மனைவி ராஜேஸ்வரியிடம் வெளியில் செல்ல வேண்டி இருப்பதாக கூறி கார் சாவியை கேட்டுள்ளார்.
- மது போதையில் இருந்த கணவரிடம் கார் சாவியை தர மறுத்ததால் இருவருக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கிருஷணாபுரம் அருகே உள்ள எஸ்.கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 35).இவர் பெங்களுரில் டிடிஎன் லேயவுட் பகுதியில் தங்கி அங்கு சைக்கிள் சாப் வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் கர்த்தானூரில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் காரில் வந்தனர். இவருக்கு நீண்ட நாட்களாக மது பழக்கம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று மது போதையில் இருந்த குண சேகரன் அவருடைய மனைவி ராஜேஸ்வரியிடம் வெளியில் செல்ல வேண்டி இருப்பதாக கூறி கார் சாவியை கேட்டுள்ளார்.
மது போதையில் இருந்த கணவரிடம் கார் சாவியை தர மறுத்ததால் இருவருக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த குணசேகரன் அதே பகுதியில் கிழங்கு ேதாட்டம் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
- ஜெயவேல் நேற்று வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி நரசையர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 15 வயது யுவராஜ் என்ற மகனும், 13 வயதுடைய அனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
ஜெயவேல் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டரில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பழனியம்மாள் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயவேல் குடும்ப சூழ்நிலை காரணமாக தருமபுரியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
24 மாத காலத்தில் தவணையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 20 மாதங்கள் கடனை திருப்பி செலுத்திய நிலையில் மீதம் 4 மாத கடனை திருப்பி செலுத்தவில்லை.
இதனால் அந்த நிறுவனம் நெருக்கடி கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த ஜெயவேல் நேற்று வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






