குடும்ப தகராறில் பூச்சி மருந்து குடித்த விவசாயி சாவு

வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சிகிச்சை பலனின்றி இன்றுகாலை சுப்பிரமணி உயிரிழந்தார்.
குடும்ப தகராறில் பூச்சி மருந்து குடித்த விவசாயி சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்துள்ள ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை சுப்பிரமணி உயிரிழந்தார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com