என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து மறைமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் அடுத்த பொத்தேரி குமரன் முதல் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். பொத்தேரி அண்ணா தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    காலையில் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து மறைமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம வாலிபர்கள் வழிமறித்து செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.
    • படாளம் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த படாளம் குமாரவாடி ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் செல்வம் (35) என்பவர் சென்று கொண்டிருந்தார். அவரை 2 மர்ம வாலிபர்கள் வழிமறித்து செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து செல்வம் படாளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் உத்திரமேரூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் குமாரவாடி ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வம் என்பவரிடம் செல்போன் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

    மேலும் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை சேர்ந்த அகஸ்டின் (24), அதே ஊரை சேர்ந்த பூபாலன் (27) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து படாளம் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஊரப்பாக்கத்தில் சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    ஊரப்பாக்கம் அடுத்த நேதாஜி அய்யஞ்சேரியில் வசித்து வருபவர் நிரஜ் பூசன். இவரது மகள் ஷிவானி தனுக்(வயது14). ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார்.

    அவர் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவி ஷிவானி தனுக், வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று மயங்கி விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஷிவானி தனுக் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டுமுடித்திருந்தால் போதுமானது.
    • செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2022 உடன் தொடங்கும் காலாண்டிற்குபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    பத்தாம்வகுப்பு (தோல்வி), பத்தாம்வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும்மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத்தொடர்ந்து புதுப்பித்து, 30.06.2022 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டுமுடித்திருந்தால் போதுமானது.

    பொறியியல், மருத்துவம், கால்நடைமருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி நர்சிங் போன்ற தொழிற்பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகைதிட்டத்தின்கீழ்பயன்பெறமுடியாது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம்ரூ.72,ஆயிரத்துக்குக்குமிகாமல் இருத்தல்வேண்டும். இந்த. உதவித்தொகையினைப். பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட. மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.06.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதரஇனத்தைசார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

    உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெறவிரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் செப்டம்பர்10-ம்தேதி வரை அனைத்து அலுவலகவேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில், அனைத்து. அசல்கல்விசான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவக்கி புத்தகத்துடன் நேரில் ஆஜராகிசமர்ப்பிக்கலாம் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.

    • நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • ரிஷப தீர்த்தத்தில் நீராடல், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.

    மாமல்லபுரம்

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆனி மாத உத்திர திருமஞ்சன உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து நடராஜருக்கு அபிஷேகமும், பின்னர் வளாகத்தில் உள்ள ரிஷப தீர்த்தத்தில் நீராடல், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.

    நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஏற்கனவே சாலையில் நாற்று நடும் போராட்டம்.
    • சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கூடுவாஞ்சேரி:

    ஊரப்பாக்கம் அருகே உள்ளது நல்லம்பாக்கம். ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் 14 கிலோ மீட்டர் தூரம்கொண்டது. இச்சாலை மாநில ஊரக நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதில் காட்டூர் முதல் பெரிய அருங்கால் வரையில் 700 மீட்டரும், இதேபோல் சின்ன அருங்கால் முதல் கீரப்பாக்கத்தில் உள்ள தேசிய எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் வரை உள்ள 300 மீட்டர் சாலையும், நல்லம்பாக்கம் முதல் நல்லம்பாக்கம் கூட்டுரோடு வரை 2 கிலோ மீட்டர் சாலையும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 12 அடி தார் சாலை அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் மற்றும் ஊனமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிரஷர்களுக்கு சென்று வரும் கனரக வாகனங்களால் இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஏற்கனவே சாலையில் நாற்று நடும் போராட்டம், அங்கப்பிரதட்சணப் போராட்டம், மண் சோறு சாப்பிடும் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை சாலையை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை.

    எனவே உடனடியாக சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலை குண்டும், குழியுமாக காட்சிஅளிக்கிறது. இதனால் அவ்வழியே அரசு பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் சரிவர இயக்கப்படுவது இல்லை. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தியும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

    இதனால் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அன்றாட வேலைக்கு சென்று வருவோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலையை சீரமைக்க வனத்துறை சார்பில் அனுமதி வழங்க தயாராக உள்ளோம். ஆனால் அதற்கான கருத்துருக்களை தயாரித்து எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை கூறிஉள்ளோம்.

    ஆனால் அதற்கான கோப்புகளை இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் எங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை என்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

    • கார் வந்ததும் முன்பதிவுக்கான ஓ.டி.பி. எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இந்த மோதலில் உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர்:

    கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரில் வசித்து வந்தவர் உமேந்தர்(வயது33). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் உமேந்தர் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். மாலையில் அவர்கள் மாமல்லபுரம் சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக வாடகை காரை ஓலா அப் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர்.

    வணிக வளாகம் முன்பு கார் வந்ததும் முன்பதிவுக்கான ஓ.டி.பி. எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலில் உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான ரவியை கைது செய்தனர்.

    இவரது சொந்த ஊர் சேலம் ஆத்தூர் ஆகும். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    உமேந்தர் தன்னுடன் வந்த மனைவியின் அக்காள் தேவிப்பிரியாவின் செல்போனில் இருந்து காரை முன்பதிவு செய்து இருந்தார். காரில் அனைவரும் ஏறியதும் டிரைவர் ரவி ஓ.டி.பி எண்ணை கேட்டு அவசரப்படுத்தினார்.

    அப்போது உமேந்தர் தனது செல்போனில் ஓ.டி.பி எண்ணை தேடி தடுமாறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த டிரைவர் ரவி கடுமையான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் சவாரியை கேன்சல் செய்யும்படி கூறிவிட்டு காரில் இருந்து இறங்கினர். அப்போது காரின் கதவை உமேந்தர் வேகமாக மூடியதாக கூறப்படுகிறது.

    இதனால் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். உமேந்தர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலால் தாக்க முயன்றபோது தடுத்த டிரைவர் ரவி தனது கையில் இருந்த செல்போனால் அவரது தலையில் காது ஓரத்தில் பலமாக குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த உமேந்தர் கீழே விழுந்ததும் அவரது மார்பில் பலமுறை எட்டி உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த உமேந்தர் இறந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    மனைவி, குழந்தைகள் கண்முன்பே உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதனை கண்டு அவர்கள் துடித்து போய் உள்ளனர்.

    சாதாரண வாக்குவாதத்தில் ஆத்திரம் கண்ணை மறைத்ததால் இந்த கொலை நடந்து உள்ளது. இதனால் என்ஜினீயரின் குடும்பமே நிலைகுலைந்து போய் இருக்கிறது.

    • திருவண்ணாமலை மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை கொத்தனார்.
    • கணவன்-மனைவி இருவரும் மேடவாக்கம் அடுத்த வேங்கை வாசலில் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    திருவண்ணாமலை மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை(வயது45). கொத்தனார். இவரது மனைவி காமாட்சி(35). இவர்கள் குடும்பத்துடன் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம், விநாயக புரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் மேடவாக்கம் அடுத்த வேங்கை வாசலில் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    கண்டிகை கீரப்பாக்கம் செல்லும் சாலை வந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த காமாட்சி மீது லாரி ஏறி இறங்கியது. அவரது கணவர் சின்னத்துரை படுகாயம்அடைந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற பொது மக்கள் உயிருக்குபோராடிய 2 பேரையும் மீட்டு ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக இறந்தார். சின்னத்துரைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பொது மக்கள் விரட்டிச்சென்று மேட்டுப்பாளையம் கிராமத்தில் மடக்கிப் பிடித்தனர். மேலும் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக மேலக்கோட்டையூரை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் குமார்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது45). கொத்தனார். இவர் இன்று காலை காமராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையின் மேல் தளத்தில் விளம்பர பேனரை வைக்க முயன்றார். அப்போது அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் விளம்பர பேனர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் குமார் பலியானார். உடன் இருந்த மேலும் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டி தொடங்குகிறது.
    • மாமல்லபுரம் புதுபொலிவுடன் காட்சியளிக்க தொடங்கி உள்ளது. இது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி தொடங்குகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    போட்டியில் கலந்து கொள்ள 188 நாடுகளில் இருந்து வெளிநாட்டு செஸ் வீரர்கள் உள்பட 2,500 பேர் வர உள்ளனர். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களையும் சுற்றிப் பார்க்கிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரம் நகரம் புதுப்பொலிவு பெரும் வகையில் பணிகள் நடந்து வருகின்றது. சுவர், பூங்கா, சிற்பங்கள், கடைவீதி, கோயில், குளம், சாலை, நுழைவு வாயில் என அனைத்து பகுதிகளையும் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    பூங்காக்களில் நீர் அலங்காரம், சுவர்களில் தமிழ் பாரம்பரிய, வரலாற்று, சரித்திரங்களை நினைவு படுத்தும் வகையில் இயற்கையுடன் இணைத்து தத்ரூபமாக வண்ண ஓவியங்கள் படங்கள் வரையப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர் சாலையோரம் செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர், சின்னங்கள் வைக்கப்படுகிறது. சாலையின் நடுவே பலவகை அலங்கார செடிகள் வைக்கப்பட்டு வருகிறது. சாலையோர விதிமுறை குறியீடுகள் போர்டுகள் அனைத்தும், வெளிநாடுகளில் இருப்பது போன்று மாற்றப்பட்டு வருகிறது. இதனால் மாமல்லபுரம் புதுபொலிவுடன் காட்சியளிக்க தொடங்கி உள்ளது. இது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

    • திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் மற்றும் அவரது மனைவி அபிராமி.
    • கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு பண்ணை உள்ளது.

    இங்கு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் மற்றும் அவரது மனைவி அபிராமி(வயது30) ஆகியோர் 3 குழந்தைகளுடன் தங்கி மாந்தோப்பை பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாந்தோப்புக்கு அருகே உள்ள நிலத்தில் முள்செடிகளை ஜே.சி.பி.எந்திரத்தால் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது அங்கிருந்த தென்னை மரம் ஒன்றை அகற்ற முயன்றனர்.

    இதனை அபிராமி அருகே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். ஜே.சி.பி எந்திரம் தென்னை மரத்தை அகற்றும் போது திடீரென அருகே இருந்த மின் வயர்கள் மீது சாய்ந்தது.

    இதில் அங்கிருந்த சிமெண்டால் ஆன மின்கம்பம் இரண்டாக முறிந்து அருகில் நின்று கொண்டிருந்த அபிராமி மீது விழுந்தது. மேலும் மினி வயர்களும் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

    மின்கம்பத்தின அடியில் சிக்கிய அபிராமி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கூடுவாஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வினோத்குமார் கடை பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
    • கைதானவர்கள் திருத்தேரி பகுதியில் உள்ள கடையில் செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    வண்டலூர்:

    சிங்கப்பெருமாள் கோவில் அடுத்துள்ள திருத்தேரி, பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் வினோத்குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடை பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கோயம்பேடு அருகே உள்ள கடையில் திருட்டு செல்போன்களை விற்க முயன்ற வியாசர்பாடியை சேர்ந்த அஜித் , மூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஆதி பகவான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருத்தேரி பகுதியில் உள்ள கடையில் செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    ×