என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி கிலோ ரூ.200 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
    • தருமபுரி உழவர் சந்தையில் கிலோ தக்காளி 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால், தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்தது.

    இதனால் தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ ரூ.130 முதல் ரூ.160 வரையும், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி கிலோ ரூ.200 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் தக்காளியின் வரத்து அதிகரிக்க உயர்ந்ததால் விலை படிப்படியாக குறைந்து கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பெல்ரம்பட்டி, கரகூர், திருமல்வாடி, உசிலம்பட்டி, 5-வது மைல், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும், அதேபோல் ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் மேலும் தக்காளி விலை குறைந்து 15 கிலோ கூடை தக்காளி 400 ரூபாயும் , 28 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி 800 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    இன்று தருமபுரி உழவர் சந்தையில் கிலோ தக்காளி 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வரத்து அதிகரித்து விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கினால் மேலும் விலை குறைய வாய்ப்பு ள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பட்டன் ரோஸ் கிலோ ரூ.130, சம்பங்கி கிலோ ரூ.170 , செண்டுமல்லி கிலோ ரூ.30 ரூபாய், என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ஆகஸ்ட் 25-ம் தேதி வரலட்சுமி நோன்பும், ஓணம் பண்டி கையும் தொடங்குவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, கோழிக்கொண்டை, அரளி, குண்டுமல்லி, சன்னமல்லி, ஜாதிமல்லி, உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு விளையும் பூக்களை தினந்தோறும் விவசாயிகள் தருமபுரி நகர பேருந்து நிலை யத்தில் உள்ள பூ மார்க்கெ ட்டிற்கு விற்ப னைக்காக கொண்டு வருகின்றனர்.

    அவ்வாறு கொண்டு வரும் பூக்களை தருமபுரி மாவட்ட சிறு வியாபாரிகள், வெளி மாநில வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின் றனர். ஆடி மாதம் முதல் திருவிழா காலம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஆவணி மாத முதல் வாரத்தில் திருமண நிகழ்ச் சிகள் தொடர்ந்து நடை பெறுவதால் பூக்களின் விலை மேலும் உயர்ந்து குண்டு மல்லி கிலோ ரூ.360, சன்னமல்லி கிலோ ரூ. 300, கனகா மரம் கிலோ ரூ.500, காக்க ட்டா கிலோ ரூ.220, என விற்பனை செய்யப் பட்டது.

    இன்று பூ மார்க்கெட்டில் குண்டு மல்லி கிலோ ரூ. 300 சன்னமல்லி கிலோ ரூ.280, சாமந்தி கிலோ ரூ.120, பன்னீர் ரோஸ் கிலோ ரூ.70, பட்டன் ரோஸ் கிலோ ரூ.130, சம்பங்கி கிலோ ரூ.170 , செண்டுமல்லி கிலோ ரூ.30 ரூபாய், என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரலட்சுமி நோன்பும், ஓணம் பண்டி கையும் தொடங்குவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நேற்று வீட்டில் அன்பரசு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள மாங்கரை பகுதியை சேர்ந்தவர் செவத்தான். இவரது மகன் அன்பரசு (வயது23). இந்த நிலையில் நேற்று வீட்டில் அன்பரசு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 17-ந்தேதி அன்று புனிதவள்ளி தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு கடைக்கு சென்றார்.
    • வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி புனிதவள்ளி (வயது27). இவர்களுக்கு அனுஸ்ரீ (9) என்கிற மகளும் சர்வேஸ்வரன் (6) என்கிற மகனும் உள்ளது.

    இந்த நிலையில் சுரேஷ்க்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    கடந்த 17-ந்தேதி அன்று புனிதவள்ளி தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு கடைக்கு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்ைல.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான அவர் களை தேடி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற ஜோதி பின்னர் வீடு திரும்பவில்லை.
    • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்துள்ள பெரியனூர் புளிந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார். இவரது மனைவி ஜோதி (வயது22). இவர்க ளுக்கு திருமணமாகி 5 வருடம் ஆன நிலையில் 2 ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற ஜோதி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
    • இன்று காலை காலி குடங்களுடன் அந்த வழியாக வந்த வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சுஞ்சல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட திண்ணை பெல்லூர் பகுதியில்

    350-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதிக்கு வாரம் ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த குடிநீர் அப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பல முறை புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் அந்த வழியாக வந்த வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஏரியூர் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதிக்கு இரண்டு நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தனர். இதனால் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தால் சுமார் ஒன்றரை மணி நேரம், பென்னாகரம்-நாகமரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் 878 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.
    • வரைவு வாக்கு ச்சாவடி பட்டியல் வெளி யிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் இது தொடர்பான ஆட்சே பனைகள், ெதரிவிக்கலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று வெளியிட்டார்.

    இதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் 878 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. மேலும் வரைவு வாக்கு ச்சாவடி பட்டியல் வெளி யிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் இது தொடர்பான ஆட்சே பனைகள், எதிர்ப்புகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் தங்களது கோரிக்கையை விண்ண ப்பம் வாயிலாக அளிக்க லாம்.

    வாக்காளர்கள் எளிதாக வந்து வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்தும் வகையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய வாக்காளர்களை அவர்களுக்கு அருகிலேயே வாக்குச் சாவடி அமைப்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ஒரு வாக்கு சாவடியில் மொத்தம் 1500-க்கும் மிகுதியாக வாக்காளர்களின் எண்ணிக்கை இருந்தால் புதிய வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சட்டமன்ற வாரியாக வரப்பெறும் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு, இறுதியாக வாக்கு சாவடி களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்னர் மாற்றங்கள் இறுதி செய்யப்பட்டு தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    • சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதை பார்த்து ரசித்தனர்.
    • மெயின் அருவி, சீனி அருவி ஆகிய அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அந்த இரு அணை களில் இருந்து தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று மாலை 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இன்றுகாலை 6 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

    ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதை பார்த்து ரசித்தனர். மேலும் மெயின் அருவி, சீனி அருவி ஆகிய அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள தால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 6-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. 

    • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் அதன் சலு கைகள் குறித்து முகாமில் விளக்கப்பட உள்ளது.
    • தொழில திபர்கள் தொழில் திட்டங்க களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மாநில அரசின் மானிய சேவை களை பயன்படுத்திக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் சிறுகுறு தொழில்களுக்கு சிறப்பு கடன் முகாம் நடக்கிறது. இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் தருமபுரியில் உள்ள கிளை அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற செப்டம்பர் மாதம் 1- ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மாநில அரசின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தொழில்களுக்கு அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் அதன் சலுகைகள் குறித்து முகாமில் விளக்கப்பட உள்ளது. இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.

    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் தொழில் திட்டங்ககளுடன் வந்து தொழில் கடன் மற்றும் மாநில அரசின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மலைக் கிராமங்கள் மற்றும் சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட மின் பாதைகளில் 966 இடங்களில் மின் பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளது.
    • மின்கம்பம் மற்றும் மின்மாற்றி பகுதியில் இருந்த குறைந்தழுத்த மின் பாதைகளில் புதர்கள் அகற்றப்பட்டுள்ளது.

      தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள மலைப்பகுதி ஊராட்சிகளான சிட்லிங், சித்தேரி பகுதிகளில் மின் இணைப்பு வழங்குவதற்காக மின்வாரியம் சார்பில் வனப்பகுதி வழியாக மின்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் மின் பாதையில், மரங்கள், மரக்கிளைகளால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மலை கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    மின்தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் அரூர் கோட்ட மின்வாரியம் சார்பில் வள்ளி மதுரை முதல் சித்தேரி வரையிலான மின் பாதை மற்றும் சித்தேரியில் இருந்து கலசப்பாடி செல்லும் மின் பாதை, சிட்லிங் ஊராட்சியில் சூரியக்கடை, ஏ.கே.தண்டா, வேலனூர், ஊமத்தி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மின்பாதைகளை பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    சித்தேரி மலைக் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லும் சுமார் 25 கிலோமீட்டர் நீளமுள்ள மின் பாதை, சிட்லிங் ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதி வழியாகச் செல்லும் 12 கிலோமீட்டர் மின் பாதைகளில் இடையூறாக இருந்த 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்கள், புதர்கள் அகற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளபட்டது.

    தேவையான இடங்களில் கூடுதல் மின்கம்பங்கள் நடும் பணியும் நடந்தது. வனத்துறை ஒப்புதலுடன் 200-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு பணி மேற்கொண்டனர். கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட பணி முடிவடைந்துள்ளது.

    இது குறித்து அரூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி கூறுகையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதன்படி மலைக் கிராமங்கள் மற்றும் சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட மின் பாதைகளில் 966 இடங்களில் மின்பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளது.

    மின்கம்பம் மற்றும் மின்மாற்றி பகுதியில் இருந்த குறைந்தழுத்த மின்பாதைகளில் புதர்கள் அகற்றப்பட்டுள்ளது. குறைந்தழுத்த மின் பாதைகளில் 244, உயர் அழுத்த மின்பாதையில் 41 பழுதான மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. தாழ்வான மின் பாதைகள் சரி செய்யப்பட்டு அதில் 66 இடங்களில் புதியதாக மின் கம்பங்கள் இடைசெறுகல் செய்யப் பட்டுள்ளது. மேலும், மின்மாற்றி மற்றும் மின் பாதை பராமரிப்பு, பழைய கம்பிகள் மாற்றம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன என கூறினார்.

    • உண்ணாவிரத போராட்டம் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன் ஆகியோர் தலைமையில் தொடங்கியது.
    • மருத்துவ அணி மாநில துணை செயலாளர் எஸ்.ராஜேஷ் பாபு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க் கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், பொறுப்பற்ற முறையில் செயல்படும் கவர்னரையும் கண்டித்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களில் தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் இன்று காலை உண்ணாவிரத போராட்டங்கள் தொடங்கியது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர், கழக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆணைப்படியும், இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைபடியும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி ஒருங்கிணைந்த கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் இன்று காலை தொடங்கியது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஆர். சிவகுரு, நகர செயலாளர் நாட்டான் மாது, கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் என்.பெரியண்ணன், மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம். சந்தர், மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அணி மாநில துணை செயலாளர் எஸ்.ராஜேஷ் பாபு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர்கள் தர்ம செல்வன், சத்தியமூர்த்தி, மாநில நிர்வாகிகள் கீரை விஸ்வநாதன், சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட அவைத் தலைவர்கள் செல்வராஜ், மனோகரன், மாவட்ட பொருளாளர்கள் தங்கமணி, முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் ஆ, மணி, உமா சங்கர், ரேணுகா தேவி, ஆறுமுகம், கிருஷ்ண குமார், ராஜகுமாரி மற்றும் இந்நாள், முன்னாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் என். பெருமாள் நன்றி கூறுகிறார்.

    • தமிழ்நாடு அரசு நடத்தும் எலக்ட்ரோ கார்டியோ கிராம் அல்லது டிரெட்மில் டெக்னீசியன் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
    • ஓ.சி. பிரிவை சேர்ந்த முன்னாள் படை வீரர் களுக்கு 50 வயது உச்சவரம் பாகும். மற்ற பிரிவை சார்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

    தருமபுரி,  

    மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய இ.சி.ஜி. டெக்னீசியன் காலி பணி யிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப் பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் இ.சி.ஜி. டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு பணி யாளர்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். இந்த பணியிடங்களில் முன்னாள் படை வீரர் களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. எனவே பழைய கல்வி திட்டப்படி பி.யூ.சி. படித்தவர்கள், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற வர்கள் அதனுடன் பல் கலைக் கழக படிப்பு, தமிழ்நாடு அரசு நடத்தும் எலக்ட்ரோ கார்டியோ கிராம் அல்லது டிரெட்மில் டெக்னீசியன் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஓ.சி. பிரிவை சேர்ந்த முன்னாள் படை வீரர் களுக்கு 50 வயது உச்சவரம் பாகும். மற்ற பிரிவை சார்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

    விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப் பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். எனவே தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அது குறித்த விவரத்தை முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்கு மாறு கேட்டு கொள்ளப்படு கிறார்கள். இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற தருமபுரி யில் உள்ள முன்னாள் படை வீரர் நல அலு வல கத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×