என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாச்சினாம்பட்டி கிராமத்தில் பச்சை கவுண்டர் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ருக்கும்மாளிடம் விண்ணப்பித்த புதிய குடும்ப அட்டையை அரூர் வட்ட வழங்கல் அலுவலர் செங்கோட்டையன் வழங்கினார்.
83 வயது முதியவருக்கு வீடு தேடி புதிய குடும்ப அட்டையை வழங்கிய வட்ட வழங்கல் அலுவலர்
- மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமாரின் அரூர் வட்ட வழங்கல் அலுவலர் செங்கோட்டையன் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த முதியவரின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்கினார்.
- சம்பவத்தை கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்களும் வட்ட வழங்கல் அலுவலரை பாராட்டினார்கள்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சந்தப்பட்டி ஊராட்சி நாச்சினாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சை கவுண்டர் (வயது83) இவரும், இவரது மனைவி ருக்கும்மாள் (75) ஆகிய இருவரும் அந்த கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.
வயது முதிர்வின் காரணமாக கூலி வேலைக்கும் செல்ல முடியாமல் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு குடும்ப அட்டை இல்லை. இதனால் ரேஷன் பொருட்களை வாங்கவும், அரிசி வாங்கி சமைக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் மொரப்பூர் ராசலாம்பட்டி போஸ்ட் ஆபீஸ் அருகில் இயங்கும் அரசு இ-சேவை மையத்தில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தார்.
அப்போது அந்த முதியவரின் வயது முதிர்வு நிலையை கருத்தில் கொண்டு மையத்தின் உரிமையாளர் சுகந்தி குமரவேல் என்பவர் அரூர் வட்ட வழங்கல் அலுவலர் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்.
அந்த முதியவரின் குடும்பத்தின் நிலையை அரூர் வட்ட வழங்கல் அலுவலர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட வழங்கல் அலுவலருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமாரின் அரூர் வட்ட வழங்கல் அலுவலர் செங்கோட்டையன் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த முதியவரின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்கினார்.
குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த முதியவருக்கு அவரின் சூழ்நிலை கருதி வீட்டுக்கே சென்று குடும்ப அட்டை வழங்கிய அரூர் வட்ட வழங்கல் அலுவலர் செங்கோட்டையனுக்கும் தங்களது நிலையை வட்ட வழங்கல் அலுவலருக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவித்த ராசலாம்பட்டி அரசு இ-சேவை மைய நிர்வகிக்கும் புதிய குடும்ப அட்டை பெற்ற முதியவர் மற்றும் இவரது மனைவியும் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள். மேலும் சம்பவத்தை கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்களும் வட்ட வழங்கல் அலுவலரை பாராட்டினார்கள்.






