என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
கல்பாக்கம் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து கொள்ளை- 3 பெண்கள் துணிகரம்
கல்பாக்கம் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் மார்க்கெட் வீதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நகைகடை உள்ளது. நேற்று மாலை அவர் கடையில் இல்லாத நேரத்தில் 3 பெண்கள் திருமணத்திற்கு நகை வாங்குவது போல் வந்தனர். அவர்களுக்கு நகைகளை கடையில் இருந்த ஊழியர்கள் காண்பித்தனர். சிறிது நேரம் நகையை பார்த்து விட்டு 3 பெண்களும் பில் போட்டு வைக்குமாறு கூறி வெளியே சென்று விட்டனர்.
ஊழியர்கள் நகைகளை சரிபார்த்த போது ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானது தெரியவந்தது. அதனை நகை வாங்குவது போல் கடைக்கு வந்த 3 பெண்களும் கொள்ளை அடித்துச்சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மார்கெட் பகுதி மற்றும் நகைக்கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து 3 பெண்களையும் தேடி வருகின்றனர்.
Next Story






