என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிங்கப்பெருமாள் கோவிலில் கார் மோதி முதியவர் பலி

    சிங்கப்பெருமாள் கோவிலில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் புகாரி சிங் (வயது 65). இவர், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இனிப்பு கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலை சந்திப்பில் ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட புகாரிசிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×