search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் ஆடு அறுக்கும் தொட்டி
    X

    ஆட்டின் கழிவுகளுடன் கழிவு நீர், மழை நீர் கால்வாயில் வெளியேறி வருவதால், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

    தருமபுரியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் ஆடு அறுக்கும் தொட்டி

    • ஆட்டின் கழிவுகளுடன் கழிவு நீர், மழை நீர் கால்வாயில் வெளியேறி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வருகிறது.
    • இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி, 5 வது வார்டில் நகராட்சி ஆடு அறுக்கும் தொட்டி உள்ளது.

    இங்கு தினந்தோறும், 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படுகிறது. வெட்டப்படும் ஆடுகளின் கழிவுகள் ஆடு அறுக்கும் தொட்டி வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

    மேலும், இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டிருந்த நிலையில், அதை இங்கு பணியாற்றி வருபவர்கள் உடைத்துள்ளனர்.

    இதனால், ஆட்டின் கழிவுகளுடன் கழிவு நீர், மழை நீர் கால்வாயில் வெளியேறி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வருகிறது.

    இதன், காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    கடந்த, 6 மாதங்களாக உணவு பாதுகாப்பு உரிமம் புதுப்பிக்காமல் இங்கு, ஆடு அடிக்கும் தொட்டியில் சுகாதாரமற்ற முறையில் வெட்டப்படும் ஆட்டு ரத்தம், தலை, கால்களால் பொது மக்களுக்கு விற்கப்படுகிறது.

    இதை தடுக்க வேண்டிய உணவு பாது காப்புத்துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    இதனால், ஆடு அடிக்கும் தொட்டியின் பின் புறம் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல்வேறு பரிசோதனை களுக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், பிரசவத்துக்கு வரும் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகளின் நலன் கருதி தருமபுரி நகராட்சி நிர்வாகம், இந்த ஆடு அடிக்கும் தொட்டியை நகராட்சி எல்லையில் பொதுமக்கள் குறைவாக உள்ள பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×