என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.
    • பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்துள்ள சின்னமுருக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் காரி மங்கலம் அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கம்பை நல்லூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • நேற்று நடந்த சந்தையில் 270-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.
    • ஒரு ஆடு விலை ரூ.5,300 முதல் ரூ.10,700 வரை விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிகிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் வாரந்தோறும் சுமார் 70-க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது.

    இங்கு நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    நேற்று நடந்த சந்தையில் 270-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.

    ஒரு ஆடு விலை ரூ.5,300 முதல் ரூ.10,700 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.16 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சேதுராமன் கலந்து கொண்டு அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.

    தருமபுரி, 

    தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சேதுராமன் கலந்து கொண்டு அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ் மாவட்ட செயற்குழு கூட்ட த்தின் செயல்பாடுகள் இனி மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.

    கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் கிளைக் கூட்டங்கள் நடத்துவது , அறிவியல் மனப்பான்மை யும் அறிவியல் கண்ணோட்ட த்தையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தி யில் கொண்டு செல்வது, வானவில் மன்ற செயல் பாடுகள் பள்ளி அளவில் சிறப்பாக நடைபெறுவதற்கு வானவில் மன்ற கருத்தாளர் களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வானவில் மன்ற பொறுப்பாளர்கள் அருள் குமார், காவியா, மீரா, பிரியா, நவீனா, பவதாரணி, சோனியா, மஞ்சுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கார்த்தி நன்றி கூறினார். 

    • நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • பொது விநியோக திட்ட பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளன.

    இதனை தடுக்க பொது மக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண் 1800 599 5950 வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து காவல் துறை இயக்குநர் வன்னிய பெருமாள் உத்தரவின்படி கோவை மண்டல எஸ்.பி பாலாஜி மேற்பார்வையில் டி.எஸ்.பி விஜயகுமார் தலைமையில் தருமபுரி குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும் பொது விநியோக திட்ட பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும்.

    இதில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் இந்த கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த மாதம் ஜூலை 17-ம் தேதி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவானது மகா கணபதி பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • தாரை தப்பட்டை முழங்க அர்ச்ச கர்கள் கோவில் கலசத்திற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், உங்கரான அள்ளி ஊராட்சியில் உள்ள பருத்தி நத்தம், உத்தனூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    கடந்த மாதம் ஜூலை 17-ம் தேதி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவானது மகா கணபதி பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, சாமி சிலைகள் ஊர்வலம், முளைப்பாரி அழைத்து வருதல், யாகசாலை அலங்காரம், மற்றும் விக்னேஸ்வர பூஜை, திருவிளக்கு வழிபாடு, தீர்த்தக்குடம் புறப்படுதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    இதனையடுத்து இன்று காலை மண்டப அர்ச்சனை, லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை, திரவிய ஹோமம், பூர்ணாஹீதி கலச புறப்பாடு போன்ற பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் தாரை தப்பட்டை முழங்க அர்ச்சகர்கள் கோவில் கலசத்திற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றினர். இதில் தருமபுரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கோவில் அறங்காவலர் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • இந்த விற்பனை சங்கத்தில் நேற்று முதல் நாளில் ரூ. 52 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.
    • மஞ்சள் விரலி ரூ.11,689 முதல் 16,702 வரையும், குண்டு(கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ. 10,309 முதல் 13,069 வரையிலும் விற்பனையானது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மஞ்சள், பருத்தி ஆகியவை ஏலம் விடப்படுகிறது.

    உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் விளை பொருட்களை மொத்த வியாபாரிகள், மில் உரிமையாளர்கள் என பெரிய அளவிலான வியாபாரிகள் வந்து வாங்குவதால் விலை அதிகம் கிடைக்கிறது.

    அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து 223 விவசாயிகள் 800 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதனை சேலம், ஈரோடு, கோவை பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். இந்த விற்பனை சங்கத்தில் நேற்று முதல் நாளில் ரூ. 52 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.

    மஞ்சள் விரலி ரூ.11,689 முதல் 16,702 வரையும், குண்டு(கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ. 10,309 முதல் 13,069 வரையிலும் விற்பனையானது.

    • முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர்.
    • 97 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையும், 47 நபர்களுக்கு நலவாரிய அட்டையும் வழங்கப் பட்டது.

    தருமபுரி,

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்று த்திறனாளிகள் துறை சார்பில் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர் ஆகிய இரண்டு இடங்களில் மாற்று திறனாளிகள் துறை சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் நேற்று தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர். 97 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையும், 47 நபர்களுக்கு நலவாரிய அட்டையும் வழங்கப்பட்டது. 154 நபர்களுக்கு UDID, கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை மற்றும் இதர துறைசார்ந்த உதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இந்த முகாமில் அரசு சிறப்பு மருத்துவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    • முகாமிற்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • 192 தூய்மை பணியாளர்களுக்கு மார்பக புற்றுநோய், பி.பி. சுகர், இ.சி.ஜி, கர்ப்பபை நோய் போன்ற பிரச்சனைகள் குறித்து மருத்துவ பரி சோதனைகள் நடை பெற்றது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி மற்றும் அரசு மருத்துமனை சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாலக்கோடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்றது.

    முகாமிற்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் வெங்கடேஷன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்ட அள்ளி, பாப்பாரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் 192 தூய்மை பணியாளர்களுக்கு மார்பக புற்றுநோய், பி.பி. சுகர், இ.சி.ஜி, கர்ப்பபை நோய் போன்ற பிரச்சனைகள் குறித்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

    முகாமில் பாலக்கோடு அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி, செவிலியர்கள், மருத்துவர்கள், பேரூராட்சியின் செயல் அலுவலர்கள் டார்த்தி, கோமதி, ஆயிஷா மற்றும் தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புகையிலை பொருட்கள், குட்கா ஆகிய வற்றை பதுக்கி விற்பனை செய்த 40 பேரை கைது செய்தனர்.
    • விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது புகையிலை பொருட்கள், குட்கா ஆகியவற்றை பதுக்கி விற்பனை செய்த 40 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • வெற்றி வேல் (வயது21) என்பவர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றி வேலை கைது செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள கெலா ப்பாறை பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவருடன் கோவையில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த பெண் தற்போது குடும்பத்துடன் கோவில் திரு விழாவுக்காக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அந்த பெண்ணின் உறவினர் மகன் வெற்றி வேல் (வயது21) என்பவர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த பெண்ணின் கணவர் அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றி வேலை கைது செய்தனர்.

    • ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதையும் பார்த்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் இன்று காலை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 12,776 கனஅடியும், கபினியில் இருந்து 5 ஆயிரம் கனஅடி என மொத்தம் 17,776 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நேற்று மாலை 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து காணப்படுகிறது.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதையும் பார்த்தனர்.

    மேலும் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சீனி அருவி ஆகிய அருவிகளில் குளித்தும் மகிழ்கின்றனர். பின்னர் இங்கு பிரசித்தி பெற்ற மீன் சமையல் ருசித்து சாப்பிட்டு விடுமுறை நாளை கழித்து செல்கின்றனர்.

    இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 5-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

    • விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்பேத்கரின்உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 61-வது பிறந்தநாள் விழா தருமபுரியில் கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு மத்திய மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் எம்.எஸ்.ராமன், கப்பல் செந்தில்குமார், சிவஞானம், கிள்ளிவளவன், பரோடா வங்கி பெருமாள், திருமாறன், மாரவாடி செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்பேத்கரின்உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதனையடுத்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவில் முத்துக்குமார் ஆதித்தமிழர், மன்னன், தமிழ்வளவன், தனம், விடு தலைமதி, ஆட்டோ கிருஷ்ணன், சங்கர், அம்பேத் வளவன், ஜெகநாதன், நெல்லை சீணி, ஆறுமுகபாண்டி, தென்பாண்டியன், மூர்த்தி, செல்லதுரை, கார்த்திக், நல்லதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×