என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 382 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,557 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 382 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,557 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் 2019-2020-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் செலவில் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அப்போது அவருடன் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லீமாரோஸ், மாலதி, மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    செங்கல்பட்டில் இன்று மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,092 ஆக அதிகரித்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 5 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,092 ஆக அதிகரித்துள்ளது.


    தாம்பரம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    தாம்பரம் அருகே முடிச்சூரில் போதையில் ஏற்பட்ட தகராறில் 15 ஆண்டுகால நண்பரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

    மது தராததால் ஏற்பட்ட மோதலில் நண்பர் ரவியை கத்தியால் குத்திய ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,232 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,232 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 320 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,731 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,32,618  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,808-ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 17,187 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,731 ஆக உயர்ந்துள்ளது.
    சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சென்னயனேரி கிராமத்தில் 3 ஏக்கர் சுடுகாட்டு நிலம் உள்ளது. இதனை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுடுகாட்டு நிலத்தை மீட்டு 3 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டி தரவும், ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கிராம மக்கள், வருவாய் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சென்னயனேரி கிராம மக்கள், ஒரத்தியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் சஞ்சீவ குமாரி மற்றும் ஒரத்தி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 290 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,187 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,21,087 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,571-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,06,096 ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 16,897 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 290 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,187 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 13,969 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 284 பேர் உயிரிழந்துள்ளனர்.
    சிங்கப்பெருமாள் கோவிலில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் புகாரி சிங் (வயது 65). இவர், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இனிப்பு கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலை சந்திப்பில் ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட புகாரிசிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 513 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 16,430 ஆக அதிகரித்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 16,430 ஆக அதிகரித்துள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 245 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,917 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,08,784 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,349-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,04,027ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 15,672 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 245 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,917 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 13,062 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 272 பேர் உயிரிழந்துள்ளனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 15,612 ஆக உயர்ந்துள்ளது.

    ×