என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: 17-வது நாளாக தொடரும் தடை
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: 17-வது நாளாக தொடரும் தடை

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 32,000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தருமபுரி:

    தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 32,000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. வினாடிக்கு 28,000 கன அடியாக குறைந்துள்ளது.

    ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இருப்பினும் சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 17-வது நாளாக நீடிக்கிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×