என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

படாளம் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
- மர்ம வாலிபர்கள் வழிமறித்து செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.
- படாளம் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த படாளம் குமாரவாடி ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் செல்வம் (35) என்பவர் சென்று கொண்டிருந்தார். அவரை 2 மர்ம வாலிபர்கள் வழிமறித்து செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து செல்வம் படாளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் உத்திரமேரூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் குமாரவாடி ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வம் என்பவரிடம் செல்போன் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை சேர்ந்த அகஸ்டின் (24), அதே ஊரை சேர்ந்த பூபாலன் (27) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து படாளம் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






