என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செப்டம்பர் மாதம் திறக்கப்படும்- ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி தகவல்
    X

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செப்டம்பர் மாதம் திறக்கப்படும்- ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி தகவல்

    • கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சுமார் 88.72 ஏக்கர் பரப்பளவில் ரூ.355 கோடி மதிப்பீட்டில் சி.எம்.டி.ஏ. கட்டுப்பாட்டில் கட்டப்பட்டு வருகிறது.
    • மாமல்லபுரத்திலும் ரூ.16 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், முத்துசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சுமார் 88.72 ஏக்கர் பரப்பளவில் ரூ.355 கோடி மதிப்பீட்டில் சி.எம்.டி.ஏ. கட்டுப்பாட்டில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் செங்கல்பட்டில் 11 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மாமல்லபுரத்திலும் ரூ.16 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் திறக்கப்படும் அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

    இந்த முனையம் கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உருவாக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து, திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. இது ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஆகும். இங்கிருந்து புறநகர் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×