என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 குழந்தையுடன் தாய் மாயம்
- கடந்த 17-ந்தேதி அன்று புனிதவள்ளி தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு கடைக்கு சென்றார்.
- வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி புனிதவள்ளி (வயது27). இவர்களுக்கு அனுஸ்ரீ (9) என்கிற மகளும் சர்வேஸ்வரன் (6) என்கிற மகனும் உள்ளது.
இந்த நிலையில் சுரேஷ்க்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 17-ந்தேதி அன்று புனிதவள்ளி தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு கடைக்கு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்ைல.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான அவர் களை தேடி வருகின்றனர்.
Next Story






