என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் வருகிற 20-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் பிரசாரம்
- மதுரையில் வரும் 20-ம் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது.
- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. பொது மக்களிடம் பிரசாரம் செய்தார்.
தருமபுரி,
மதுரையில் வருகிற 20-ம் தேதி வீர வரலாற்றில் பொன்விழா என்ற தலைப்பில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தருமபுரியில் பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து பொது மக்களிடம் பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து அவர் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் மாநாடு குறித்த பேனர்கள் கட்டியும், ஸ்டிக்கர்கள் ஒட்டியும் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், வக்கீல் அணி மாநில நிர்வாகி அசோக்குமார், நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகரப் பொருளாளர் பார்த்திபன், நகர துணை செயலாளர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சக்திவேல், மாதையன், செந்தில்வேல், தொழிற்சங்க நிர்வாகி சிங்கராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






