என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாலாற்று பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் பார்வையிட்ட போது எடுத்த படம்.
பாலாற்று மேம்பாலத்தில் இன்று மாலை முதல் போக்குவரத்துக்கு அனுமதி
பராமரிப்பு பணி நடைபெற்ற மேம்பாலத்தில் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது. நேற்று மாலை சீரமைப்பு பணி நடந்த பாலத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் அருகே பாலாற்றின் மீது இரண்டு மேம்பாலங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த பாலங்கள் சேதம் அடைந்தன.
மேலும் பாலத்தில் உள்ள இணைப்புகளும் ஏற்கனவே பழுதாகி இருந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் மேம்பாலத்தில் முதல் கட்டமாக கடந்த 7-ந் தேதி முதல் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
இதையடுத்து சென்னை- திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அருகே உள்ள மற்றொரு பாலத்தின் வழியாக திருப்பிவிடப்பட்டது. ஏற்கனவே அந்த பாலத்தின் வழியாக இயக்கப் பட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மாமண்டூர் அருகே மெய்யூர் வழியாக திருப்பி விடப்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றி வந்தன.
பிலாப்பூர், காவூர், காவிய தண்டலம், ஒரக்காட்டு பேட்டை மேம்பாலம் வழியாக பழத்தோட்டம் சென்று காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையை அடைந்து சென்னை நகருக்கு போக்குவரத்து இயக்கப்படுகின்றன.
பஸ், கார் மற்றும் பொதுவாகனங்கள் செல்ல ஒரு வழியும், கனரக வாகனங்கள் செல்ல மற்றொரு வழியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து திண்டிவனம் வழியாக வரும் அனைத்து கனரக வாகனங்களும் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள புக்கத்துறை அருகே இடதுபுறமாக திரும்பி நெல்வாய்கூட்டுச்சாலை, வளத்தோடு, ஆலஞ்சேரி, குன்னவாக்கம், மதூர், அருங்குன்றம், திரும்புக்கூடல் மேம்பாலம் வழியாக பழசீவரம் அருகே காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் இணைகிறது.
நெல்வாய்கூட்டுச் சாலையில் தொடங்கி பழையசீவரம் வரையிலான சாலைகள் குறுகியது என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பராமரிப்பு பணி நடைபெற்ற மேம்பாலத்தில் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது. நேற்று மாலை சீரமைப்பு பணி நடந்த பாலத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இன்று மாலை அந்த பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்து போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பாலத்தின் வழியாக சென்னை - திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் இயக்கப்பட உள்ளது.
எனினும் அருகே உள்ள 2-வது பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கப்பட இருக்கிறது. எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சென்னை மார்க்கமாக வரும் வாகனங்கள் பழைய முறையிலேயேவரும்.
2-வது பாலம் பராமரிப்பு பணி மார்ச் 20-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது. இதன் பின்னரே 2-வது பாலத்திலும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இதன் பிறகு தான் போக்குவரத்து சீராகும்.

Next Story