என் மலர்
தர்மபுரி
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 32,000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தருமபுரி:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 32,000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. வினாடிக்கு 28,000 கன அடியாக குறைந்துள்ளது.
ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இருப்பினும் சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 17-வது நாளாக நீடிக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேன க்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 16-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 15-வது நாளாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று இரவு 7.30 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. தொடர்ந்து இந்த நீர்வரத்து 43 ஆயிரம் கன் அடியாக நீடிக்கிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 15-வது நாளாக நீடிக்கிறது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- 14-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து நேற்று தமிழக காவிரி ஆற்றில் வினாடிக்கு 35 ஆயிரத்து 030 கன அடி திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 14-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பாமகவை அமைச்சர் விமர்சித்து பேசினார்.
- பாமகவை விமர்சித்து அமைச்சர் எம்.ஆர்.பன்னீர் செல்வம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மேடையில் பேசினார். அப்போது, ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பாமகவை அமைச்சர் விமர்சித்து பேசினார்.
"ஒரே கல்லில் 2 மாங்காய், தற்போது மாங்காயே இரண்டு" என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரனை வைத்துக் கொண்டு பாமகவை கிண்டல் செய்யும் வகையில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
- பொதுவாகவே வார இறுதி நாட்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகஅளவில் வருகை தருவர்.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 051 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரத்து 590 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதேபோல் மைசூரு மாவட்டம், எச்.டி. கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்து கபினி அணைக்கு நீர்வரத்து நேற்று ஆயிரத்து 13 ஆயிரத்து 044 கனஅடியாக வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 375 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 46 ஆயிரத்து 965 கன அடி திறந்து விடப்பட்டு இருந்தது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்றுகாலையும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல்லில் பழைய தீயணைப்பு நிலையம் அருகில் பரபரப்பாகக் காணப்படும் கடைகள் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மூடப்பட்டுள்ளன.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 12-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பென்னாகரம் அடுத்த மடம் சோதனை சாவடி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இவ்வழியாக உள்ளூர் வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பொதுவாகவே வார இறுதி நாட்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகஅளவில் வருகை தருவர்.
தற்போது தடை அமலில் உள்ளதாலும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதாலும் நேற்றும், இன்றும் சுற்றுலா பயணிகளின்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒகேனக்கல்லில் செயல்படும் உணவகங்கள், துண்டு உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள், தேநீர் கடைகள் உட்பட 4-ல் ஒரு பங்கு கடைகள் மட்டுமே செயல்படுகின்றன.
இதனால், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள தொழிலாளர்கள் பரிசல் ஓட்டுநர்கள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.
இந்த தொழிலில் ஈடுபடுவோர், தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் நாட்களில் தங்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- 11-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 43,000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. வினாடிக்கு 50,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் 11-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்தானது வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்தது.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் 10-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 9-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று குறைந்துள்ளது. நீர்வரத்தானது இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்துள்ளது.
இருப்பினும், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 9-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- காவிரி கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அதிகளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர் மாலையில் வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஆனாலும், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல், சத்திரம், ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் போலீசார் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
- 6-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை முதல் 65,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 6-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஒகேனக்கல்:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 35 ஆயிரத்து 999 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரத்து 49 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
கபினி அணைக்கு நேற்று இரவு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் 66 ஆயிரத்து 49 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 5-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.