என் மலர்
தர்மபுரி
- காவிரி ஆற்றில் ராசிமணல் முதல் ஒகேனக்கல் வரை பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளது.
- வனத்துறையினர் முதலைகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று, சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க வேண்டும்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள அருவிகளில் குளிக்கவும், பரிசலில் சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
காவிரி ஆற்றில் ராசிமணல் முதல் ஒகேனக்கல் வரை பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றும் போது, இப்பகுதிகளில் ஆற்றில் இருக்கும் முதலைகள் தண்ணீரை விட்டு வெளியே வரும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அடர்ந்த வனப்பகுதியில் வாழும் முதலைகள் தண்ணீரில் அடித்து வரப்படுவது வழக்கம்.
கடந்த வாரங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. வெள்ளப்பெருக்கின் போது அடித்து வரப்பட்ட முதலை ஒன்று, தற்போது தண்ணீர் குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் மீன் பண்ணை அருகே கரையோரம் மணல் பரப்பில் ஓய்வெடுத்து வருவதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இதனால் வனத்துறையினர் முதலைகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று, சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க வேண்டும்.
ஆற்றை விட்டு வெளியேறும் முதலைகளை, அங்குள்ள முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட வேண்டும் என வன உயிரியின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், கர்நாடக அணைகளான கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் முழுமையாக நிரம்பியதால், அணையின் பாதுகாப்பு கருதி, 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவி ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், அருவியில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் பரிசல் இயக்க மட்டும் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 16ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தொடர்ந்து நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றிலும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். அதே சமயம், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்கும்மாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- 21-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
21-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்த ருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க மட்டும் நேற்று அனுமதி அளித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
20-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இந்த நீர்வரத்து இன்றைய நிலவரப்படி 28 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து விஜயமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
- கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த மணியம் பாடியில் நிலஅளவையாளராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் நிலம் அளவீடு செய்ய இன்று மதியம் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து விஜயமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 32,000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தருமபுரி:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 32,000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. வினாடிக்கு 28,000 கன அடியாக குறைந்துள்ளது.
ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இருப்பினும் சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 17-வது நாளாக நீடிக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேன க்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 16-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 15-வது நாளாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று இரவு 7.30 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. தொடர்ந்து இந்த நீர்வரத்து 43 ஆயிரம் கன் அடியாக நீடிக்கிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 15-வது நாளாக நீடிக்கிறது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- 14-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து நேற்று தமிழக காவிரி ஆற்றில் வினாடிக்கு 35 ஆயிரத்து 030 கன அடி திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 14-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பாமகவை அமைச்சர் விமர்சித்து பேசினார்.
- பாமகவை விமர்சித்து அமைச்சர் எம்.ஆர்.பன்னீர் செல்வம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மேடையில் பேசினார். அப்போது, ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பாமகவை அமைச்சர் விமர்சித்து பேசினார்.
"ஒரே கல்லில் 2 மாங்காய், தற்போது மாங்காயே இரண்டு" என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரனை வைத்துக் கொண்டு பாமகவை கிண்டல் செய்யும் வகையில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
- பொதுவாகவே வார இறுதி நாட்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகஅளவில் வருகை தருவர்.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 051 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரத்து 590 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதேபோல் மைசூரு மாவட்டம், எச்.டி. கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்து கபினி அணைக்கு நீர்வரத்து நேற்று ஆயிரத்து 13 ஆயிரத்து 044 கனஅடியாக வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 375 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 46 ஆயிரத்து 965 கன அடி திறந்து விடப்பட்டு இருந்தது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்றுகாலையும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல்லில் பழைய தீயணைப்பு நிலையம் அருகில் பரபரப்பாகக் காணப்படும் கடைகள் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மூடப்பட்டுள்ளன.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 12-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பென்னாகரம் அடுத்த மடம் சோதனை சாவடி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இவ்வழியாக உள்ளூர் வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பொதுவாகவே வார இறுதி நாட்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகஅளவில் வருகை தருவர்.
தற்போது தடை அமலில் உள்ளதாலும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதாலும் நேற்றும், இன்றும் சுற்றுலா பயணிகளின்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒகேனக்கல்லில் செயல்படும் உணவகங்கள், துண்டு உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள், தேநீர் கடைகள் உட்பட 4-ல் ஒரு பங்கு கடைகள் மட்டுமே செயல்படுகின்றன.
இதனால், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள தொழிலாளர்கள் பரிசல் ஓட்டுநர்கள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.
இந்த தொழிலில் ஈடுபடுவோர், தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் நாட்களில் தங்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.