என் மலர்
செங்கல்பட்டு
போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி அரசு ஆவணங்கள் தயாரித்த கணவன்-மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் சிலர் போலியாக அரசு ஆவணங்கள் தயாரித்து கொடுப்பதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் எம்.ஜி.நகர் ரெயில்வே ஸ்டேஷன் சாலையிலுள்ள ஜெராக்ஸ் கடையில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த கடையில் வேலை செய்யும் ஊரப்பாக்கத்தை சேர்ந்த நந்தினி, அவரது கணவர் பாலாஜி மற்றும் சிலர் போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி அரசு ஆவணங்களை தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஜெராக்ஸ் கடை மற்றும் நந்தினியின் வீட்டில் சோதனை செய்ததில் பத்திரப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் போலி பத்திரங்கள், போலி அரசு முத்திரைகள், போலி அரசு ஆவணங்கள் மற்றும் நிலம் சம்பந்தமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி அரசு முத்திரை மற்றும் போலி ஆவணங்கள் போன்றவற்றை வைத்திருந்ததாக ஊரப்பாக்கத்தை சேர்ந்த நந்தினி (வயது 29), அவரது கணவர் பாலாஜி (50) மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தண்டாயுதபாணி (51), தனசேகரன் (44), ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்து 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம், சட்ராஸ், மெய்யூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மீனவரான இவரது மகன் புகழேந்தி என்பவருக்கு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சீட்டு வாங்கி தருவதாக சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் எம்.எம்.ஆர்.மதன் (வயது 36) என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ரூ.45 லட்சம் வாங்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் மருத்துவச்சீட்டு வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சேகர் பலமுறை மதனிடம் பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். அந்த பணத்தை தராமல் மதன் ஏமாற்றி வந்துள்ளார். இந்த சம்பவத்தால் சேகரின் மகனான புகழேந்தி டாக்டருக்கு படிக்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் கடந்த 2018-ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த மோசடி தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 3 ஆண்டுகளாக மதனை தேடி வந்தனர். இந்நிலையில் மதன் சென்னை அடையாரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அங்கு சென்று தலைமறைவாக இருந்த மதனை நேற்று கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதி 15 நாள் கோர்ட்டு காவலில் மதனை அடைக்க உத்தரவிட்டதன் பேரில், செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
உத்திரமேரூரில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அஜித் என்கிற அஜித் குமார் (வயது 26). இவர் மீது உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் 14 வழக்குகள் உள்ளன. ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமன் (33) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அஜித் குமார் எம்.ஜி.ஆர். நகர் ரேஷன் கடை அருகே அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அரிவாளுடன் வந்த ராமன் அவரை சரமாரியாக தலை, முதுகு, கழுத்து போன்ற பகுதிகளில் வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்த அஜித் குமாரை சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஜித் குமாரின் தாயார் முனியம்மாள் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து ராமன், அவரது மனைவி சுமதி(26), தாயார் சந்திரா(70) ஆகியோரை கைது செய்தனர்.
வங்கி மேலாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்ற கார்த்திகேயன் தனது மோட்டார் சைக்கிளை வங்கியின் வெளியே நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
வங்கியில் இருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்மநபர் ஒருவர் கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் கார்த்திகேயன் கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு டவுன் போலீசார் மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்து 421 பேர் உயிரிழந்துள்ளனர். 1133 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 273 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்து 421 பேர் உயிரிழந்துள்ளனர். 1133 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 452-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 70 ஆயிரத்து 888 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1221 பேர் உயிரிழந்துள்ளனர். 343 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேளம்பாக்கம் அருகே கத்தி முனையில் செல்போன்கள் கொள்ளையடித்த வழக்கில் என்ஜினீயர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம்- கோவளம் சாலையில் செல்போன் கடை வைத்திருப்பவர் போலேராஜ். கடந்த 8-ந் தேதி இரவு 9 மணியளவில் ஊழியர்களுடன் போலேராஜ் கடையில் வியாபாரம் செய்து வந்தார்.
அப்போது செல்போன் வாங்குவது போல் வந்த 4 பேர் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து கடை உரிமையாளர் போலேராஜ் உள்ளிட்ட 3 பேரையும் அச்சுறுத்தி கடையில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்கள், கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் காஞ்சிபுரம் சரக காவல்துறை தலைவர் சத்திய பிரியா நேரடி பார்வையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, நெடுமாறன், தனசேகர் உள்ளிட்ட 3 தனிப்படை அமைத்து செல்போன் கடையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி மற்றும் பல்வேறு இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் முட்டுக்காடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபடும் போது கத்தி முனையில் செல்போன், பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பொன்னேரியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெகதீசன் (வயது 22), ஜெயபிரகாஷ் ( 24), ரஞ்சித்குமார் (24), மணலியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் ( 24) என்பது தெரியவந்தது. இவர்களில் ஜெகதீசன், ஜெயபிரகாஷ் ஆகியோர் என்ஜினீயர்கள் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 18 செல்போன்கள், ரூ.4 ஆயிரத்து 500, வீச்சரிவாள், பட்டா கத்தி, கேளம்பாக்கம், முத்தியால்பேட்டை போன்ற இடங்களில் திருடப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. போலீசார் அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரஞ்சித் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது 2 கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும், ரஞ்சித் குமார், மற்றும் விக்னேஷ் கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம்- கோவளம் சாலையில் செல்போன் கடை வைத்திருப்பவர் போலேராஜ். கடந்த 8-ந் தேதி இரவு 9 மணியளவில் ஊழியர்களுடன் போலேராஜ் கடையில் வியாபாரம் செய்து வந்தார்.
அப்போது செல்போன் வாங்குவது போல் வந்த 4 பேர் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து கடை உரிமையாளர் போலேராஜ் உள்ளிட்ட 3 பேரையும் அச்சுறுத்தி கடையில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்கள், கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் காஞ்சிபுரம் சரக காவல்துறை தலைவர் சத்திய பிரியா நேரடி பார்வையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, நெடுமாறன், தனசேகர் உள்ளிட்ட 3 தனிப்படை அமைத்து செல்போன் கடையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி மற்றும் பல்வேறு இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் முட்டுக்காடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபடும் போது கத்தி முனையில் செல்போன், பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பொன்னேரியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெகதீசன் (வயது 22), ஜெயபிரகாஷ் ( 24), ரஞ்சித்குமார் (24), மணலியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் ( 24) என்பது தெரியவந்தது. இவர்களில் ஜெகதீசன், ஜெயபிரகாஷ் ஆகியோர் என்ஜினீயர்கள் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 18 செல்போன்கள், ரூ.4 ஆயிரத்து 500, வீச்சரிவாள், பட்டா கத்தி, கேளம்பாக்கம், முத்தியால்பேட்டை போன்ற இடங்களில் திருடப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. போலீசார் அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரஞ்சித் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது 2 கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும், ரஞ்சித் குமார், மற்றும் விக்னேஷ் கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சுற்றுலாவுக்கு தடை ஒரு புறம் விதிக்கப்பட்டு இருந்தாலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்களின் வருகை அதிகம் காணப்பட்டது.
மாமல்லபுரம்:
கொரோனா 3-வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினமான நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் புராதன சின்னங்களை கண்டுகளிப்பதற்கும், கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூடுவதற்கும் தடை விதித்து இருந்தது. அதனால் முக்கிய புராதன சின்னங்களில் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன.
ஆனால் தடையை மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று மாமல்லபுரம் வந்திருந்ததை காண முடிந்தது. வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களின் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் ஏமாற்றம் அடைந்த பயணிகள் கம்பி வேலிகளுக்கு வெளியே தொலைவில் நின்று புராதன சின்னங்களை பார்த்து ரசித்துவிட்டு செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து ரசித்தனர்.
அதேபோல் பயணிகள் கடற்கரைக்கு செல்லாத வண்ணம் கடற்கரைக்கு செல்லும் பிரதான சாலையை தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டாலும் மாற்று பாதை வழியாக சென்று கடற்ரையில் பயணிகள் வருகை தந்ததையும் காண முடிந்தது. பலர் அங்குள்ள கடற்கரை கோவிலை ஒட்டியுள்ள பாறைகள் மீது செல்பி மோகத்தில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்ததையும் காண முடிந்தது. பல வாலிபர்கள் தடையை மீறி மதுபோதையில் கடலில் குளித்தனர். போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்து விரட்டியும் யாரும் அதை கண்டு கொள்ளாமல் மெத்தன போக்குடன் கடலில் குளித்து கொண்டிருந்தனர்.
புராதன சின்னங்கள் மூடப்பட்டிருந்ததாலும் நேற்று திரண்ட சுற்றுலா பயணிகள் மூலம் நடைபாதை கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சுற்றுலாவுக்கு தடை ஒரு புறம் விதிக்கப்பட்டு இருந்தாலும் மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா வாகனங்களின் வருகை அதிகம் காணப்பட்டது. இதனால் முக்கிய பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில் போக்குவரத்து போலீசார் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம் நகர பகுதிகளில் பயணித்த வாகனங்களை ஒழுங்குபடுத்தி ஒன்றன்பின் ஒன்றாக செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2414 பேர் உயிரிழந்துள்ளனர். 1193 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 116 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 608 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 1 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2414 பேர் உயிரிழந்துள்ளனர். 1193 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 248-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 70 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1215-ஆக உயர்ந்துள்ளது. 404 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பெரியார் தெருவை சேர்ந்தவர் நடராஜ் (வயது 47). அவர் திருமழிசையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக தோல் நோய் மற்றும் தீராத வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சையும் பெற்று வந்த நடராஜ் மனம் உடைந்து நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், லோகேஷ் (17) என்ற மகனும், ஹேமாவதி (13) என்ற மகளும் உள்ளனர். இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக பயிற்சி நிறுவன கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பணிகள் குறித்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலை வகித்தார்.
பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் முக்கியமாக உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் அளவு மற்றும் தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், நிலுவையிலுள்ள மனுக்கள் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மீதான காரணத்தை மனுதாரருக்கு தெரிவித்து உரிய முறையில் விளக்கம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட பட்டாக்களின்படி அதனை அளவீடு செய்து உரிய நபர்களுக்கு அந்த இடத்தை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உரிய கோப்புகள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து முழுமையாக பிரித்து வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.
புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனை நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வில் விவாதிக்கப்பட்டது.
நில மதிப்பு அதிகம் கொண்ட இந்த 2 மாவட்டங்களிலும், அரசு நிலங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட கலெக்டர் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், கருணாநிதி, அரவிந்த்ரமேஷ், சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் அரசு கூடுதல் தலைமைசெயலாளர் பனீந்திர ரெட்டி, நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், நில அளவை மற்றும் நிலவரிதிட்ட ஆணையர் டாக்டர்.டி.ஜி.வினய், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் உடல் 2½ மாதங்களுக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்டதால் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது 40). இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கடந்த மே மாதம் 19-ந்தேதி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மே மாதம் 22-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா தொற்றால் உயிரிழந்த அலமேலுவின் உடலை உறவினர்களிடம் கொடுக்க முடியாது. நாங்களே எரித்துவிடுவோம் என்று கூறி ஆஸ்பத்திரி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ஆஸ்பத்திரி சார்பில் அலமேலுவின் உடல் எரிக்கப்பட்டு விட்டதாக அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அலமேலுவின் உறவினர்களை தொடர்பு கொண்டு அலமேலுவின் உடல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. உடலை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அலமேலுவின் உறுவினர்கள் ஆஸ்பத்திரி அலுவலகத்தை முற்றுகையிட்டு டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அலமேலுவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தவறு செய்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதன் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அலமேலுவின் உடலை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அலமேலுவின் உடலை எரிக்க ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் முகத்தை பார்க்க ரூ.500 ஆஸ்பத்திரி ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.
கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் உடல் 2½ மாதங்களுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சமபவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேளம்பாக்கத்தில் செல்போன் கடையில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் வியாபாரியை மிரட்டி ரூ.4 லட்சம் செல்போன்களை பறித்து சென்றனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் கேளம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போலேராஜ் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வழக்கம் போல் கடையை மூடும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் போல் 4 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் நுழைந்தனர்.
அப்போது அவர்கள் செல்போன் வாங்குவது போல் விற்பனையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென உள்ளே இருந்தவாறு கடையின் கதவை மூடினர். பின்னர் அந்த கும்பல் பையில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை காட்டி செல்போன் கடை உரிமையாளர் போலேராஜ் உள்ளிட்ட 3 பேரையும் மிரட்ட தொடங்கினர்.
அதைத்தொடர்ந்து, அவர்களை கடையின் ஓரத்தில் அமரவைத்ததுடன், அவர்கள் கண்முன்னே ரூ.4 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 20 செல்போன்கள், கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் கத்திமுனையில் கடைக்காரர்களை மிரட்டி செல்போன் கொள்ளையடித்த சம்பவம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. கடை மூடும் நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கத்திமுனையில் செல்போன்களை அள்ளிச்செல்லும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தின் 50 மீட்டர் இடைவெளியில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதியில் பட்டாகத்தி முனையில் செல்போன் கடையில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேளம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவம் அதிக அளவில் அரங்கேறி வருவதால் பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.






