என் மலர்
செங்கல்பட்டு
திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 18-ந் தேதி திடீரென மாயமானார். திருக்கழுக்குன்றம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது கருமாரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான குமரேசன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். குமரேசனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் மார்க்கெட் வீதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நகைகடை உள்ளது. நேற்று மாலை அவர் கடையில் இல்லாத நேரத்தில் 3 பெண்கள் திருமணத்திற்கு நகை வாங்குவது போல் வந்தனர். அவர்களுக்கு நகைகளை கடையில் இருந்த ஊழியர்கள் காண்பித்தனர். சிறிது நேரம் நகையை பார்த்து விட்டு 3 பெண்களும் பில் போட்டு வைக்குமாறு கூறி வெளியே சென்று விட்டனர்.
ஊழியர்கள் நகைகளை சரிபார்த்த போது ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானது தெரியவந்தது. அதனை நகை வாங்குவது போல் கடைக்கு வந்த 3 பெண்களும் கொள்ளை அடித்துச்சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மார்கெட் பகுதி மற்றும் நகைக்கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து 3 பெண்களையும் தேடி வருகின்றனர்.
பம்மலில் இருந்து அனகாபுத்தூர் செல்லும் பிரதான சாலையில் நான்கு ஆவின் பால் பூத்துகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் அதன் உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மீண்டும் நேற்று காலையில் கடையை திறக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கடையின் பூட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, கல்லாவில் வைத்திருந்த பணம் ஐம்பதாயிரம் திருடு போய் இருந்தது தெரிய வந்தது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, மூன்று மர்மநபர்கள் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது.
இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 29). தனியார் வங்கியில் வாகன கடன் வழங்கும் பிரிவில் ஊழியராக பணி செய்து வந்தார்.
இவர் இரவு வங்கி வேலை சம்பந்தமாக நண்பர்களுடன் காரில் பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கூவத்தூர் அடுத்த சீக்கினாங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாபு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிந்தார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் அருகே பாலாற்றின் மீது இரண்டு மேம்பாலங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த பாலங்கள் சேதம் அடைந்தன.
மேலும் பாலத்தில் உள்ள இணைப்புகளும் ஏற்கனவே பழுதாகி இருந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் மேம்பாலத்தில் முதல் கட்டமாக கடந்த 7-ந் தேதி முதல் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
இதையடுத்து சென்னை- திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அருகே உள்ள மற்றொரு பாலத்தின் வழியாக திருப்பிவிடப்பட்டது. ஏற்கனவே அந்த பாலத்தின் வழியாக இயக்கப் பட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மாமண்டூர் அருகே மெய்யூர் வழியாக திருப்பி விடப்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றி வந்தன.
பிலாப்பூர், காவூர், காவிய தண்டலம், ஒரக்காட்டு பேட்டை மேம்பாலம் வழியாக பழத்தோட்டம் சென்று காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையை அடைந்து சென்னை நகருக்கு போக்குவரத்து இயக்கப்படுகின்றன.
பஸ், கார் மற்றும் பொதுவாகனங்கள் செல்ல ஒரு வழியும், கனரக வாகனங்கள் செல்ல மற்றொரு வழியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து திண்டிவனம் வழியாக வரும் அனைத்து கனரக வாகனங்களும் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள புக்கத்துறை அருகே இடதுபுறமாக திரும்பி நெல்வாய்கூட்டுச்சாலை, வளத்தோடு, ஆலஞ்சேரி, குன்னவாக்கம், மதூர், அருங்குன்றம், திரும்புக்கூடல் மேம்பாலம் வழியாக பழசீவரம் அருகே காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் இணைகிறது.
நெல்வாய்கூட்டுச் சாலையில் தொடங்கி பழையசீவரம் வரையிலான சாலைகள் குறுகியது என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பராமரிப்பு பணி நடைபெற்ற மேம்பாலத்தில் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது. நேற்று மாலை சீரமைப்பு பணி நடந்த பாலத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இன்று மாலை அந்த பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்து போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பாலத்தின் வழியாக சென்னை - திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் இயக்கப்பட உள்ளது.
எனினும் அருகே உள்ள 2-வது பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கப்பட இருக்கிறது. எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சென்னை மார்க்கமாக வரும் வாகனங்கள் பழைய முறையிலேயேவரும்.
2-வது பாலம் பராமரிப்பு பணி மார்ச் 20-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது. இதன் பின்னரே 2-வது பாலத்திலும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இதன் பிறகு தான் போக்குவரத்து சீராகும்.
தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் 70 வார்டுகளில் அ.தி.மு.க. 8 இடங்களில் தான் வெற்றிபெற்றது. இந்த கட்சியில் வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தாம்பரம் 10-வது வார்டு பம்மலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு என்கிற வெங்கடேசன் பம்மல் நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர். அனைவராலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க் கப்பட்ட இவர் 1000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதேபோல் அனகாபுத்தூர் நகராட்சி முன்னாள் தலைவராக இருந்த அனகாபுத்தூர் வேலாயுதம் என்பவரும் தோல்வி அடைந்தார்.
தாம்பரத்தில் முன்னாள் துணைத்தலைவர் கோபியும் தோல்வி அடைந்துவிட்டார். பீர்க்கங்கரணை பேரூராட்சி முன்னாள் தலைவர் சம்பத் குமாரும் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
40-வது வார்டு அ.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி செயலாளர் சாந்தகுமார், செம்பாக்கம் நகராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் இவரும் தோல்வி அடைந்துவிட்டார். சிட்லபாக்கம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவரான மோகன் என்பவரும் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி தனம் 13-வது வார்டிலும், அவரது மகன் ஜெயபிரகாஷ் 22-வது வார்டிலும் போட்டியிட்டனர். இருவருமே தோல்வி அடைந்துவிட்டனர். ஜெயபிரகாஷ் பல்லாவரம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். இவர்களது தோல்வி அ.தி.மு.க.வில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி பீர்க்கங்கரணை வார்டு 59-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் கங்காதேவி. இவர் அ.தி.மு.க.வில் மாவட்ட மகளிர் அணி செயலாளராக பதவி வகித்தார். இவர் அப்பகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் தேர்தலுக்கு முன்பு தனக்கு சீட் கிடைக்காது என தெரிந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து போட்டியிட்டார். ஆனாலும் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் அண்ணன் ஜோசப் அண்ணாதுரை 17-வது வார்டில் போட்டியிட்டு 3,731 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் டி.காமராஜ், 49-வது வார்டில் போட்டியிட்டு 2,759 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் மைத்துனர் காமராஜ் 30-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் அவரது உறவினர் ரமாதேவி என்பவரும் வெற்றிபெற்றுள்ளார்.
தி.மு.க.வில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிகாரப்பூர்வ கட்சி வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கிய கிரிஜா சந்திரன் என்பவர் 39-வது வார்டில் சுயேட்சையாக வெற்றிபெற்றுள்ளார். இதேபோல் இவரது மகன் ஜெயபிரதிப் சங்கரன் 40-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
தி.மு.க.வில் சீட் கிடைக்காத தாய்-மகன் இருவரும் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்லாவரத்தில் 20-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்துக்குமார் என்பவர் போட்டியிட்டார். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இவர் 165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.






