என் மலர்
உள்ளூர் செய்திகள்

கம்பைநல்லூர் வாரச் சந்தையில் ரூ.16 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
- நேற்று நடந்த சந்தையில் 270-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.
- ஒரு ஆடு விலை ரூ.5,300 முதல் ரூ.10,700 வரை விற்பனையானது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிகிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் வாரந்தோறும் சுமார் 70-க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது.
இங்கு நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
நேற்று நடந்த சந்தையில் 270-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.
ஒரு ஆடு விலை ரூ.5,300 முதல் ரூ.10,700 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.16 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story






