என் மலர்
செங்கல்பட்டு
- கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார்.
- கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதுராந்தகம்:
மதுராந்தகம் படாளம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் 20-வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கற்பக விநாயகா கல்வி குழுமத்தின் நிறுவனரும் தமிழக சட்டம், நீதித்துறை மற்றும் சிறை துறை அமைச்சருமான எஸ். ரகுபதி தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர். அண்ணாமலை ரகுபதி முன்னிலை வகித்தார்.
முன்னதாக கல்லூரி இயக்குனர் டாக்டர். மீனாட்சி அண்ணாமலை வரவேற்றார். கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் திரைப்பட நடிகரும், பின்னணி பாட கருமான ஜி.வி. பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரிக்கு விடுமுறை எடுக்காது வருகை தந்த மாணவர்கள், கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கல்லூரி டீன் சுப்பாராஜ் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- ஹெலிபேடு அமைக்கப்படலாம் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- வெளிநாட்டு தலைவர்கள் பலர் மாமல்லபுரம் வர உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் ஜூலை 28-ந் தேதி தொடங்கும் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்ந்து ஆகஸ்ட்டு 10 -ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நாட்களில் வெவ்வேறு வெளிநாட்டு தலைவர்கள் பலர் மாமல்லபுரம் வர உள்ளனர். இவர்களது பாதுகாப்பு கருதி அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் அதிக தூரம் தரைவழி பயணத்தை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விமான நிலையம் மற்றும் தாம்பரம் விமானப்படை தளங்களில் இருந்து, நேரடியாக மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் வான்வழி தடங்கள் எப்படி, அதன் இறங்கு தள வசதிகள் எங்கெல்லாம் உள்ளது என்று செங்கல்பட்டு சப்-கலெக்டர் சஜ்ஜீவனா, டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் உள்ளிட்டோர் திருவிடந்தை, கோவளம், பூஞ்சேரி பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
கோவளத்தில் உள்ள தனியார் வான்வழி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தளம், திருவிடந்தையில் 2018-ம் ஆண்டு நடந்த ராணுவ கண்காட்சியின் போது பிரதமர் மோடி வந்து இறங்கிய தளம், பூஞ்சேரி அடுக்கு மாடி குடியிருப்பு தளம் போன்ற பகுதிகளில் ஹெலிகாப்டர் வந்திரங்க 'ஹெலிபேடு' அமைக்கப்படலாம் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தொடர் கொள்ளை.
- கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனார்.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட வீரமுத்து, தமிழ்ச் செல்வன் மற்றும் 16 வயதான சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போதையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் இருந்து பித்தளை பூஜைப் பொருட்கள், 2 லேப்-டாப், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பெருமாட்டுநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு விஷ்ணுப்பிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 50), இவர் பெருமாட்டுநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது கணவர், குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரிக்கு சென்று குழந்தைகளுக்கு தேவையான பள்ளி உபகரண பொருட்களை வாங்கினார். பின்னர் இவரது கணவர், குழந்தைகளை மோட்டார் சைக்கிள்களில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். லலிதா மட்டும் ஷேர் ஆட்டோ ஏறுவதற்காக சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷன் ரோடு சந்திப்பு அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் லலிதா கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க செயினை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் லலிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை விரும்புவதை நாம் அறிவோம்.
- பதநீரை பனைஓலை பட்டையில் ஆர்வத்துடன் வாங்கி குடிக்கும் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை விரும்புவதை நாம் அறிவோம்., தற்போது "பதநீரை" பனைஓலை பட்டையில் விரும்பி வாங்கி குடிக்கும் பழக்கமும் அவர்களிடம் அதிகரித்து வருகிறது. மாமல்லபுரம் ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு பானமாக வைக்கப்பட்ட பதநீரை பனைஓலை பட்டையில் ஆர்வத்துடன் வாங்கி குடிக்கும் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் ஜோஸ், ராய்டு ஆகியோரை படத்தில் கானலாம்.
- காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியக்கூடாது என்பதால் அவர்கள் நகை-பணத்தை இழந்தது குறித்து வெளியே கூறாமல் இருந்தனர்.
- சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பறிக்கும் நகைகளை அவன் தாம்பரம் மற்றும் கடலூரில் உள்ள அடகு கடையில் விற்று உள்ளான்.
வண்டலூர்:
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் இளம் காதல் ஜோடிகள் தனிமையில் இருப்பது தொடர்ந்து வருகிறது.
அவர்களிடம் மர்ம வாலிபர் ஒருவர் போலீஸ் என்று கூறி மிரட்டி தொடர்ந்து நகை-பணம் பறிக்கும் சம்பவம் நடந்து வந்தது.
காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியக்கூடாது என்பதால் அவர்கள் நகை-பணத்தை இழந்தது குறித்து வெளியே கூறாமல் இருந்தனர். மேலும் இதில் பெரும்பாலனோர் கள்ளக்காதல் ஜோடிகளாக இருந்ததால் அவர்கள் இதுபற்றி வெளியே சொல்லாமல் மறைத்தனர்.
இந்த நிலையில் காதல் ஜோடிகளிடம் போலீஸ்போல் நடித்து நகை-பணம் பறிக்கும் மர்ம வாலிபர் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த வாலிபர் குறித்து தனிப்படை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சிவராமன் (வயது39) என்பவன் காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனது செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போது நன்மங்கலத்தில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று கொள்ளையன் சிவராமனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
கைதான சிவராமன், கடலூரில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் கூட்டாளிகளுடன் வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு மீண்டும் கடலூருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக அவன் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான்.
அவன் மீது மாமல்லபுரம், தேவனாம்பட்டினம், நெய்வேலி, கள்ளக்குறிச்சி, என பல்வேறு போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு மட்டும் சுமார் 41 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பறிக்கும் நகைகளை அவன் தாம்பரம் மற்றும் கடலூரில் உள்ள அடகு கடையில் விற்று உள்ளான்.
அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சிவராமன் பாண்டிச்சேரி, பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைஎடுத்து தங்கி அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளிக்கரணை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கி சிறைக்குச் சென்ற சிவராமன் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி அன்று சிறையில் இருந்து வெளியில் வந்தான். பின்னரும் அவன் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்து இருக்கிறான்.
வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஏப்ரல் 19-ந்தேதி அன்று காரில் இருந்த கள்ளக்காதல் ஜோடியை மிரட்டி ரூ.5 ஆயிரம், 11 பவுன் நகையும், மே 19-ந் தேதி வண்டலூர் பகுதியில் காரில் நெருக்கமாக இருந்த மற்றொரு கள்ளக்காதல் ஜோடியை வீடியோ எடுத்து அவர்களிடம் போலீஸ் என்று கூறி மிரட்டி நகைகளை பறித்து சென்று இருப்பதும் தெரியவந்தது.
கைதான சிவராமன் டிப்-டாப் உடையணிந்து மிரட்டும் தொணியில் பேசுவதால் அவர் போலீசாக இருக்கலாம் என பயந்து போன காதல் ஜோடிகள் நகை-பணத்தை பறிகொடுத்து உள்ளனர்.
அவனிடம் இருந்து 25 பவுன் நகை, ரூ. 5லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவனது கூட்டாளிகள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொள்ளையன் சிவராமனிடம் நகை-பணத்தை இழந்த காதல் ஜோடிகளின் விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.
- இந்து சமய அறநிலையத்துறை தனி செயல் அலுவலர் நியமித்து மாமல்லபுரத்தில் நிர்வாகம் செய்து வருகிறது.
- வருவாயில் பல பெருமாள் கோவில்களுக்கு ஆன்மீக உற்சவ சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம்:
நெம்மேலியில் கடற்கரையை ஒட்டி 5 ஏக்கர் நிலத்தில் ஆளவந்தாரின் ஜீவசமாதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலி மற்றும் சுற்று வட்டார பகுதியில் 1,000 ஏக்கருக்கும் மேல் உள்ளது.
பல நூறு கோடி ரூபாய் சொத்துடைய ஆளவந்தார் அறக்கட்டளையை, இந்து சமய அறநிலையத்துறை தனி செயல் அலுவலர் நியமித்து மாமல்லபுரத்தில் நிர்வாகம் செய்து வருகிறது. இதன் வருவாயில் பல பெருமாள் கோவில்களுக்கு ஆன்மீக உற்சவ சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இப்பகுதியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் வைணவ திவ்விய பிரபந்த பாடசாலை கட்டுவதற்கு கடந்த 10-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதே வளாகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை ஆன்மீக சேவைக்கு எழுதி வைத்த அறக்கட்டளை நிறுவனர் ஆளவந்தாரின் கோவில் கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது.
மேலும் அந்த வளாகப் பகுதி முழுவதும் சீரழிந்து கிடக்கிறது. அங்குள்ள தீர்த்த குளம் பாம்புகளின் சரணாலயமாக மாறியுள்ளது.
இதனை முதலில் சரி செய்ய திட்டமிடாமல் பஸ் நிறுத்தமோ, ஆள் நடமாட்டமோ, எந்த வசதியும் இல்லாத, அடர்ந்த காட்டுப்பகுதியில் "வைணவ திவ்விய பிரபந்த பாடசாலை" கட்டிடம் கட்ட, அறக்கட்டளை நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவது ஏன்? என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.
- செங்கல்பட்டை கடந்து தாம்பரத்தை நோக்கி வாகனங்கள் அணிவகுத்து வந்தன.
- வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதி அடைந்தனர்.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் அனைவரும் நேற்று ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்பினர்.
இதேபோல் 2 நாள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் நேற்று சென்னை திரும்பினர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து கார்கள், பஸ்கள் என வாகனங்களில் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்தனர்.
இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து வந்தன. இன்று அதிகாலை வாகனங்கள்அனைத்தும் ஒரே நேரத்தில் சென்னை எல்லைக்குள் நுழைந்ததால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவடியை கடக்க வாகனங்களுக்கு சுமார் 15 நிமிடம் வரை ஆனது. செங்கல்பட்டை கடந்து தாம்பரத்தை நோக்கி வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயான 35 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வாகனங்களுக்கு இரண்டு மணிநேரம் ஆனது. ஒருசிலர் நெல்லிக்குப்பம் வழியாக செல்ல முயற்சித்தபோதிலும் கூடுவாஞ்சேரி அருகே நெரிசலில் சிக்கிக்கொண்டனர். இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு- தாம்பரம் சாலையில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வாகன போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது. காலை 7 மணிக்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது. தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்கு வரத்து போலீசார் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.
- மின்னல் வேகத்தில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் சீறிப் பாய்ந்தன.
- வாலிபர் ஒருவர் அதிவேகத்தில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பெண் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
தாம்பரம்:
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை, மெரினா கடற்கரை சாலைகளில் வார இறுதி நாட்களில் பைக்ரேஸ் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகள் எடுத்தாலும் பைக்ரேஸ் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த நிலையில் பைக்ரேஸ் வாலிபர்களால் அப்பாவி பெண் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருடன் மற்றொரு பெண் ஒருவரும் தனியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி பேசியபடி சென்றதாக தெரிகிறது.
அப்போது அவ்வழியே மின்னல் வேகத்தில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் சீறிப் பாய்ந்தன. சில வாலிபர்கள் பயமுறுத்தும்படி பைக்ரேசில் வந்தனர். இதி்ல் வாலிபர் ஒருவர் அதிவேகத்தில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பெண் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது அதிவேகத்தில் மோதியது.
இதில் பல அடிதூரம் தூக்கி வீசப்பட்ட அந்த பெண் சாலையோர தடுப்பில் மோதி விழுந்தார். அந்த வேகத்தில் அவர் அணிந்து இருந்த ஹெல்மெட்டும் கழன்று ஓடியது.
இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவரது கால் எலும்பும் முறிந்து மயக்கம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை கண்டு பலியான பெண்ணுடன் வந்த மற்றொரு பெண் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் முடிச்சூரை சேர்ந்த விஸ்வா என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்த அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
விஸ்வா தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக்ரேசில் ஈடுபட்ட போது இந்த விபரீதம் நடந்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரேசில் ஈடுபட்ட மற்ற நண்பர்கள் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. பலியான பெண் வைத்திருந்த கைப்பையில் போலீசார் கேண்டீன் கார்டு ஒன்று இருந்தது.
அதில் காவல் ஆய்வாளர் செல்வக்குமாரி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே உயிரிழந்தவர் போலீஸ் அதிகாரி செல்வக்குமாரியா? அல்லது வேறு யாராவதா? என்று விசாரித்து வருகிறார்கள்.
பைக் ரேசால் அநியாயமாக பெண் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் நடைபெறும்.
- சுடர் ஓட்டம் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து இறுதியாக போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வந்தடையும்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக தமிழ் நாட்டில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடக்கிறது.
இதற்கிடையே போட்டியையொட்டி சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இனி ஒவ்வொரு முறையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் நடைபெறும்.
இந்த சுடர் ஓட்டம் செஸ் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கி போட்டி நடைபெறும் நகரத்தை அடைவதற்கு முன்பு அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கும். இந்த முறை நேரமின்மை காரணமாக சுடர் ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
சுடர் பயணிக்கும் பாதை மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சுடர் ஓட்டம் வருகிற 19-ந்தேதி டெல்லியில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டத்தை 19-ந்தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த சுடர் ஓட்டத்தில் பங்கேற்க வருமாறு தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக் ஞானந்தா, சர்வதேச மாஸ்டர் ஆர்.வைஷாலி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போட்டி அமைப்பு குழு இயக்குனர் பரத்சிங் சவுகான் இந்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.
இந்த சுடர் ஓட்டம் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து இறுதியாக போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வந்தடையும்.
- கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சுமார் 88.72 ஏக்கர் பரப்பளவில் ரூ.355 கோடி மதிப்பீட்டில் சி.எம்.டி.ஏ. கட்டுப்பாட்டில் கட்டப்பட்டு வருகிறது.
- மாமல்லபுரத்திலும் ரூ.16 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
வண்டலூர்:
சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், முத்துசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சுமார் 88.72 ஏக்கர் பரப்பளவில் ரூ.355 கோடி மதிப்பீட்டில் சி.எம்.டி.ஏ. கட்டுப்பாட்டில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் செங்கல்பட்டில் 11 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மாமல்லபுரத்திலும் ரூ.16 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் திறக்கப்படும் அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த முனையம் கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உருவாக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து, திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. இது ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஆகும். இங்கிருந்து புறநகர் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சதுரங்கபட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பிணத்தை மீட்டு பார்த்தபோது அடையாளம் தெரியாத 70வயது மூதாட்டியின் உடல் என தெரியவந்தது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தை ஒட்டியுள்ள பக்கிங்காம் ஓரத்தில் உள்ள இறால் பண்ணை அருகில், பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சதுரங்கபட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது., போலீசார் பிணத்தை மீட்டு பார்த்தபோது அடையாளம் தெரியாத 70வயது மூதாட்டியின் உடல் என தெரியவந்தது. யார் இவர்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.






