என் மலர்
தர்மபுரி
- தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்று பழனிசாமி உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்துள்ள கெட்ரபட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது52).
விவசாயியான இவர் பனந்தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பழனிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பழனிசாமி உயிரிழந்தார்.
இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டுபாட்டை இழந்து கார் மின்கம்பத்தில் மோதியது.
- மருத்துவ மனைக்கு கொண்டு போகும் வழியிலேயே உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஏ.வெள்ளாளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சடையன். இவரது மனைவி இளங்கனி (வயது50). இவர்களது உறவினர்களான தினேஷ், அவரது மனைவி அருணா உள்பட 5 பேரும் நேற்று காரில் கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மொரப்பூர் அடுத்த கடம்பரஅள்ளி பஸ்நிறுத்தம் பகுதியில் வந்த போது கட்டுபாட்டை இழந்து கார் மின்கம்பத்தில் மோதியது.
இதில் இளஞ்கனி, அருணா ஆகிய 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இளங்கனியை சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம நபர் ஒருவர் உண்டியலை உடைத்து கொண்டிருந்தார்.
- ஊர்மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து தொப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள சாமியார் கொட்டாய் பகுதியில் சிவன்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் உண்டியலை உடைத்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த ஒருவர் ஊர்மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் வருவதற்குள் அங்கிருந்து அந்த கொள்ளையன் தப்பி சென்று விட்டார். பின்னர் ஊரை சுற்றி தேடி பார்த்தனர். அப்போது உண்டியலில் திருடிய பணத்தை எண்ணி கொண்டிருந்த போது அந்த நபரை ஊர்மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து தொப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மருளுகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த முருகன் மகன் சஞ்சய் (வயது19) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர்.
- கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
- ஏரி அருகில் உள்ள கிணற்றில் சின்னசாமி தவறி விழுந்து இறந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்துள்ள மேட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. கட்டிட மேஸ்திரியான இவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று ஒட்டப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வந்தார். அப்போது தோக்கம்பட்டி அடுத்துள்ள கவுண்டனஅள்ளி ஏரி அருகில் உள்ள கிணற்றில் சின்னசாமி தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாய் வீட்டிற்கு கவிதா, மகன் விக்னேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
- முன்னால் சென்ற வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியது.
தருமபுரி,
தருமபுரி வெங்கட்ராமன் தெருவை சேர்ந்தவர் கவிராஜ். இவரது மனைவி கவிதா (வயது48). இவரது மகன் விக்னேஷ். இந்த நிலையில் கவிதாவின் தாய் வீடு ஒட்டப்பட்டியில் உள்ளது.
தனது தாய் வீட்டிற்கு கவிதா, மகன் விக்னேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாரதிபுரம் அரசு போக்குவரத்து கழகம் அருகில் வந்த போது முன்னால் சென்ற வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி கவிதா சாலையில் விழுந்தார்.
படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கவிதா உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீரமலையனூர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அடுத்துள்ள மூலகானூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரை (வயது65).
இவர் நாகரசம்பட்டி அருகே உள்ள வீரமலையனூர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
- சிகிச்சை பலனின்றி இன்றுகாலை சுப்பிரமணி உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்துள்ள ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை சுப்பிரமணி உயிரிழந்தார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 155 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி கள் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பொ.துறிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை யாசிரியர் ஆனந்தகுமார் தலைமையில் நடை பெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குண சேகரன் சுமார் 155 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினரும், தி.மு.க ஒன்றிய கழக செயலாளருமான பி.எஸ்.சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் தாரணி ராஜேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவருமான பாபு (எ)முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுரியா பானு நியாமத் மற்றும் ஒன்றிய தி.மு.க கழக துணை செயலாளர்கள் ஜகிதா செரீப், வே.செல்வன், ராஜேந்திரன், மாவட்ட கழக பிரநிதிகள் பன்னீர்ச்செல்வம், இரவி, இராமன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் செல்வராஜ், ஜான்அக்பர், ஆபிஸ், சதாசுர ்ஜித், வழக்கறிஞர் சக்திவேல், தண்டபானி, கிளைக்கழக செயலாளர்கள் ராமலிங்கம், சேட்டு, சின்னப்பன், அக்பர், ரத்தினம், முருகன், அப்பாவு, ரத்தினம், முருகன், ஊள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் வரும் 20-ம் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது.
- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. பொது மக்களிடம் பிரசாரம் செய்தார்.
தருமபுரி,
மதுரையில் வருகிற 20-ம் தேதி வீர வரலாற்றில் பொன்விழா என்ற தலைப்பில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தருமபுரியில் பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து பொது மக்களிடம் பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து அவர் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் மாநாடு குறித்த பேனர்கள் கட்டியும், ஸ்டிக்கர்கள் ஒட்டியும் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், வக்கீல் அணி மாநில நிர்வாகி அசோக்குமார், நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகரப் பொருளாளர் பார்த்திபன், நகர துணை செயலாளர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சக்திவேல், மாதையன், செந்தில்வேல், தொழிற்சங்க நிர்வாகி சிங்கராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஓகேனக்கல்லில் புனிதநீராடி காவிரி கரையில் படையலிட்டு வழிபட்டனர்.
- புதுமணத் தம்பதிகள் நீர் நிலைகளில் கூடி பெண்களுக்கு தாலி மாற்றி இறைவனை வழிபட்டனர்.
தருமபுரி,
காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காவிரி ஆறு பாய்ந்தோடும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் ஏராளமான பக்தர்கள் இன்று குவிந்தனர். அங்கு அவர்கள் புனிதநீராடி காவிரி கரையில் படையலிட்டு வழிபட்டனர். மேலும் காவிரி கரையோரங்களிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சுற்றுவட்டார பக்தர்கள் தங்களது குலதெய்வ சாமி சிலைகள், அதற்கு பயன்படுத்தும் கத்தி, ஈட்டி, காவடி மற்றும் பூஜை பொருட்களை ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு கொண்டுவந்து சுத்தம் செய்து ஆற்றில் புனித நீராடி பூஜைகள் செய்தனர்.
பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து காவிரிக்கரையில் கூடி நீராடி புத்தாடைகள் அணிந்தனர். காவிரிக்கரையில் அரிசி, எள், சர்க்கரை கலந்து படைக்கப்பட்ட படையலை காவிரி தாய்க்கு அர்ப்பணித்தனர். அப்போது சுமங்கலி பெண்கள் தாலி பூஜை செய்தனர்.
புதிதாக திருமணமான ஜோடிகள் தாலி பிரித்து கட்டி, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர். தங்கள் திருமண மாலைகளை காவிரியில் விட்டு வழிபட்டனர். விவசாய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் முளைப்பாரிகளை காவிரியில் விட்டு, வழிபட்டனர். பூஜை முடிந்ததும் அனைவரும் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
புதுமண தம்பதிகள் புனித நீராடி புதிய ஆடை அணிந்துகொண்டனர். சிலர் திருமணத்தின்போது அணிந்த பட்டுவேட்டி, சேலையுடன் தம்பதி சகிதமாக வந்தனர். திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டனர்.
ஆற்றில் இன்றுபோல் எப்போதும் தண்ணீர் பாய்ந்தோட வேண்டும். தண்ணீர் பாய்ந்தோடுவதை போல தங்களது வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெருக வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என வழிபாடு நடத்தினர்.
ஒகேனக்கல்லில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வீரர்களும் தயார்நிலையில் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி மாதம் தொடக்கம் முதல் அம்மன் கோவில்களில் ஆடி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடிபெருக்கு அன்று அம்மன் கோயில்களில் இன்று சிறப்பு பூஜை நடப்பதோடு, நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடினர். புதுமணத் தம்பதிகள் நீர் நிலைகளில் கூடி பெண்களுக்கு தாலி மாற்றி இறைவனை வழிபட்டனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, பாரூர் அருகே உள்ள மஞ்சமேடு, மத்தூர் அருகே உள்ள சேக்க னாம்பட்டி, போச்சம்பள்ளி அருகே உள்ள வலச கவுண்டனூர், வேப்பன பள்ளி அருகே உள்ள தீர்த்தம், ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன் தீர்த்தம் ஆகிய இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அத்துடன் கிருஷ்ணகிரி அணை செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளும், அணையின் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது .
குறிப்பாக கிருஷ்ணகிரி அணைக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமானேர் வந்திருந்தனர்.
பொதுப்பணித்துறை சார்பில் அணையின் நுழைவு வாயில் பகுதியில் டிக்கெட் பெரும் இடத்தில், சவுக்கு கட்டைகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், அணையில் பொதுமக்களுக்குகுடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களையும் பொதுப்பணித் துறையினர் செய்திருந்தனர்.
- சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறுதானிய தனி அரங்கை திறந்து வைத்தார்.
- சிறுதானியங் களில் செய்யப்பட்ட உணவு வகைகள் நன்மை குறித்து மகளிர் திட்ட பணியாளர்கள் எடுத்துரைத்தனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்ட ஆடிப்பெருக்கு விழாவில் மகளிர் திட்டம் சார்பில் சிறுதானிய பயன்பாடுகள் குறித்த தனி அரங்கை அமைச்சர் திறந்து வைத்தார்.
அவற்றில் சிறுதானியங் களில் செய்யப்பட்ட உணவு வகைகள் காட்சிப் படுத்தப்பட்டு அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு, மகளிர் திட்ட பணியாளர்கள் எடுத்துரைத்தனர்.
இவ்விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் முகமது நசீர், உதவி திட்ட அலுவலர்கள் கார்த்தி கேயன், முருகேசன், வட்டார மேலாளர் பிரதீப், மற்றும் ரமேஷ் மாவட்ட பயிற்றுநர் வட்டார ஒருங்கிணைப் பாளர் வெற்றி வேல் மற்றும் வட்டார ஒருங்கிணைப் பாளர் ஜான்சி ராணி, கண்ணகி, லலிதா, தமிழ்ச்செல்வி, விஜய லட்சுமி, செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வீரவணக்க நாள் மாவட்ட செயலாளர் ஆனந்த குமார் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
- கட்சி நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி நான்கு ரோட்டில் தீரன் சின்னமலை 218 -ம் ஆண்டு வீரவணக்கம் நாள் மாவட்ட செயலாளர் ஆனந்த குமார் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் காமராஜ், நகர செயலாளர் லோகநாதன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் சம்பத், ஒன்றிய தலைவர் முனிராஜ், ஒன்றிய செயலாளர் இளவரசன், முத்துக்குமார், ஐடிவி செயலாளர் ஈஸ்வரன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும் பாலக்கோடு ஒன்றியத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிளைகளில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.






